விவேக்கின் 1000 நிமிஷங்கள்
ரமணிசந்திரன்
Editora: Pocket Books
Sinopse
ஏர்ஃபோர்ட் வழியில் - ரோட்டோரமாய் மரங்களுக்கு மத்தியில் மறைந்து நின்றிருந்தது. அந்த ஜோர்டான் மெர்ஸிடிஸ் 500 SPL மாடல் ஜீப். இந்த நூற்றாண்டின் அதிவேக ஜீப் உச்சபட்ச வேகம் நூற்றி ஐம்பது கிலோமீட்டர்.ஜீப்புக்குள் அவனும் அவளும் காத்திருந்தார்கள்.அவன்? - மனோஅவள்? - தேவி.இருபத்தைந்து வயதான மனோ - ஒரு ராயல் ஷுட்டர். கடந்த இரண்டு வருஷ காலமாய் இந்தியாவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பாயிண்ட்டுகளை குவித்து ராயல் ஷுட்டர் பெயரை வாங்கிக் கொண்டவன். எந்த ரக துப்பாக்கியானாலும் சரி... அது மனோவின் கைகளுக்கு வந்து விட்டால், அவன் சொன்னபடி தான் கேட்கும் அவன் ‘எய்ம்’ பண்ணுகிற இடத்தில்தான் தோட்டாவை அனுப்பும். பிடிவாதமான உயரம் ‘வினோத் கன்னா’வை ஞாபகம் படுத்துகிற இறுக்கமான முகம்.இருப்த்தேழு வயதான தேவி, துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெறுவதற்காக மனோவிடம் மாணவியாக சேர்ந்து, பின் காதலியாக பிரமோஷன் வாங்கிக் கொண்டவள் ஏர்ஹோஸ்டல் வேலைக்கு அப்பிளிகேஷன் போட்டால் - தயக்கம் காட்டாமல் ‘ஏர் இந்தியா’ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வழங்குகிற அளவுக்கு அழகு யோக்கியாதாம்சங்கள்.இரண்டு பேரும் ஸ்டோன்வாஷ் பேண்ட் ஷர்ட்டுக்குள் நுழைந்து இருந்தார்கள். கண்களில் பைனாகுலர் கண்ணாடி.“மனோ...”“ம்…”“அந்த பிளாஸ்க்கை எடுங்க...”“என்ன காப்பியா.”“ஆமா...”“இப்பத்தானே பத்து நிமிஷத்துக்கு முன்னாடி கொட்டிகிட்டே?”“அது எப்பவோ ஆவியா போயிடுச்சு...”“நாமென்ன பிக்னிக்கா வந்திருக்கோம்.... பிஸ்கெட்டை. கொரிச்சிட்டு காப்பி சாப்பிட்டுகிட்டு...! சை! உன்னை கூட்டிக்கிட்டு வந்திருக்கக்கூடாது...?”“ஸாரி... மனோ...’’“இதோ பார் தேவி... இங்கே காத்திட்டிருக்கிறது ஒரு காக்காயையோ குருவியையோ சுடறதுக்கு இல்லை. லாஸ்வேகா நாட்டுப் பிரதமர் ஆர்லேண்டோவை இந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியாலே சுட்டுக் குதறத்தான் மத்தியானம் மூணு மணியிலிருந்து உட்கார்ந்திட்டிருக்கோம்.”“எனக்குத் தெரியாதா என்ன...?”“அந்த சீரியஸ்னெஸ்ஸே உன்கிட்டே இல்லையே...? மரத்துல வந்து உட்கார்ற குருவிகளைப் பார்க்கிறதும் - ரோட்ல போற கார்களை எண்ணறதும். பத்து நிமிஷத்துக்கொரு ‘க்ராக் ஜாக்’ பிஸ்கெட்டை கொரிச்சு காப்பியை விழுங்கறதும்...”“சரி... இனிமே நான் சீரியஸ்” - தேவி பைனாகுலரைப் பொருத்தி கொண்டு தொலைவில் தெரிந்த ஏர்ஃபோர்ட்டைப் பார்த்தாள். விமானம் ஒன்று புறப்படும் தருவாயில் ப்ரொப்பலர்களை சுழற்றிக் கொண்டிருந்தது.“ஆர்லேண்டோவுக்கு செக்யூரிட்டி ஏற்பாடுகள் எப்படியிருக்குன்னு பார்...?”பைனா குலரை நகர்த்தினாள் தேவி. உதடுகள் 0 வடிவத்தில் குவிந்தது..
