இன்று பாதி! நாளை மீதி!
தேவிபாலா
Editorial: Pocket Books
Sinopsis
வெள்ளிக்கிழமை விடிந்து விட்டது.எட்டு மணிக்கெல்லாம் தயாராகி விட்டாள் கீர்த்தனா. ரெக்ஸோனா பச்சையில் சூடிதார் அணிந்து, கூந்தலை ஷாம்புவில் கழுவி, முதுகில் பரப்பியிருந்தாள்.நல்ல உயரம்...!வாளிப்பான உடம்பு...!பார்த்தவர்களை அதிரடிக்கும் பர்ஸனாலிட்டி!“போலாமா கீர்த்தனா?”“நான் ரெடி அங்கிள்.”“உன் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர், ஒரிஜினல் சர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கியா?”கைப்பையைக் காட்டினாள் கீர்த்தனா.“நானும், அப்பாவும் இண்ட்டர்வியூ வந்தப்ப ரெண்டு நாள் ஓட்டல்ல தங்கினம், ஆறுமாசம் முன்னால். அப்பவே நீங்க இருக்கறது தெரிஞ்சிருந்தா, ஆன்ட்டியை பார்த்திருக்கலாம்.!”“ஜாக்ரதைடீ! போற இடத்துல சளசளன்னு பேசாதே! பத்தரைக்கு ராகுகாலம் தொடக்கம். அதுக்குள்ள கையெழுத்து போட்டுடு!”“சரிம்மா!”பைக்கில் பரவி உதைத்தான் பானு. நாசூக்காக அவன் பின்னால் அமர்ந்தாள் கீர்த்தனா. அது தேய்ந்ததும், சாவித்ரி உள்ளே வந்தாள். வந்த இரண்டு நாட்களில் யாரையும் பழகிக் கொள்ளவில்லை. அந்த இடத்தில் எட்டு ஃபிளாட்கள் இருந்தன. யாரும் ஸ்நேக பாவம் காட்டவில்லைஆனாலும் நாம் அப்படி இருக்கக்கூடாது. நாமாகச் சென்று பழகிக் கொள்ள வேண்டும்.’ஆறுமணிக்கு கீர்த்தனாவை அழைத்து வர பானு போய்விட்டான். ஏழு மணிக்குள் குதிரை போல கீர்த்தனா வந்து இறங்கினாள்.“அம்மா! பசிக்குது எனக்கு!”“ஓட்டலுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு வழில சொன்னேன் இல்லை உனக்கு?”“வேண்டாம் அங்கிள். எனக்கு ஓட்டல் உணவே சேர்றதில்லை!”“எப்பவும் அம்மா இருந்தா, தெம்பா பேசலாம்! என்னை மாதிரி ஆட்கள் பேச முடியுமா?”“இனிமே நீங்களும் பேசலாம்!”“எப்படி இருந்தது ஆபீஸ்?”“வொண்டர்புல். நான் பேசற இங்கிலீஷ் பார்த்து ஜோனல் மானேஜர் பொளந்த வாயை இன்னும் மூடலை!”“உயிரோடதான் இருக்காரா? புண்ணியவதி, நீ போய் மோட்சம் தந்துட்டியா அவருக்கு!”“முன்னேற கம்பெனியில் நிறைய வழி இருக்கு. பரீட்சைகள் பாஸ் பண்ணனும். அதிகாரியாயிட்டா அடிக்கடி அமெரிக்கா போயிட்டு வரலாம்.!”“இங்கே மெட்ராஸ் வரதுக்கே உங்கப்பா உசிரை விடறார். அமெரிக்காவாம் அமெரிக்கா...!”“எங்கம்மா அறுக்கத் தொடங்கிட்டா தாங்காது அங்கிள். அப்பா தேவலை!”“நாளைலேர்ந்து பஸ்ல போ கீர்த்தி!”“ஏன்கா? நான் கொண்டு போய் விடறேனே!”“அது கஷ்டம் பானு. ஒரு நாளைப் போல முடியுமா? அவ ஆபீசும், உன் ஆபீசும் பக்கத்துலேயா?”“இல்லை!”“பின்ன? பெட்ரோல் சும்மா கிடைக்குதா உனக்குஅப்படியெல்லாம் பார்த்தா ஆகுமாக்கா?”“ஆமாம் அங்கிள். பஸ்ல கூட்டத்துல பிதுங்கிட்டு என்னால போக முடியாது!”மறுநாள் அலுவலகத்தில் அந்தக்கடிதம் வந்தது அவனுக்கு. ஐஸ்வர்யாதான் எழுதியிருந்தாள்.“உங்கள் கடிதம் கிடைத்தது. நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். பிரசவம் ஒரு வாரம் முன்பாகவே ஆகலாம் என்று டாக்டர் சொன்னார். நம் வீட்டில் யாரையும் தங்க வைக்க வேண்டாம். காலம் கெட்டுக் கிடக்கிறது. நண்பர் குடும்பமாக இருந்தாலும், நாலு நாள் தங்கிவிட்டு, அனுப்பி விடுங்கள். மற்றவை அடுத்த கடிதத்தில் - ஐஸ்வர்யா.பானுசந்தருக்கு நெற்றி நரம்புகள் கலைந்து ஆவேசம் புறப்பட்டது ‘...ச்சே என்ன மனுஷி இவள்? உனக்கு மனிதர்களே இல்லாத தீவில் வாழப்பிடிக்கும். அதற்காக நானுமா? கீர்த்தனாவும், அக்காவும் இதை அறிந்தால் நொந்து போக மாட்டார்கள்?’‘கடிதம் வந்ததா என்று கேட்டால், என்ன பதில் சொல்லுவேன் நான்?’‘நிச்சயமாக இதைக் காண்பிக்க முடியாது!’‘ஐஸ்வர்யா வீட்டு விலாசத்துக்கு எழுதுவதில்லை.’‘அவன் கையெழுத்து இவர்களுக்குத் தெரியுமா என்ன? இதை வேறு விதமாகத் தான் சமாளிக்கவேண்டும்!’ட்ரா திறந்து ஒரு இன்லண்ட் எடுத்தான்.பேனாவை விரல் இடுக்குகளின் ஓரத்தில் பிடித்து தன் கையெழுத்தை மாற்றி, கிறுக்கலாக எழுதத் தொடங்கினான்.‘அன்பான உங்களுக்கு! கடிதம் கிடைத்தது. உங்கள் நண்பர் குடும்பம். நம் வீட்டுக்கு வந்ததில் அளவில்லாத மகிழ்ச்சி எனக்கு. நம் வீடும் கலகலவென்று இருக்கும். சுத்தமாக இருக்கும். இனி சாப்பாட்டுக்கு கவலையில்லை உங்களுக்கு. அவர்கள் இருவரைப் பற்றியும் விளக்கமாக நீங்கள் எழுதவில்லை. எழுதுங்கள். அக்காவுக்கு அடுத்த முறை நானே கடிதம் எழுதுகிறேன் - ஐஸ்வர்யா
