¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
நான் எனது அம்மாவை நேசிக்கிறேன்I Love My Mom - cover

நான் எனது அம்மாவை நேசிக்கிறேன்I Love My Mom

Shelley Admont, KidKiddos Books

Editorial: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

எந்த வயதினராக இருந்தாலும் எல்லோரும் தங்கள் அம்மாவை நேசிக்கிறார்கள். இந்த பெட்டைம் கதையில், குட்டி முயல் ஜிம்மி மற்றும் அவனது மூத்த சகோதரர்கள் அவர்களுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக சரியான பரிசைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைக் காட்ட விரும்புகிறார்கள்.அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த என்ன ஆக்கப்பூர்வமான தீர்வினைக் கண்டுபிடித்தார்கள்? இந்த விளக்கப்படங்களை உள்ளடக்கிய குழந்தைகள் புத்தகத்தில் நீங்கள் அதனை அறிவீர்கள்.இந்த குழந்தைகளுக்கான புத்தகம் உறக்க நேர சிறுகதைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இந்தக் கதை உறங்கும் நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்குப் படிக்க ஏற்றதாகவும், முழுக் குடும்பத்துக்கும் ரசிக்கக் கூடியதாகவும் இருக்கும்!
Disponible desde: 24/05/2024.
Longitud de impresión: 34 páginas.

Otros libros que te pueden interesar

  • Karippu Manigal - cover

    Karippu Manigal

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்
    Ver libro
  • Alli Arasani Malai - cover

    Alli Arasani Malai

    Pukazhenthi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Ver libro
  • Avvaiyar Moothurai - Tamil Audio Book - மூதுரை - ஔவையார் - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Moothurai - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    மூதுரை – ஒளவையார்: தமிழ் இலக்கியத்தின் பொற்கால படைப்புகளில் ஒன்றான மூதுரை,  ஒளவையார் அவர்களால் இயற்றப்பட்டது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்வியல் நெறிகளை எளிமையான மற்றும் இனிமையான சொற்களில் போதிக்கும் இந்த நூல், ஒழுக்கம், நற்பண்புகள், கல்வி, மரியாதை போன்றவற்றை கற்றுத்தரும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பள்ளிக் கல்வியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மூதுரை, தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறப்புமிக்க நூலாகும். மூதுரை தமிழ் கலாசாரத்தையும், நல்லொழுக்கப் பாதையையும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரிய பொக்கிஷமாகும்.
    Ver libro
  • Avvaiyar Nalvazhi - Tamil Audio Book - நல்வழி - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Nalvazhi - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    நல்வழி பாடல் என்பது ஒளவையார் எழுதிய நற்பண்பு மற்றும் ஒழுக்கக் கவிதைகளின் தொகுப்பு. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கை நெறி, ஒழுக்கம், மரியாதை மற்றும் நல்லொழுக்கப் பயிற்சிகளை எளிமையாக கற்றுத்தரும் இந்த நூல், தமிழ் கல்வி மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது. 
    Ver libro
  • தொல்காப்பியம் - cover

    தொல்காப்பியம்

    தஞ்சை தொல்காப்பியர்

    • 0
    • 0
    • 0
    தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. 
    தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம், எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது. 
    எழுத்ததிகாரம் 
    நூல் மரபு மொழி மரபு  பிறப்பியல்  புணரியல் தொகை மரபு உருபியல் உயிர் மயங்கியல்  புள்ளி மயங்கியல்  குற்றியலுகரப் புணரியல்  
    சொல்லதிகாரம் 
    கிளவியாக்கம் வேற்றுமை இயல் வேற்றுமை மயங்கியல் விளி மரபு பெயரியல் வினை இயல் இடையியல் உரியியல் எச்சவியல் 
    பொருளதிகாரம் 
    அகத்திணையியல் புறத்திணையியல் களவியல்  கற்பியல்  பொருளியல் மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் 
    தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம். 
    தொல்காப்பிய நூற்பாக்கள் அனைத்தையும் ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் கேட்கலாம்.
    Ver libro
  • Avvaiyar Kondrai Vendhan - Tamil Audio Book - கொன்றை வேந்தன் - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Kondrai Vendhan - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    கொன்றை வேந்தன் ஒளவையார் எழுதிய  ஒழுக்க நூல்களில் ஒன்று. இந்த நூல் மன்னர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நல்லாட்சி, தர்மம், நீதிமுறை, பக்தி, கல்வி போன்ற வாழ்க்கை நெறிகளை எளிய முறையில் எடுத்துரைக்கிறது. 
         அடக்கம், பணிவு, கருணை, அறிவு, கல்வி, பக்தி ஆகிய நல்லொழுக்கங்கள் போதிக்கப்படுகின்றன மேலும் இதில் அரசனின் கடமைகள், குடிமக்களின் நெறிகள் மற்றும் மனித வாழ்வின் உயர்ந்த வழிமுறைகள் விளக்கப்படுகின்றன. 
    இது தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஒழுக்க நூல்களில் ஒன்று  
    கொன்றை வேந்தனைப் படிப்பதன் மூலம் வாழ்க்கையில் நல்லாட்சி, நீதிமுறை, தர்ம சிந்தனை ஆகியவை வளரும்.
    Ver libro