¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
தொட்டு விடும் தூரம்! - cover

தொட்டு விடும் தூரம்!

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

ராகுல் காலையில் தாமதமாக எழுந்தான். குளித்து விட்டு உடை மாற்ற, டெலிபோன் ஒலித்தது.எடுத்தான்.“ராகுல்! இப்ப மணி என்ன?”“குட்மார்னிங் மேம்! எட்டரை!”“ஒன்பது மணிக்கு போர்ட் மீட்டிங்! இன்னும் நீங்க வீட்டை விட்டே புறப்படலை!”குரலில் அதட்டல் இருந்தது.“வந்துட்டே இருக்கேன் மேம்!”அதை மறந்துவிட்ட ராகுல், பதட்டமாக புறப்பட்டான். சரியாக உடைகூட உடுத்திக் கொள்ள வில்லை!ஆபீசுக்கு வந்து விட்டான்.காஞ்சனா அவனை ஏற இறங்கப் பார்த்தாள்!“என்ன ராகுல் இப்படி அலங்கோலமா இருக்கீங்க? வாட் ஹேப்பன்ட்? சரி! போர்ட் மீட்டிங்குக்கு எல்லாம் ரெடியா?”“இதோ பண்ணிர்றேன் மேடம்!”அவன் குரல் பிசிறடிக்க, கால்கள் நடுங்க, கம்பீரமான ராகுல் தொலைந்து போயிருந்தான்.ராகுலை அழைத்தாள் காஞ்சனா.“இன்னிக்கு மீட்டிங் கேன்சல்! சொல்லிருங்க!”“மேம்! வேண்டாம். நான் இப்பவே...”“என் ரூமுக்கு வாங்க!” காஞ்சனா உள்ளே போய் விட்டாள். ராகுல் பின்தொடர்ந்தான்.“ஒக்காருங்க ராகுல்!”“இருக்கட்டும்!”“என்னாச்சு? ஸிட்டவுன் ஐஸே!”சரக்கென உட்கார்ந்தான்.“இப்ப நான் உங்க பாஸ் இல்லை. தோழி காஞ்சனா! சொல்லுங்க! நீங்க இப்படி டிஸ்டர்ப்டா இருந்து நான் பார்த்ததே இல்லை ராகுல்!”நிமிர்ந்து பார்த்தான்.“நான் தெரிஞ்சுக்கக் கூடாத சொந்தப் பிரச்னையா இருந்தா, நீங்க சொல்ல வேண்டாம்!”“அப்படி எதுவும் இல்லை மேம்! என் சிஸ்டர் ரூபா ஒரு இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ண மும்பை போயிருக்கா! தனியா இதுவரைக்கும் அனுப்பினதில்லை. அந்தக் கவலை, பயத்துல ராத்திரி முழுக்கத் தூங்கலை!”சிரித்தாள் காஞ்சனா!“வேடிக்கையா இருக்கு!”“இல்லை மேடம். அவ மேல வச்ச அளவு கடந்த பாசம்!”“தப்பு! பாசம், பந்தங்களை முடமாக்கக் கூடாது ராகுல். அவ பெண். தன்னம்பிக்கையோட தலை நிமிர வேண்டாமா? தனிச்சு போராட வேண்டிய கட்டாயம் இங்கே ஒவ்வொரு பெண்ணுக்கும் என்னிக்காவது ஒரு நாள் வந்தே தீரும். நீங்க கோழையாக்கி வச்சா, அவ என்ன ஆவா? கம்மான் ராகுல்!”அவன் பேசவில்லை.“என்ன கம்பெனி அது? தகவல் இருக்கா?”“பேர் ஞாபகம் இல்லை.சரி விடுங்க! செல்போன் வச்சிருக்காளா?”“இருக்கு மேம்! நான் முயற்சி பண்ணேன். ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கா!”“எங்கே தங்கப் போறா உங்க தங்கை? விலாசம் இருக்கா?”“தந்துட்டுப் போயிருக்கா!”“இன்னமும் ரயில் போய் சேர்ந்திருக்காது. ஒரு மணி நேரம் கழிச்சு அவளே பேசுவா! இல்லைனா, நீங்க பேசுங்க! அப்படியும் நீங்க சமாதானமாகலைனா, ஃப்ளைட்ல புக் பண்ணித் தர்றேன். ராத்திரிக்குள்ள மும்பை போய்ச் சேருங்க! போதுமா?”“கோவமா மேம்?”எழுந்தாள் காஞ்சனா. மெல்ல நடந்தாள்.“எங்கப்பா மல்ட்டி மிலியனர். இப்பவும் வருஷத்துல 300 நாட்களும் வெளிநாட்டுப் பயணம் பண்ணிட்டு இருக்கார். இங்கே நிர்வாகம் மொத்தமும் நான்தான்! விரலை அசைச்சா காலடில வந்து சேவகம் செய்ய ஒரு மினி அரசாங்கமே தயாரா இருக்கு! எதுக்கு? எல்லாருக்கும் பயம் இருக்கு. பின்னால ஆசையும், சுயநலமும் ஒளிஞ்சுகிட்டிருக்கு! பாசம் காட்ட ஒரு ஜீவன் கூட இல்லையே ராகுல்?”முடிக்கும் போது குரல் கரகரத்தது.ஒரு நொடி திடுக்கிட்டான் ராகுல்!சட்டென சிரித்தாள்.“லிவிட்! அதுக்காக நான் வருத்தப்படலை. ஜஸ்ட்லைக்தட் சொன்னேன்! உருகிட்டு ஒக்காந்தா பிஸினஸ் வருமா? ஓக்கே! எல்லாத்தையும் விலைக்கு வாங்க வேண்டியதுதான். அஃப்கோர்ஸ்! பாசத்தையும்தான். அது தரமா ஐ எஸ் ஐ முத்திரையோட எங்கே கிடைக்கும் ராகுல்?”வெகு இயல்பாகப் பேசினாலும், வார்த்தைகளில் வலி தெரிந்தது.
Disponible desde: 16/01/2024.
Longitud de impresión: 71 páginas.

Otros libros que te pueden interesar

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro