Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
மனசு ஒரு தினுசு! - cover
LER

மனசு ஒரு தினுசு!

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

நர்த்தனா வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரமாகிவிட்டது. அவளிடம் வேலை தவிர வேறெதுவும் பேசவில்லை அமர். வேறு எங்கும் சுற்றாமல் அவனும் எட்டுமணி நேரத்துக்குமேல் ஒழுங்காக அலுவலகத்தில் இருக்கத் தொடங்கிவிட்டான். 
 
நண்பர் கூட்டத்துக்கு வயிற்றில் புளி. ஓட்டலில் தங்காமல் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்க ஆரம்பித்தான் அமர்.
 
“அடேய், ஔவையாரை ப்ராக்கெட் போட அண்ணன் நடத்தற ஆரம்ப நாடகமாடா இது?” 
 
“சாவப் போறான். அது ஜடம்டா. மூஞ்சில ஒரு சிரிப்புகூட இல்லை. இந்த ஜென்மத்துல அது இவனைக் காதலிக்கும்னு நான் நம்பலை.” 
 
நண்பர்கள் அமரேஷை விமர்சிக்கும் நேரத்தில்தான் ரமணி தன் பெட்டி, தோள்பையுடன் நுழைந்தார் அலுவலகத்தில். 
 
விவரம் சொல்லி அனுப்பினார். 
 
“வரச் சொல்றார்.” 
 
ரமணி உள்ளே நுழைந்த சமயம், ஒரு கடிதத்தை நர்த்தனாவுக்கு டிக்டேட் செய்து கொண்டிருந்தான் அமர். 
 
“வாங்க அங்கிள்!” 
 
“நான் வந்தது தொல்லையா தம்பீ?” 
 
“இல்லையில்லை. நீங்க லெட்டரை டைப் பண்ணுங்க நர்த்தனா. உட்காருங்க அங்கிள். அம்மா எப்படி இருக்காங்க?”
 
“சௌக்யமா இருக்காங்க. இந்த லெட்டரை உங்ககிட்ட தந்தாங்க.” 
 
வாங்கிக் கொண்டான் அமர். 
 
“காப்பி சொல்லட்டுமா அங்கிள்?” 
 
“இப்ப அவசியமில்லை தம்பி.” 
 
பிரித்தான்அமர். 
 
‘கண்ணே அமர்! 
 
உன் அம்மா எழுதுகிறேன். உன்னை விட்டு வெகு நாட்களுக்குப் பிரிந்திருக்க இனி என்னால் இயலாது. நீ இங்கு வந்துவிடு. ஏழெட்டு வருடங்களாக உன் உல்லாச வாழ்க்கைக்கு நான் எந்த இடையூறும் தரவில்லை. இனி வாழ்க்கையில் நீ ஓரிடத்தில் உட்காரும் தருணம் வந்துவிட்டது. உனக்கொரு திருமணம் நடத்த வேண்டும் நான். அதுவும் நான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பெண்ணை. என் சொல்லை நீ மறுக்க மாட்டாய் என்று எப்போதும் நம்புகிறேன். மானேஜர் ரமணி உன்னோடு பத்து நாட்கள் இருப்பார். இது என் உத்தரவு. அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடு. விரைவில் உன்னை நான் சந்திக்க வேண்டும். - அம்மா. 
 
நிமிர்ந்தான் அமர். 
 
“என்ன தம்பீ?” 
 
“நான் இப்ப ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸ்லதான் இருக்கேன் அங்கிள். நீங்களும் என்னோட தங்கிக்கலாம்.” 
 
“நன்றி, தம்பி.” 
 
மணியடித்தான் அமர். 
 
ப்யூன் வர - 
 
“இவரை என்னோட கெஸ்ட் ஹவுஸுக்குக் கூட்டிட்டுப்போ. வேண்டிய வசதிகளைச் செஞ்சு குடு. நாம சாயங்காலம் பேசலாம். அங்கிள்.” 
 
“சரி, தம்பி.” 
 
வெளியே வந்தார் ரமணி. 
 
கெஸ்ட் ஹவுஸ் அலுவலகத்தின் பின்னாலேயே இருந்தது.
 
உள்ளே வந்தார். 
 
குளியல் முடித்து உடைமாற்றிக் கொண்டதும் சூடான உணவு வந்தது. சாப்பிட்டார். தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் கட்டிலில் சற்று நேரம் படுத்தார். 
 
'மாலை என்ன பேசப்போகிறான் அமர்?' 
 
'வெகு அடக்கமாக, நல்ல பிள்ளையாக குரல்கூட அதிராமல்தானே பேசுகிறான்?’
 
‘இதெல்லாம் நடிப்பா?' 
 
‘எனக்கு எல்லாம் தெரியும் என்பது இவனுக்குத் தெரியுமா? இல்லை, என்னிடமும் நடிக்கிறானா?' 
 
'பேசினால் தெரிந்துவிடும்.' 
 
ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தபோது மாலை மணி ஐந்தாகிவிட்டது. முகம் கழுவி, காப்பி குடித்தார். மாலைச் சிற்றுண்டி வந்தது. சாப்பிட்டார். 
 
அமர் உள்ளே நுழைந்தான். 
 
“எல்லாம் வசதியா இருக்கா அங்கிள்?” 
 
“இருக்கு தம்பி. நான் உங்ககூடத் தங்கறதுல தம்பிக்கு எதுவும்...?” 
 
“எனக்கென்ன கஷ்டம் அங்கிள்.” 
 
வெகுநேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இரவுச் சாப்பாடு ஆனது
Disponível desde: 03/02/2024.
Comprimento de impressão: 59 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro