பாகீரதி
தேவிபாலா
Editorial: Pocket Books
Sinopsis
மறுநாள் விசாலத்தின் கணவர் வந்து விட்டார். விசாலம் கதறித் தீர்த்து விட்டாள்!அவர் மௌனமாக இருந்தார்.“நீங்க எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?”மனைவியை நெருங்கி அணைத்துக் கொண்டார்.“உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? கோபாலும் நல்ல பையன்! விடும்மா! ஒரு நல்ல நட்பு உடையுது! அதுதான் வேதனை!”“என்ன சொல்றீங்க?”“அந்தக் குடும்பத்தோட நமக்குள்ள நட்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!”“சரிங்க! அந்த கூனி சும்மா இருப்பாளா!”“ஒதுங்கிப் போறவங்களை என்னம்மா செய்ய முடியும்? அவங்க நல்ல குடும்பம்! நான் அவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியும்! பாதிப்பு கோபாலுக்குத்தான்! வேணுமா! அவ அண்ணன் கோவிந்தனும் எனக்குக் கீழேதான் வேலை பார்க்கறான். அவனை யாருக்கும் புடிக்காது. விடு பாத்துக்கலாம்!” அவர் பெருந்தன்மையாக நடந்தார்.ஆனால் கூனி விடவில்லை!அம்மா, அண்ணனிடம் இதைப் பேச அவர்கள் வந்துவிட்டார்கள்.“முதல்ல ரேஸ்... இப்ப தப்பான சகவாசமா!”“நிறுத்து கோவிந்தா! உன் தங்கச்சி பக்குவமில்லாம பேசறான்னா, நீ யோசிக்கணும்.”“யோசிக்க என்ன இருக்கு! புருஷன் வெளியூருக்குப் போன நேரம் மாப்ளையோட துணை எதுக்கு? பெரியவங்க உங்க ரெண்டு பேருக்கும் புத்தி இல்லையா! பிள்ளை என்ன செஞ்சாலும் அதுக்கு ஆதரவு தருவீங்களா?”“என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும்!”“புரியுதே லட்சணம். இப்பிடி நடந்தா, உங்க பிள்ளைக்கு உங்களை அப்பானு சொல்லமாட்டாங்க! மாமானு பேசுவாங்க!”கோபால் பாய்ந்து கோவிந்தனை அறைய,“என் பிள்ளையைக் கொல்றாங்க!” என பெரிய கூனி கதற,அக்கம் பக்கம் கூடி விட -வீட்டு விவகாரம் வீதிக்கு வந்து விட்டது.ஆள் ஆளுக்கு நாட்டாமை பேச,“அந்த மலையாள வீட்டம்மாதானே? அது ஒரு மாதிரித்தான்!” என யாரோ ஆரம்பிக்க,“பாவம் அவங்க! நல்ல பொம்பளை!” என வேறு ஒருத்தி பேச, பிரச்சனை பெரிதாகி விட்டது!யாரோ மத்யஸ்தம் செய்தார்கள்!இந்த பரபரப்பில் கஸ்தூரி போய் ஒரு மத்திய அரசு வேலைக்கான தேர்வை எழுதி விட்டு வர,அப்பா அம்மா விசாலம் கணவரிடம் போய் மன்னிப்பு கேட்க.“விடுங்க! நீங்க பெரியவங்க! எங்களைப் பெத்தவங்களுக்கு சமம்! உங்க மேல உள்ள பாசம் குறையாது! ஆனா இந்தப் பேயை கோபால் அடக்கணும்!”“அது முடியாது விசாலம்!”“கோபால் நிம்மதியா வாழணும்மா!”அவனை நாங்களே குழில தள்ளிட்டோம். படிச்ச வேலை பாக்கற பொண்ணு வேணும்னு கேட்டான்! குடும்பத்துக்கு தோதா ஒரு குத்து விளக்கு வேணும்டானு கேட்டு இவளைத் தேர்ந்தெடுத்தோம்!”“இவ குத்திட்டாம்மா! நெஞ்சுல குத்திட்டா!” அப்பா குரல் இடறியது!“அப்பா! நீங்க கலங்காதீங்க!”“இல்லை விசாலம்! அவ புருஷன் குடும்பம் தாங்கறானாம். நாங்க ஓசிச் சோறாம்! எனக்கு அந்த வீட்ல இருக்கவே பிடிக்கலை!”“அப்பா! கோபால் உங்க மகன்! உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. நீங்க எதுக்கு விட்டுத்தரணும்?”“இல்லைம்மா! அந்த பிசாசுகூட தினசரி காலத்தை ஓட்டணுமே!”“உங்க பிள்ளை, எப்பவும் உங்க பக்கம்தானேப்பா?”“சரிம்மா! மனசுல நிம்மதி இல்லாம எப்படி நாட்களைக் கடத்த முடியும்?”“அப்பா! கஸ்தூரிக்கு கல்யாணம் நடக்கணும்! தேவா படிக்கறான் உங்களுக்கும் நிறைய பொறுப்பு இருக்கு! விட்டு விலக முடியுமா!”அம்மா உள்ளே வந்தாள்
