Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
மாலை சூடும் ம(ர)ண நாள் - cover
LER

மாலை சூடும் ம(ர)ண நாள்

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

“யார் கிட்ட கேட்கப் போற தம்பி?” சட்டையை மாட்டிக் கொண்டிருந்த நிர்மலைப் பார்த்துக் கேட்டாள் அம்மா. 
 
“டவுன்ல நம்ம பகவன்தாஸ் இருக்காரே...”
 
“பான் ப்ரோக்கர், பகவான்தாஸ் தானே அண்ணா?”
 
“ஆமாம். அவர்கிட்ட கேட்டுப் பாக்கலாம்னு நினைக்கிறேன்!” 
 
“தம்பீ... யோசிச்சுத்தான் பேசுறியா? நூத்துக்கு பத்து ரூபா வட்டி கேக்கற கிராதகனாச்சே அவன். இருபதாயிரம் வாங்கினா மாசம் ரெண்டாயிரம் வட்டி கட்டிணுமே. உனக்கு சம்பளம் ஆயிரம் கூட வராது. அதுல பிடிப்பெல்லாம் போக கைக்கு, நானூறு வந்தா அதிகம். இதுல வாடகை கொடுப்பமா, வயித்துக்கு பாப்பமானு உருகிட்டு இருக்கேன் நான். ரெண்டாயிரம் வட்டி எப்படி தம்பீ கட்டுவ?” 
 
“எல்லாத்தையும் இப்பவே யோசனை பண்ணினா, அடுத்த வாரம் சுமி கழுத்துல தாலி ஏறாது. தயவு செஞ்சு என்னைப் போக விடும்மா” எரிச்சலோடு சொல்லிவிட்டு, வெளியே இறங்கி, சைக்கிள் ஸ்டாண்டை விடுவித்தான். தாவி உட்கார்ந்து நிதானமாக பெடலை மிதிக்கத் தொடங்கினான். 
 
மிதிக்க, மிதிக்க இன்னும் யார், இன்னும் யார் என்ற யோசனை வந்தது. 
 
அவசரமாகக் கலைத்தான். 
 
சாலையைப் பார்த்து கவனமாக ஓட்டத் தொடங்கினான். 
 
பகவன்தாஸ் கடையை நெருங்கியதும், ஏற்கனவே ஒரு கூட்டம் காத்திருக்க- 
 
ஒரு ஓரமாகக் காத்திருந்தான்.
 
இருபது நிமிடம் முடிந்து, கூட்டம் ஓய்ந்ததும், மெல்ல உள்ளே நுழைந்தான். 
 
“வா நிர்மல் பையா! தங்காச்சிக்கு கண்ணாலம்னு ஊரே பேசிக்குது. நமக்கெல்லாம் பத்திரிகை வைக்க மாட்டானா?” 
 
அந்தக் கவலையிலும் பகவன்தாஸைப் பார்த்ததும் சிரிப்பு பொங்கி வந்தது. தினமும் ஒரு மணிநேரம் ஒதுக்கி, ‘மரியாதையாக தமிழில் பேசுவது எப்படி?' என்று இவனுக்குக் கற்றுத் தர வேண்டும். 
 
“பத்திரிகை வைக்கலாம் சேட்டு. அதுக்கு நீயும் மனசு வக்கணுமே!” 
 
“நம்பள் என்னாத்துக்கு மனசை வைக்கிறான் பையா?”
 
“நிம்பள் பணம் தர்றான் சேட்ஜி!” 
 
“பத்து ரூபா வட்டி தர்றானா நிர்மல் பையன்?” 
 
நிர்மல் சட்டென மௌமாகிப் போனான். 
 
“என்ன பையா பேசறானில்லை?” 
 
குரலைத் தழைத்துக் கொண்டு, பகவன்தாஸைப் பார்த்தான் நிர்மல். “சேட்ஜி, நான் சொல்றதை நீ கொஞ்சம் கேப்பியா?” 
 
“என்ன நிர்மல் பையா?” 
 
“ஆயிரம் ரூபா கூட சம்பளம் வராத நான், ஊர் முழுக்க கடன் வாங்கியாச்சு சேட்டு. இந்த நிலைல இருபதாயிரம் தொகைக்கு, ரெண்டாயிரம் வட்டி எப்படி தர முடியும்? என்னை உன் தம்பியா நினைச்சு, குறைஞ்ச வட்டிக்கு தா சேட்டு இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா, என் தங்கச்சி  வாழ்க்கையே பாழாப் போயிரும் சேட்டு” தன்னையும் மீறி அழுதுவிட்டான் நிர்மல். 
 
சேட்டு மெளனாக இருந்தான். 
 
“அரே நிர்மல் பையா நம்மளக்கு பாவமாத்தான் இருக்கறான். நம்பள் இரக்கம் காட்டினா... பிழைக்கறானில்லை. ஸாரி பையா. உனக்காக ஒம்போது ரூபாயா வேணும்னா குறைச்சுக்கலாம்!” 
 
நிர்மல் எழுந்தான். 
 
சோர்ந்து போய் வெளியே வந்தான். 
 
சைக்கிளில் ஏறி, பெடலை மிதிக்கத் தொடங்கியதும், காரியரை யாரோ இழுத்த தினுசில் சைக்கிள் நகர மறுத்தது. 
 
இறங்கி, திரும்பினான். 
 
பின்னால் நின்ற அந்த மனிதன் சிரித்தான். சிரிப்புகூட முழுவதும் வெளித் தெரியாமல் அந்த பிரெஞ்சு தாடியும், புஷ்டியான – உதடுகளைத் தின்ற-மீசையும் அழுத்திக் கொள்ள, ரோமங்களின் சின்ன சலனத்தில் அது சிரிப்பு என்று தெரிந்தது.
 
“யார் நீங்க?” சற்று எரிச்சலோடு கேட்டான் நிர்மல். ஆறடி உயரத்தை அனாயாசமாக அடைந்திருந்த அவன், நல்ல தேகக் கட்டும், அத்லெட் உடம்புமாக, பார்வைக்கு ஒரு மாஜிக் நிபுணனைப் போலிருந்தான். கண்ணாடிக்குப் பின்னால் தெரிந்த கண்களில் ஒரு அலட்சியம் இருந்தது. 
 
“அதை இங்கே வச்சுப் பேச வேண்டாமே!” 
 
“எங்கேயும் வச்சுப் பேச வேண்டாம். நீங்க யார்னு தெரியாம நான் நகர முடியாது இங்கிருந்து!” 
 
“உன் தங்கை கல்யாணத்துக்கு வேண்டிய பணத்தை வட்டியில்லாம தர வந்திருக்கேன். இப்ப வர்றியா? என் வீட்ல போய் பேசுவோம்!” 
 
தேடி வந்த அதிர்ஷ்டமா? 
 
மறுபேச்சே இல்லாமல், நிர்மல் அவனைத் தொடர்ந்து சைக்கிளைத் தள்ளிக்  கொண்டு நடந்தான். தெருமுனை திரும்பியதும், அந்த நீளமான அயல்நாட்டு  கார், எவர்சில்வர் கலரில் பளபளத்தது. வெய்யில் அதன் உடம்பில் பட்டுப் பிரதிபலிக்க- 
 
“சைக்கிளைப் பூட்டிட்டு, கார் ஏறு?”
 
நிர்மல் சற்று தயங்கி, சைக்கிளை அந்த மெடிகல் ஷாப் பக்கம் பூட்டி நிறுத்தினான்.
Disponível desde: 03/02/2024.
Comprimento de impressão: 46 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver livro