Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
தானாகத் தெரியும்! - cover
LER

தானாகத் தெரியும்!

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

நாடோடிகள்’ சரியாகப் போகவில்லை!பாஸ்கி இயக்கும்போதே, நாடோடிகள் தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தது.ஜனா இயக்கத்துக்கு வந்த பிறகு இன்னும் மோசமானது!தயாரிப்பாளர் அதை நிறுத்திவிட்டு வேறு தொடரை ஆரம்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.ஜனா, முருகன் இருவரையும் அழைத்தார்.“கைல எவ்ளோ எபிசோட் இருக்கு?”“ஷூட் பண்ணினது அஞ்சு இருக்கு சார்!”“இன்னும் ஒரு பத்து எபிசோட்ல முடிச்சுக்குங்க!”“சார்! கதைல இனிமேதான் ஒரு முக்கியமான திருப்பம் வரப்போகுது!” முருகன் சொன்னான்.“போதும் முருகன். என்ன பொல்லாத திருப்பம்? ஆரம்பம் முதலே உங்க சொந்தக் கற்பனை எதுவும் இல்லை. ‘நட்சத்திரம்’ ஜெயிச்சப்ப, அதுலேயிருந்து நிறைய காட்சிகளை உருவி இதுல போட்டீங்க. காப்பியடிக்கறதைத் தவிர, உருப்படியா என்ன செஞ்சீங்க?”முருகனின் முகம் இருண்டது!“இங்கே வேலைக்குச் சேர்ந்த புதுசுல நீங்களும் பாஸ்கியும் மாறி மாறி துரை சாரைக் குறை சொன்னீங்க. அவருக்கு எந்தத் திறமையும் இல்லை. ‘நட்சத்திரம்’ வெற்றிக்கு நீங்க ரெண்டு பேரும்தான் காரணம்னு வாய் கூசாம பொய் சொன்னீங்க. பாலமுருகன் டைரக்ஷன்ல துரைசார் எழுதி ‘நட்சத்திரம்’ கடைசிவரைக்கும் நல்லாத்தான் போச்சு! இப்ப வேற கம்பெனிக்கு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்றாங்க. அதுக்கும் நல்ல பேரு. மத்தவங்களைப் போட்டுக் குடுக்கறதை தவிர, உங்களுக்கு என்ன தெரியும்?“....!”“பத்து எபிசோட்ல முடிச்சிட்டு, எடத்தைக் காலி பண்ணுங்க.”இருவரும் எழுந்தார்கள்.“எப்பவுமே நம்ம உழைப்புல, திறமைல வாழணும்! மத்தவங்களை நாசப்படுத்திட்டு வாழற நம்ம வாழ்க்கை நிலைக்காது முருகன்! புரிஞ்சுக்குங்க!”அவர் எழுந்து போய்விட்டார்.இருவரும் வெளியே வந்தார்கள்.“ரொம்பத் தொங்குதுங்க! நீங்க இன்னும் கொஞ்சம் நல்லா எழுதினா, இந்தத் தொடரை நிறுத்த வேண்டிய நிலைமை வந்திருக்காது!” ஜனா ஆரம்பித்தான்.முருகனுக்கு சுருக்கென வந்துவிட்டது.கண்ணாடியை இறக்கிக்கொண்டு பார்த்தான்.“என் எழுத்தை விமர்சனம் பண்ற தகுதி இங்கே எந்த நாய்க்கும் இல்லை!”“இதப் பாருங்க முருகன். மரியாதையாப் பேசுங்க!”“உனக்கென்ன மரியாதை ஜனா?”“நான் ‘நாடோடிகள்’ டைரக்டர்.”முருகன் சிரித்தான்.“என்ன சிரிப்பு?”“பாஸ்கியைக் கவுத்துட்டு, நீ டைரக்டர் ஆயிட்டே! அதுவும் நிலைக்கலை பாரு! அடுத்தவங்களைக் கவுத்தா, இந்த நிலைமைதான்!”“நீங்க மட்டும் என்ன யோக்யம்? துரை சாரை நீங்க கவுக்கப் பாத்தீங்க! இப்ப உங்க கதி என்ன?எங்கிட்ட பேனா இருக்குடா!”“அதுல இங்க் இருக்கானு முதல்ல பாருங்க. துரை சாருக்கு பத்தாம் தேதி சம்பளம் தருவாங்க கம்பெனில. ஆனா உங்களுக்கு ஒண்ணாம் தேதி அவர் செக் தருவார். துணிமணி, கேட்டப்ப கடன், நல்ல ஓட்டல்ல சாப்பாடுனு சொந்தத் தம்பி மாதிரி அவர் உங்களை வச்சிருந்தார். பாஸ்கியையும், துரை சாரையும் பிரிச்சீங்க! சத்யமா நீங்க உருப்படப் போறதில்லை! நாசமாத்தான் போவீங்க!”“சாபம் விடறியாடா?”“விடாம? நான் தனிமனுஷன். நீங்கள்ளாம் குடும்பஸ்தன். பொண்டாட்டி கையால செருப்படி பட்டு தெருவுக்கு வரணும்யா நீ! ஆனா நீ மாமா வேலை செஞ்சாவது பொழைச்சுப்பே! உனக்கு ஏது மான, ரோஷம்?”முருகனுக்கு ஆத்திரம் உச்சந்தலைக்கு வந்துவிட்டது!ஆனால் பேச முடியாது!‘துரை நாக·கமானவர். ஓரளவுக்கு எதையும் பொறுத்துக்கொள்வார்!’இந்த ஜனாவெல்லாம் பொறுக்கிக்கூட்டம்!சாக்கடையில் கல் எறிவதைப் போலதான் இவர்களிடம் பேசுவது!“நீ எதுக்குடா இத்தனை காலம் பாஸ்கிகிட்ட ஜால்ரா போட்டுக்கிட்டு ஒட்டிக்கிட்டிருந்தே? உன் தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் கேட்டிருந்தே! கொடுக்கலியோ?”“தேவையில்லை. இந்த இருபது எபிசோட்ல எனக்கு டைரக்டர் சம்பளம்தானே? அதுபோதும். பாஸ்கியை நம்பியா நான் பொறந்தேன்? அந்தக் குடிகாரனை நம்பி, அவன் பொண்டாட்டியே வாழ முடியாதே! மத்தவங்க எப்படி? சரி சரி மீதியை எழுதிக்குடுத்துட்டு நடையைக் கட்டுங்க!“நான் இப்ப காளிகாம்பா கோயிலுக்குப் போறேன்!
Disponível desde: 16/01/2024.
Comprimento de impressão: 71 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver livro