Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
நதிக்கரையோரம்! - cover

நதிக்கரையோரம்!

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

மறுநாள் காலை ஆறு மணிக்கு ஒரு பிராமண மாமி வந்து விட்டாள்!அகிலாதான் வரவேற்றாள்.‘‘என் பேரு சுலோச்சனா! நான் மடிப்பாக்கத்துலேருந்து வர்றேன்!’’‘‘ஒக்காருங்க மாமி!’’ரமேஷ் வர, தாரிணி மெல்ல எழுந்து வந்தாள்!அம்மா அகிலா எல்லா விஷயங்களையும் சொன்னாள்! “அதுக்கென்ன? நான் இப்ப முதலே பொறுப்பை ஏத்துக்கறேன்! சம்பளம் பற்றி ஏதாவது சொன்னாளா?”“நீங்க சொல்லுங்க!”“பத்துரூபா குடுத்துடுங்க! பஸ் சார்ஜ் இருக்கில்லையா? சமயத்துல காத்தால பஸ் கிடைக்கலைனா, ஷேர் ஆட்டோ புடிச்சு வரணும்!”“ராத்திரி சமையலைக் கூட செஞ்சு வச்சிட்டுப் போகணும்!”“கண்டிப்பா!”“உங்க வீட்ல எத்தனை பேர் மாமி?”“சின்ன வயசுல அவர் என்னை விட்டுட்டு வேற ஒருத்தியோடப் போயிட்டார். ஒரே பெண் குழந்தை - வத்சலா! இப்ப இருபது வயசு! ப்ளஸ் டு பெயில்! அவளும் இந்த மாதிரி சமையல், பங்களா வேலைனு சம்பாதிக்கறா! ஒரு நாளைக்கு நான் வரமுடியலைனா, அவ வந்து செஞ்சு தருவா!”“சரி மாமி!”“இந்த வீட்டுப் பழக்கம் எப்படி? யாருக்கு என்ன ருசி? எல்லாம் சொன்னா அதன்படி செஞ்சு தர்றேன். சில வீடுகள்ல உப்பு, உறைப்பு நிறைய வேணும், இப்ப பி.ப்பீ, சக்கரைனு எல்லா வியாதிகளும் இருக்கற காரணத்தால பார்த்து சமைக்க வேண்டியிருக்கு!”கேட்டுத் தெரிந்து கொண்டாள்.“இப்ப டிபனுக்கு சேமியா கிச்சடி பண்ணி, சட்னி அரைக்கட்டுமா?”“சரி, மாமி!”மாமி மளமளவென செயலில் இறங்கி விட்டாள்.காலை ஏழரைக்கு ஆவி பறக்கும் சேமியா கிச்சடி, தேங்காய் கொத்துமல்லி சட்னி, ஒரு கத்தரிக்காய் கொத்சு என தயார் செய்து விட்டாள். டிகிரி காபியும் தயாராக, சாப்பிட்ட குடும்பத்தார் அசந்து போனார்கள்.அப்படி ஒரு ருசி!“அத்தே! மாமி பிரமாதமா செய்யறாங்களே?”“ஆமாம் தாரிணி! ரெண்டு நாள் பார்க்கலாம். வந்த புதுசுல ஜோர் இருக்கும்! போகப்போக தேயுதானு பார்க்கணும்!”மதிய சமையல் அதை விடப் பிரமாதம்!ஒரு கூட்டு, பொரியலை வைத்து நெய்ல வத்தக்குழம்பு, எலுமிச்சை ரசம் என மாமி அசத்தினாள்!தேவைக்கு அதிகமான பேச்சு இல்லை!சுறுசுறுப்பான செயல்பாடு!அடுத்த நாள் இட்லி, தோசை தேவைக்கு ஊறப்போடுதல், மாவு அரைத்தல், பொடி செய்தல் என நேரத்தை விணாக்காமல் உழைத்தாள்.இரவு உணவை தயாரித்து ஏழு மணிக்கு புறப்பட்டாள்!செல்போன் வைத்திருந்தாள்மகள் வத்சலாவுடன் அவ்வப்போது பேச்சு!அந்த ஒருவாரத்தில் மாமியின் தயாரிப்பு அட்டகாசம்!ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு சமையல். காலையில் வரும் போதே காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்துவிடுவாள்!பொருட்களை அதிகம் விரயம் செய்யாமல் சிக்கனமாகக் கையாண்டு அசத்தி விட்டாள்!தாரிணிக்கு என்ன பிரச்னை என்று இன்றுவரை கேட்கவில்லை. வம்பு, தும்பு இல்லை.“பத்தியச் சமையல் செய்வீங்களா மாமி?”“உனக்கு ஒடம்புக்கு என்னானு சொல்லு, அதுக்குத்தக்க செஞ்சு தர்றேன்!”“மாமி! அவளுக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை! அதனால என்னால முடியலைனுதான் உங்களை வேலைக்-கு வச்சிருக்கோம்!”“குழந்தையே இல்லையா?”அகிலா எல்லா விபரங்களையும் சொல்லி விட்டாள்!மாமிக்கு கண்கள் கலங்கியது! திரும்பி ரகசியமாக துடைத்துக் கொண்டாள்.“விடும்மா குழந்தே! நல்ல மாமியார் -தங்கமான புருஷன்! உங்க அன்பு, பாசம், குடும்ப இணக்கத்தை ஒரு வாரமா நான் பார்க்கறேனே! இது குடுப்பினை இல்லையா? மனசைத் தேத்திக்கோ! பகவான் எப்ப, எதை, எப்படி தரணும்னு எழுதி வச்சிருப்பான்! அது நமக்குத் தெரியுமா? சரி விடு! ஆபரேஷன் ஆயிருக்கு! வயிறெல்லாம் புண்ணா இருக்கும்! அதுக்குத்தகுந்த பத்தியச் சமையலை உனக்கு நான் செஞ்சு தர்றேன்!”“சரி மாமி!”“இதப்பாரு! மனசைத் தெளிவா வச்சுக்கோ! எந்த டாக்டரும் நம்மை குணப்படுத்த முடியாது! மனசுதான் மகத்தான வைத்தியர்!”
Available since: 01/16/2024.
Print length: 71 pages.

Other books that might interest you

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • Udhayabanu - Kaanmalar - cover

    Udhayabanu - Kaanmalar

    Gokul Seshadri

    • 0
    • 0
    • 0
    1001 CE. King Rājarāja Chōḷa has returned to the imperial capital of Thanjāvūr, but peace eludes him. A  brazen assasination attempt on his life has left his administration in disbelief. Fragments of evidence point directly towards Chēraman Perumal, the king of Kerala. Was Chēra monarch himself complicit in the plot, or was he merely a pawn in a much deeper conspiracy?
    
    A swift military response offers no easy answers. Mahōdayapura, the Chēra capital, stands fortified by land and sea alike - impenetrable, vigilant, and prepared. A surprise attack is impossible. One misstep could plunge the southern kingdoms into chaos. Cornered by uncertainty and constrained by strategy, King Rājarāja must choose his next move with great care.
    
    Even as the king weighs war and diplomacy, another game unfolds in the shadows. In Karuvur, Muvendan, Rājarāja's fiercely loyal personal bodyguard-pursues a dangerous trail. What began in the horse-trading grounds of Madurai, with a single fleeing assassin, now leads him into a web far darker than he imagined. Each step brings him closer to a revelation both sinister and explosive.
    
    As destinies converge, difficult questions multiply. What path lies before General Maḷapāḍiyar and his steadfast companion Ambalavanar, caught between duty and consequence? What piece of sacred history will Mathura and revered Saint Nambiyāṇdar Nambi discover in their sojourn to Tillai Chidambaram? What unforeseen dangers await Vijayaraja Acharya, as he plans a trip to Kerala with his drama troupe?
    
    Building on the momentum of the earlier volumes, Udhayabānu Kānmalar is a masterfully woven political thriller - rich with intrigue, betrayal, and revelation - where seemingly disparate lives and events collide to produce a stunning and unforgettable narrative.Come and immerse yourself in the world of Chōḷa history, where unseen threads from the past tighten around the present; where long forgotten secrets refuse to remain buried.
    
    காலம் பொது நூற்றாண்டு 1001. கடந்த ஐப்பசி சதயத்தன்று தன் மீது படுகொலைத் தாக்குதலை நிகழ்த்திய சேர நாட்டு சதிகாரர்களின் மீது ஏதேனும் ஒரு கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சோழப் பேரரசர் இராஜராஜ சோழர். ஆனால் அந்த நடவடிக்கை என்ன என்பதைப் பற்றிய கருத்தொற்றுமையில்லை. சேரமான் பெருமாளுக்குச் சதியில் நேரடியாகத் தொடர்பு உண்டா? இல்லையா? என்பது இன்னமும் உறுதியாகாத நிலையில் சேரர் தலைநகரான மகோதயபுரத்தைத் தாக்குவது அரசியல் ரீதியில் சரியான நடவடிக்கையாக இருக்குமா என்று யோசிக்கிறார் மன்னர். மேலும் கடலும் மலையும் சூழ்ந்துள்ள மகோதகையைத் தாக்குவதும் எளிதல்ல. மன்னர் யோசித்துச் செயல்படவேண்டிய நேரம் இது.
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book