சாகசக் கலை
தேவிபாலா
Editora: Pocket Books
Sinopse
பாக்டரியிலிருந்து ரிசப்ஷனுக்கு வந்தான் கார்த்தி. “என்ன பாரதி? ஆபீசுக்கு லீவா?” “ம்! உங்களைப் பார்த்தே தீர வேண்டிய கட்டாயம்! பர்மிஷனோ, லீவோ போட முடியுமா?” “பிளாண்ட்ல வேலை நிறைய இருக்கு! கஷ்டம்தான்!” “சரி! இங்கேயே அரை மணி நேரம் ஒதுக்கலாமா?” “இரு! சீஃப் என்ஜினியர்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன்!” கார்த்திகேயன் வந்தான். சற்றே ஒதுக்குப்புறமான இடமாக உட்கார்ந்தார்கள். “சொல்லு பாரதி!” பாரதி எல்லாம் சொன்னாள். கார்த்திகேயன் மௌனமாக இருந்தான். “என்ன பேசலை?” “நான் என்ன பேசறது? எங்க வீட்ல எங்கம்மா என் பேச்சைத் தாண்ட மாட்டாங்க நல்ல மருமகளா இருக்கணும்! உங்கப்பா பிடிவாதத்தை எப்படி உடைக்கப்போறே?” “ஒரு நொடில கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கலாம். ஆனா முகமுழி இல்லாம செஞ்சுகணுமானு பாக்கறேன்! பெத்து வளர்த்தவங்க. உறவை முறிச்சுக்கவும் மனசு கேட்கலை! உங்களைத் தவிர்த்து இன்னொருத்தர் கூட வாழவும் பிடிக்கலை!” “சரி என்ன யோசனை?” “அப்பா பிடிவாதம் ஜாதகம் பொருந்தணும்! இதுக்காக ஒரு பொய் சொன்னா என்ன கார்த்தி?” “என்ன பொய்?” “நல்ல ஜோசியரைப் புடிச்சு, காசைக் கொடுத்து, என் ஜாதகத்துக்குப் பொருந்துற மாதிரி உங்களுக்கு ஒரு ஜாதகம் எழுதச் சொல்லக் கூடாதா? அதுல உங்க வயசு, மற்ற விவரங்கள் பொருந்தற மாதிரி செட்டப் பண்ணிக்கலாம்.” “பாரதி! கல்யாணம் அவசியம்தான்! அதுக்காக இத்தனை பெரிய பொய்யைச் செல்லணுமா?” “கார்த்தி! என்னை நீங்க புரிஞ்சுகலை” “புரியாம என்ன? என் மேல உள்ள காதலால இதை நீ சொல்ற? நான் பொய் சொல்லலாம்! என்னோட சேர்ந்து எங்கம்மாவும் பொய் சொல்லணும்!” “எதுக்கு?'“ “நீ என்ன பேசற பாரதி? பொய்யா ஒரு ஜாதகத்தை உருவாக்கினா, நட்சத்திரம், ராசி லக்னம் எல்லாம் மாறும்!” “மாறட்டும் கார்த்தி! ஆனா மாப்பிள்ளை மாறாம, ஜாதகம் மட்டும் மாறினா என்ன தப்பு? உங்க மனசு போல இருக்கறவங்க உங்கம்மானு சொன்னீங்க! உங்களுக்காக, உங்க சந்தோஷத்துக்காக இதைச் செய்ய மாட்டாங்களா?” “நான் பேசிப்பாக்கறேன்!” “ஏன் கார்த்தி? உங்களுக்கே இஷ்டமில்லையா?” “எனக்கு ஜாதகத்துல நம்பிக்கையே இல்லைமா! சரி! அப்படியே இருந்தா, எந்த ஜோசியன் லஞ்சத்துக்கு மசிவான்?” “ஆளைப் பிடிக்கலாம்! ஜோசியனை நாம பொய் சொல்லச் சொல்லலியே! ஜாதகம் தயாரிக்கணும், அவ்ளோதானே!” “நான் எங்கம்மாகிட்டப் பேசறேன்! நாளைக்கு எனக்கு நீ போன் பண்ணு!” பாரதி புறப்பட்டு நேராக மீனா வீட்டுக்கு வந்தாள். மீனா அவளுடன் வேலை பார்ப்பவள்! நெருங்கிய தோழி! கல்யாணம் ஆனவள் அபார்ஷன் ஆகி லீவில் இருப்பவள்! மீனா மட்டும்தான் இருந்தாள். பாரதி எல்லாம் சொன்னாள். மீனா யோசிக்கத் தொடங்கினாள்.
