ஏன்
தேவிபாலா
Editora: Pocket Books
Sinopse
மௌலி, கௌரி இருவரும் குடும்ப ஜோசியர் வீட்டில் இருந்தார்கள்!“சொல்லுங்க!”“நவீன், ரம்யா ரெண்டு பேர் ஜாதகங்களும் கொண்டு வந்திருக்கேன்! பாத்துட்டு யாருக்கு, எப்ப நடக்கும்னு சொல்லுங்களேன்!”“அதுக்கென்ன! குடுங்க!”அவர் வாங்கி வெகுநேரம் பார்த்தார்!“உங்க பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கு!”“அய்யோ!”“ஏன் பதட்டப்படறீங்க? அதுல தப்பே இல்லைம்மா! அதுக்குப் பொருத்தமான ஜாதகம் பார்த்துக் குடுத்துட்டா ஒரு பிரச்னையும் வராது!பொண்ணுக்கு குருபலம் வர இன்னும் ஒரு வருஷம் ஆகும்! அதனால கல்யாண முயற்சிகளை இப்ப எடுக்காதீங்க! எடுத்தாலும் நடக்காது! பையனுக்கு குருபலம் வந்தாச்சு! அதிகபட்சம் மூணு மாசத்துக்குள்ளே நடந்துடும்!”“அப்படியா?”“தப்பில்லையே! அவனுக்கும் 28 வயசாயிடுச்சில்லை? நடத்திடுங்க! இனி ஏன் தாமதிக்கறீங்க?”“நல்லது ஜோசியரே! பொருத்தமான ஜாதகத்தை நீங்களே எடுத்துக்குடுங்க!”“என்ன மாதிரி பொண்ணை நீங்க எதிர்பார்க்கறீங்கனு சொல்லிடுங்க. வெறும் ஜாதகம் மட்டும் போதாது. நம்ம எதிர்பார்ப்புகளும், ஜாதகமும் ரெண்டுமே பொருந்தி வந்துட்டா, எல்லாம் நல்லபடியா இருக்கும்!இவன் பி.டெக் முடிச்சு, ஒரு வருஷம் காத்திருந்து வேலை கிடைச்சது! அஞ்சு வருஷமா வேலைக்குப் போறான். சம்பளம் நாப்பதுரூபாய் வாங்கறான். அழகன்! புத்திசாலி!”“தெரியுமே!”“அதே ரகப் படிப்பு - சம்பளம், தகுதிகள் எல்லாம் உள்ள பொண்ணு வேணும்னு எதிர்பார்க்கறான். கண்டிப்பா வேலைக்குப் போற பொண்ணா இருக்கணும்...”“பாத்துடலாமே!”“குடும்பமும், நல்லா இருக்கணும். ஐடில இருக்கற பொண்ணுங்க அடங்கறதில்லைனு ஒரு புகார் வருது!”“அப்படி இல்லீங்க! நல்லது, கெட்டது எல்லாத்லேயும் இருக்கு! அதைப் பொருட்படுத்த முடியுமா? நாம வாழற வாழ்க்கைல தான் இருக்கு!”“சரி! சீக்கிரம் பாருங்க!”இருவரும் புறப்பட்டு வீட்டுக்கு வந்தார்கள்.ரம்யா ஏழு மணிக்கு வந்தாள்! நவீன் வர மணி பத்தாகி விட்டது!சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்த அப்பா விவரங்களைச் சொன்னார்!“அப்பா! நாப்பது ரூபாய்ல பிடித்தம், இன்ஷ்யூரன்ஸ் எல்லாம் போக முப்பதுதான் கைக்கு வருது! அதுல கார் டியூ எட்டு ரூபாய் போகுது! கைல இருபத்தி ரெண்டுதான்! என் செலவுக்கு வச்சிட்டு பதினைஞ்சு குடுத்தேன்! இப்ப அதுக்கும் வழியில்லை!”“இதெல்லம் எனக்குத் தெரியாதா தம்பி?”“இல்லைப்பா! பெண் வீட்டார், எனக்குப் பெரிய சம்பளம்னு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோட வரப் போறாங்க!”“அப்படியெல்லாம் நடக்காதுப்பா!”“பண விவகாரத்துல தப்பு வந்துடக்கூடாது!”அப்பா சந்திர மௌலிக்கு மறுபடியும் கவலை வந்தது
