¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
எனக்கு உண்மை பேசுவது பிடிக்கும் I Love to Tell the Truth - cover

எனக்கு உண்மை பேசுவது பிடிக்கும் I Love to Tell the Truth

Shelley Admont, KidKiddos Books

Editorial: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

ஜிம்மி என்ற குட்டி முயல் சிக்கலில் மாட்டிக்கொண்டது. தற்செயலாக, அது தனது தாய்க்கு பிடித்த பூக்களை சிதைத்து விட்டது. பொய் சொல்வது உதவி செய்யுமா? அல்லது உண்மையைச் சொல்லி பிரச்சனையை வேறு விதமாகத் தீர்க்க முயல்வது நல்லதா?இந்த வேடிக்கையான, குழந்தைகளுக்கான புத்தகத்தினூடாக இன்னும் நேர்மையாக இருப்பதற்கு உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள்.
Disponible desde: 29/05/2024.
Longitud de impresión: 34 páginas.

Otros libros que te pueden interesar

  • Valmiki Ramayanam Part 1 - Bala Kandam - cover

    Valmiki Ramayanam Part 1 - Bala...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் என்கிற எனது முயற்சியிலே ஒரு அடுத்த முக்கியமான கட்டமாய், நான் வால்மீகி ராமாயணத்தை ஒரு தொடர்கதையா சொல்லணும் என்கிற முயற்சி வெற்றிகரமா ஒலிபரப்பாகி நிறைவு அடையறதுக்கு வழக்கம்போல உங்க எல்லோருடைய ஆதரவையும், ஆசிகளையும் வேண்டிக் கேட்டுக்கிறேன். 
    இந்தப் பகுதி நூல் அறிமுகத்துடனும், கொள்ளைக்காரனாய் இருந்த ரத்னாகரன் வால்மீகி முனிவராய் உருவான கதையுடனும் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் பால காண்டத்தில் வால்மீகி ராமாயணம் உருவான கதையில் ஆரம்பித்து, தசரதர் அச்வ மேத யாகம் செய்ததன் மூலம் ஸ்ரீ ராமரும், அவரது சகோதரர்களும் பிறந்தது, விசுவாமித்திர முனிவர் பால ராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டுகோள் விடுத்தது, லக்ஷ்மணன் உடன் வர, அவருடன் வனம் சென்ற ராமன் தாடகையை வதம் செய்தது, விசுவாமித்திரரின் யாகம் காத்தது எல்லாம் சொல்லப்படுகிறது; பின் கங்கை பூமிக்கு வந்த கதை, தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த கதை, அஹல்யை சாபம் பெற்ற கதை, ராமனின் பாதம் பட்டு அவள் சாப விமோசனம் பெற்றது, ராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரருடன் மிதிலை சென்றது, அங்கே அவர்கள் விசுவாமித்திரரின் சரித்திரத்தைக் கேட்டறிந்தது, ராமன் சிவ தனுஸை ஒடித்து சீதையை மணந்தது, பின் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரசுராமரை வென்றது, அயோத்தியில் ராமனும் சீதையும் மகிழ்ச்சியான மணவாழ்வைத் தொடங்கியது – ஆகியவரை பால காண்டத்தில் சொல்லப்படுகின்றன.
    Ver libro
  • Neela Maala - cover

    Neela Maala

    Anónimo

    • 0
    • 0
    • 0
    நீலா சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த ஓர் ஏழைச் சிறுமி. மாலா சென்னையிலே புகழுடன் விளங்கும் ஒரு டாக்டரின் மகள். இருவரும் நெருங்கிய தோழிகளாகின்றனர். அவர்களது அன்பினால் பல நன்மைகள் விளைகின்றன. அவர்களது நட்பினால் பல அற்புதங்கள் நிகழ்கின்றன.ஒரு சாதாரண கிராமத்தில் தொடங்கிய இந்தக் கதை, உலக அரங்கில் எப்படி அரங்கேறியது ?
    Ver libro
  • Alli Arasani Malai - cover

    Alli Arasani Malai

    Pukazhenthi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Ver libro
  • Panchatantra Stories - cover

    Panchatantra Stories

    Thilagam, Deepika Arun, Bavya

    • 0
    • 0
    • 0
    பழைய பஞ்சதந்திரக் கதைகளை நீங்க கேட்டிருப்பீங்க—அதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி, சண்டை போட்டு, சில சமயம் கொடுமையா நடந்துக்கற கதைகள் தான் நிறைய இருக்கும், இல்லையா? 
    சிட்டுக்குருவி போட்காஸ்ட் ல குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் தொடர்ல, பழைய கதைகளை கொஞ்சம் மாத்தி, கருணையும் நல்ல மனசும் பிரச்சனைகளை தீர்க்கும்ங்கிற முடிவோட உங்களுக்கு சொல்றோம். இதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் கொல்லாம, ஏமாத்தாம, புத்திசாலித்தனமா யோசிச்சு, உணர்ச்சிகளை சரியா புரிஞ்சுகிட்டு ஒத்துமையா வாழ கத்துக்கறாங்க. இந்தக் கதைகள் உங்களை சிந்திக்க வைக்கும், யோசிக்க வைக்கும், முக்கியமா, உங்கள சுத்தி இருக்குறவங்களோட சிரிச்சிகிட்டு கிரிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ உதவி பண்ணும்னு நம்பறோம்! கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!
    Ver libro
  • Karippu Manigal - cover

    Karippu Manigal

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்
    Ver libro
  • Avvaiyar Kondrai Vendhan - Tamil Audio Book - கொன்றை வேந்தன் - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Kondrai Vendhan - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    கொன்றை வேந்தன் ஒளவையார் எழுதிய  ஒழுக்க நூல்களில் ஒன்று. இந்த நூல் மன்னர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நல்லாட்சி, தர்மம், நீதிமுறை, பக்தி, கல்வி போன்ற வாழ்க்கை நெறிகளை எளிய முறையில் எடுத்துரைக்கிறது. 
         அடக்கம், பணிவு, கருணை, அறிவு, கல்வி, பக்தி ஆகிய நல்லொழுக்கங்கள் போதிக்கப்படுகின்றன மேலும் இதில் அரசனின் கடமைகள், குடிமக்களின் நெறிகள் மற்றும் மனித வாழ்வின் உயர்ந்த வழிமுறைகள் விளக்கப்படுகின்றன. 
    இது தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஒழுக்க நூல்களில் ஒன்று  
    கொன்றை வேந்தனைப் படிப்பதன் மூலம் வாழ்க்கையில் நல்லாட்சி, நீதிமுறை, தர்ம சிந்தனை ஆகியவை வளரும்.
    Ver libro