¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
ஐ லவ் மை அப்பா I Love My Dad - cover

ஐ லவ் மை அப்பா I Love My Dad

Shelley Admont, KidKiddos Books

Editorial: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

குட்டி முயல் ஜிம்மிக்குத் தன் அண்ணன்களைப் போல மிதிவண்டியை நன்றாக ஓட்ட தெரியவில்லை.இதற்காக அவன் கிண்டல் செய்யப்படுகிறான். இதில் அப்பா ஜிம்மிக்கு எப்படி புதிய விஷயங்களை பயமின்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று காண்பிக்கும்போது தான் வேடிக்கையே தொடங்குகிறது.இந்த குழந்தைகள் புத்தகம் சிறிய பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற தொகுப்பின் பகுதியாகும்.இந்த கதையை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உறங்கும்முன் வாசிக்கத் தகுந்தது மற்றும் இதை நீங்கள் உங்கள் மொத்த குடும்பத்துடன் சேர்ந்து படித்து மகிழலாம்!!
Disponible desde: 08/05/2024.
Longitud de impresión: 34 páginas.

Otros libros que te pueden interesar

  • Ayndhaavadhu Marundhu - cover

    Ayndhaavadhu Marundhu

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கும் ஒரு சிறுகதை . இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவை சற்றும் பொருட்படுத்தாது மனிதன் எங்ஙனம் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறான் என்பதை சொல்லும் கதை. இயற்கையின் விதிகளை அவன் எந்த அளவுக்கு உதாசீன படுத்துகிறான் என்பதைச் சொல்லும் ஓர் படைப்பு.
    Ver libro
  • Valmiki Ramayanam Part 7 - Uttara Kandam - cover

    Valmiki Ramayanam Part 7 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    ராமரைச் சந்தித்து வாழ்த்த வந்த அகஸ்திய முனிவர் ராமருக்கு ராவணனின் முழு சரித்திரத்தை சொல்ல ஆரம்பிப்பது, ராவணனின் முன்னோர்கள் பற்றிய கதைகள், ராவணனும் அவன் சகோதரர்களும் பற்றிய கதைகள், ராவணன் போர் வெறியுடன் பல உலகங்களுக்கும் திக் விஜயம் செய்து பலரையும் வெல்வது, ராவணனின் அகங்காரத்தை சிவபெருமான் அடக்குவது, ராவணன் குபேரனின் மகனிடமிருந்து சாபம் பெறுவது, ராவணன் வாலியிடமும், கார்த்த வீரியார்ஜுனனிடமும் அவமானப் பட்டு, சமாதானமாய்ப் போனது, ராவணன் மகன் இந்திரஜித்தின் அபார ஆற்றல் ஆகியவை முனிவரால் சொல்லப் படுகின்றன. 
     தொடர்ந்து , அயோத்தி மக்கள் சீதையைப் பற்றி அவதூராய்ப் பேசியதை அறிந்த ராமர் அவளை வனவாசம் செய்ய அனுப்புவது, சீதை வால்மீகி முனிவருடன் தங்கி, ராமரின் வாரிசுகளான லவ குசர்களைப் பெற்றெடுப்பது, ராமரின் சிறப்பான ஆட்சி, பரதன், சத்ருக்னன், லக்ஷ்மணன் ஆகியோரின் வாரிசுகளுக்கு ஆள்வதற்கு நாடுகளை வழங்குவது, ராமர் சம்புகனை வதம் செய்வது, ராமர் அச்வமேத யாகம் நடத்திய சமயத்தில் லவ குசர்கள் வந்து வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்தைப் பாடுவது, ராமர் சீதையை மீண்டும் தன் கற்பை நிரூபிக்கக் சொல்வது, சீதை அழைத்ததும் அவள் தாய் பூமாதேவி வந்து தன்னுடன் பூமிக்கு அடியே பாதாள லோகத்துக்குக் சீதையை கொண்டு போய்விடுவது, சீதை இல்லாத ராமரின் துக்கம், மகாவிஷ்ணுவான ராமர் தம் அவதாரத்தை நிறைவு செய்து, அயோத்தி வாசிகளுடன் சரயூ நதியிலிறங்கி உலககைத் துறந்து வைகுண்டத்துக்குத் திரும்புவது – ஆகியவை இடம் பெறுகின்றன.
    Ver libro
  • Avvaiyar Kondrai Vendhan - Tamil Audio Book - கொன்றை வேந்தன் - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Kondrai Vendhan - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    கொன்றை வேந்தன் ஒளவையார் எழுதிய  ஒழுக்க நூல்களில் ஒன்று. இந்த நூல் மன்னர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நல்லாட்சி, தர்மம், நீதிமுறை, பக்தி, கல்வி போன்ற வாழ்க்கை நெறிகளை எளிய முறையில் எடுத்துரைக்கிறது. 
         அடக்கம், பணிவு, கருணை, அறிவு, கல்வி, பக்தி ஆகிய நல்லொழுக்கங்கள் போதிக்கப்படுகின்றன மேலும் இதில் அரசனின் கடமைகள், குடிமக்களின் நெறிகள் மற்றும் மனித வாழ்வின் உயர்ந்த வழிமுறைகள் விளக்கப்படுகின்றன. 
    இது தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஒழுக்க நூல்களில் ஒன்று  
    கொன்றை வேந்தனைப் படிப்பதன் மூலம் வாழ்க்கையில் நல்லாட்சி, நீதிமுறை, தர்ம சிந்தனை ஆகியவை வளரும்.
    Ver libro
  • Sotru Kanakku - cover

    Sotru Kanakku

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு  கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !
    Ver libro
  • Valmiki Ramayanam Part 2 - Ayodhya Kandam - cover

    Valmiki Ramayanam Part 2 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    அயோத்தியா காண்டத்தில், ராமனின் சிறந்த குணங்களால் நாட்டுமக்கள் அவரை நேசித்தது, ராமனுக்கு முடிசூட்ட தசரதர் தீர்மானித்தல், மந்தரையின் துர்போதனையால் கைகேயி தசரதமிடமிருந்து பிடிவாதமாய் வரம் கேட்டு வாங்கியது, அதனால் தசரைப் பீடித்த சோகம், கைகேயி பெற்ற வரப்படி ராமர் காட்டுக்குப் புறப்படத் தயாராவது, அவருடனேயே சீதையும் லக்ஷ்மணனும் வனம் செல்வது, ராமரைப் பிரிய இயலாமல்  அயோத்தி மக்கள்  தொடர்ந்து அவர் கூடவே வருவது, ராமர் வேடுவ அரசன் குஹனை சந்திப்பது, பரத்வாஜ முனிவர் வழி காட்டியபடி, சித்ரகூடத்தில் சென்று வாசம் செய்வது, அயோத்தியில் ராமரின் பிரிவு தாங்காமல் மன்னர் தசரதர் மரணமடைவது,  பரதன் அயோத்திக்கு  வந்து, சேதி கேட்டுத் தன் தாயைக் கோபிப்பது, பரதன் ராமரைக் கூட்டி வரப் பெரும் படையுடன் காட்டுக்குச் செல்வது, ராமரை நாடு திரும்பச் சொல்லி வற்புறுத்துவது, அது நடக்காததால் ராமரது பாதுகளைப் பெற்று பரதன் நாடு திரும்பிவந்து பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் செய்து ராமரது பிரதி நிதியாய் நாட்டை ஆள்வது – ஆகியவை இடம்பெறுகின்றன.
    Ver libro
  • Karippu Manigal - cover

    Karippu Manigal

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்
    Ver libro