Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
தொட்டில் வரை காதலி! - cover
LER

தொட்டில் வரை காதலி!

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

அலுவலகம் போன நடேசன் திடீரென தலைசுற்றி, வாந்தி என ஏற்பட, லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். வந்தும் அது தொடர ராஜம் நடுங்கிப் போனாள். கீதா கல்லூரிக்குப் போயிருந்தாள். 
 
ராஜம் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு போன் செய்ய, வித்யா வந்துவிட்டாள்.
 
“நீ பயப்படாதேமா. நான் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்!”
 
பத்தவாது நிமிடம் அந்த கிளினிக்கில் இருந்தார்கள்.
 
எல்லா டெஸ்ட்டும் எடுக்க வேண்டும் என்றார் டாக்டர்.
 
எடுக்கப்பட்டது. 
 
“நாளைக்குத்தான் ரிப்போர்ட் வரும். அதுவரைக்கும் மருந்து தர்றம். அவர் எங்க பார்வைல இங்கேயே இருக்கட்டும்!”
 
நடசேன் புலம்பத் தொடங்கி விட்டார். 
 
“ராஜம்! எனக்கு என்னாச்சு?” 
 
“அப்பா! உங்களுக்கு ஒண்ணும் ஆகலை! இதெல்லாம் மனுஷனாப் பொறந்தா இயல்புதானே! தைரியமா இருங்க!” 
 
மறுநாள் மாலை அந்த இடி தலையில் இறங்கியது. 
 
“அவருக்கு பிளட் கேன்சர்மா! ரொம்ப அட்வான்ஸ் ஸ்டேஜ்ல இருக்கு!”
 
அம்மாவும், மகளும் நிலைகுலைந்தார்கள். 
 
“அதெப்படி டாக்டர்? இத்தனை நாள் எந்த சிரமும் தெரியாம எப்படி?”
 
“இது ராட்சஸத்தனமா வளரும்மா. அப்படிப்பட்ட நோய்!”
 
“குணப்படுத்த முடியாதா டாக்டர்?” 
 
“ஸாரிமா! உங்களை ஏமாத்த நான் விரும்பல! அதிகபட்சம் ஒரு மாசம் கூட உங்கப்பா தாங்க மாட்டார். உங்களை நீங்க தயார் படுத்திக்கலாம்!” 
 
வித்யா பலமாக மிக பலமாக அடிபட்டாள். 
 
அம்மாவுக்கு மயக்கமே வந்து விட்டது. 
 
தெளிந்த போது, 
 
கீதாவும், வித்யாவும் பக்கத்தில் இருந்தார்கள். 
 
“நான் என்ன செய்வேன்? அவரையும் இழந்துட்டு இந்தக் குடும்பம் பாதில நிக்கணுமா?” 
 
“இதப்பாரம்மா! புலம்பாதே! அப்பா காதுல இந்த செய்தி இதுவரைக்கும் விழலை! கடைசி வரைக்கும் விழாம காப்பாத்துவோம். நாளைக்கு நாம வாழற வாழ்க்கையை விட, இருக்கற நாள்ள அவரை அமைதியாக வச்சுக்கறதுதான் புத்திசாலித்தனம்!” 
 
ராஜம் பேசவில்லை! 
 
அன்று மாலை எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வந்தாள் வித்யா. முதலாளியை சந்தித்தாள். 
 
“சார்! எனக்கொரு உதவி செய்ய உங்களால முடியுமா?” 
 
“சொல்லும்மா!” 
 
“எங்கப்பாவுக்கு அதிகபட்ச ஆயுள் ஒரு மாசம்தான்னு டாக்டர் சொல்லியாச்சு! இந்தக் கால கட்டத்துல ராத்திரி – பகல்னு எப்பவும் அப்பாகிட்டவே நான்  இருக்க ஆசைப்படறேன்!”  
 
“சரிம்மா!” 
 
“இந்த ஒரு மாசம் நான் வேலைக்கு வரலைனா என்னை வேலையை விட்டு நிறுத்திடுவீங்களா?” 
 
“நிச்சயமா மாட்டேன்மா! உன்னை மாதிரி அபாரமா வேலை பாக்கறவங்க யார் இருக்காங்க!” 
 
“அது போதும் சார்! அவரை நல்லபடியா வழியனுப்பிட்டு, நான் வந்துடுவேன் சார்!” 
 
அந்த வாரக் கடைசியில் அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள்.
 
“நான் எப்பம்மா வேலைக்குப் போறது?” 
 
“உங்களுக்கு ஒரு மாசம் லீவு சொல்லியாச்சு. உங்க ஆபீஸ்ல நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும்பா!” 
 
“எனக்கு லீவு அதிகம் இல்லைம்மா! சம்பளம் கட் ஆனா கஷ்டம். அவசரப்பட்டு எல்லாரையும் போல ஆசைப்பட்டு சொந்த வீட்டைக் கட்டியாச்சு. கிட்டத்தட்ட கடன் மட்டும் வெளில ரெண்டு லட்சம் இருக்கும்மா! எனக்கு சம்பளமும் கட் ஆச்சுனா எப்படிம்மா அடைக்கறது?” 
 
“எல்லாம் செய்யலாம்மா! நீங்க ஏன் கவலைப்படறீங்க?” 
 
“நீ வேலைக்குப் போகலையா?” 
 
“லைசென்ஸ் பிரச்சனைப்பா! ஒரு மாசத்துக்கு நான் போக வேண்டாம் வேலைக்கு. மறுபடியும் அடுத்த மாசம் கம்பெனி திறப்பாங்க!” 
 
அப்பா பேசவில்லை!. 
 
இரவு மருந்தின் மயக்கத்தில் அவர் உறங்க, கீதா படித்துக் கொண்டிருந்தாள், மாடியில். 
 
அம்மா வித்யாவிடம் வந்தாள். 
 
“வித்யா!”
 
“சொல்லும்மா!” 
 
“கடவுள் ஏதாவதொரு அற்புதத்தை செஞ்சு உங்கப்பாவைப் பிழைக்க வைக்காதா?” 
 
வித்யா சிரித்தாள். 
Disponível desde: 03/02/2024.
Comprimento de impressão: 56 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver livro