¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
மயான மலர்கள் - cover

மயான மலர்கள்

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

கண்ணாடி முன்னால் நின்று கேசத்தை பதினெட்டாவது முறையாக வாரினான் யாதவ்.மறுபடியும் கொஞ்சம் கோல்ட் க்ரீம், ரோஸ் பவுடர், யார்ட்லி சென்ட் என்று மானாவாரியாக பூசிக் கொண்டான்.ஷிபான் புடவையைக் கிழித்து தைத்தது போல பளபளப்பாக ஒரு சட்டை, ஜீன்ஸ் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ.“மறுபடியும் தலைவாரல் முடியலையா? வாரி வாரியே வழுக்கையா ஆகப்போற. எங்கே புறப்பாடு?”“நாலு மணிக்கு எத்திராஜ் வாசல்ல இருக்கணும். ஷர்மிளா காத்துட்டு இருப்பா - நேரா காஞ்சில போய் டிபனை முடிச்சிட்டு, ஒரு ரவுண்ட் சுத்திட்டு ஷர்மியை வீட்ல ட்ராப் பண்ணிட்டு நான் இங்கே வந்திருவேன்!”“இதுக்குத்தான் மாசாமாசம் ஊர்லேருந்து உனக்கு ட்ராஃப்ட் வருதாக்கும்? ‘என் பிள்ளை மெட்ராஸ்ல பெரிய படிப்பு படிக்கிறான். நாலு வருஷத்துல என்ஜினியராகி ஊரையே விலைக்கு வாங்குவான்’னு ஏதோ ஒரு கிராமத்துல உன்னைப் பெத்தவங்க பகல் கனவு காணுறவாங்க!”“இடியட்! உன் சொற்பொழிவை, மேடை போட்டு நடத்து. கொஞ்சம் சில்லறையாவது தேறும்.”“யாதவ்! உன் போக்கு சரியில்லை. அப்புறமா உன் இஷ்டம் - நல்ல ஒரு ஸ்நேகிதனுக்கு சொல்ல வேண்டிய கடமை உண்டு. சொல்லிட்டேன்.”“போடா... சொல்லிருவேன் ஏதாவது! ஆமா, நல்ல ‘யாஷிகா’ ஒண்ணு கிடைக்குமா?”“எதுக்கு?”“ஷர்மியை போட்டோ எடுக்க. ‘பலான’ போஸ்கள் தர்றனு ஒத்துக்கிட்டா நேத்து!” கண்ணடித்தான்.ராஜா முகத்தைச் சுளிக்க “வரட்டுமா சின்மயானந்தா!” விசிலடித்தபடி வெளியே வரும் யாதவ், போன மாதம் இருபத்தியொரு வயதை முடித்தான்.அவன் தகப்பனார், திருநெல்வேலி பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு, கரன்ஸிகளை அறுவடை செய்து கொண்டிருப்பவர். அந்த கிராமத்தையே தன் பிள்ளை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். மோசமான அந்த ஆசை, பல ஆயிரங்களை லஞ்சமாகக் கொடுத்து, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர வைத்தது. அவனுக்காக தங்குவதற்கு ரூம் ஏற்பாடு செய்து, இன்னும் எத்தனையோ...யாதவ் கல்லூரிக்கு, அவ்வப்போது போரடிக்கும் போது போவான்.ராஜா அவன் ரூம் மேட்... க்ளாஸ் மேட். அவன் எத்தனையோ சொல்லியும், யாதவ் திருந்துவதாக இல்லை.‘கிராமத்துக்கு எழுதிவிட வேண்டும். இவன் தகப்பனாருக்கு நிஜத்தைத் தெரிவிப்பது என் கடமை’ என்று தீர்மானித்து விட்டான்.யாதவ்,வெளியே வந்து தன் புல்லட்டை விடுவித்தான். சரேலென அம்புபோல விடுபட்டு, சாலையின் திருப்பத்தில் நாலைந்து பாதசாரிகள், ஒரு மொபைல் லாண்டரி, குளிர் பானம் கொண்டு வரும் ட்ரை சைக்கிள் எல்லாம் அலறி விலக,பாந்தியன் சாலையில் நுழைந்து, சடுதியில் கமாண்டர் - இன் - சீஃப் ரோட்டைத் தொட்டுத் திரும்பி-எத்திராஜ் வாசலுக்கு வரும்போது ஏற்கனவே கல்லூரியின் நேரம் முடிந்து, மாணவிகளின் கூட்டம் ஓயத் தொடங்கியிருந்தது.புல்லட்டை நிதானப்படுத்தி, கண்களை அலையவிட்டான். அப்போதுதான் வந்து கொண்டிருந்தாள் ஷர்மிளா. இளம் நீலநிற சூரிதார் அணிந்து, உதிரியான கேசம் புசுபுசுவென்று முதுகு கடந்து படர -சன்னமாகச் சிரித்துவிட்டு, காஞ்சியின் வாசலைப் பார்க்க நடந்தாள்.யாதவ் சட்டென கியர் மாற்றி, சரேலென காஞ்சிக்குள் நுழைந்தான். ஸ்டாண்ட் போட்டு, பூட்டி, ஹெல் மெட் விலக்கி, மறுபடியும் தலைவாரிக் கொண்டான்.ஷர்மிளா நெருங்கி விட்டாள்
Disponible desde: 16/01/2024.
Longitud de impresión: 69 páginas.

Otros libros que te pueden interesar

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver libro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro