Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
விவேக் விஷ்ணு வெற்றி - cover
LER

விவேக் விஷ்ணு வெற்றி

ரமணிசந்திரன்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

இன்டர்காம் கூப்பிட்டது.பார்த்துக் கொண்டிருந்த ஃபைலினின்றும் பார்வையை எடுக்காமல் கைநீட்டி ரிஸீவரை எடுத்தான் சித்தார்த்தன். முப்பது வயது. ஐந்தடி பத்து அங்குல உயர உடம்பு. மெலிதான இள நீல நிற சூட் - இவைகளின் கூட்டணியில் இருந்த சித்தார்த்தன் ரிஸீவரை காதுக்கு ஒட்டவைத்து “எஸ்” என்றான்.“மிஸ்டர் சித்தார்த்தன்...! அயம் காமேஷ்வரன். உங்கக்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. ஒரு பத்து நிமிஷம் எனக்கு அப்பாய்ன்மென்ட் கொடுக்க முடியுமா...?”சித்தார்த்தன் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை தள்ளி வைத்துவிட்டு பவ்யமாய் எழுந்தான்.“அப்பா...! இப்படியெல்லாம் பேசி என்னோட மனசைக் கஷ்டப்படுத்தாதீங்க... உங்க மகனைப் பார்க்க நீங்க எப்ப வேணும்ன்னாலும்... வரலாம்...!” சொல்லிக் கொண்டே அறையின் கதவுக்குப் போய் தாழ்ப்பாளைப் பிடித்து இழுத்தான்.வெளியே –செல்போனோடு அவனுடைய அப்பா காமேஷ்வரன்.“உள்ளே வாங்கப்பா...”“பத்தே பத்து நிமிஷம் போதும். பதினோராவது நிமிஷம் வெளியே போயிடுவேன்... அப்பாய்ண்மென்ட் கிடைக்குமா...?”“நீங்க மொதல்ல உள்ளே வாங்கப்பா...!”அறைக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த காமேஷ்வரனுக்கு அறுபது வயது. சற்று ஒடிசலான சிவப்பு நிற தேகம். மெலிதான நரைமுடியை படிய வாரியிருந்தார். மொட மொடப்பான கதர் வேஷ்டியும் சர்ட்டும் அவருடைய உடம்புக்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது.“உட்கார்ங்கப்பா...!”“நான் உட்காரலை... மொதல்ல இந்தப் போட்டோக்களைப் பாரு...!”ஒரு ப்ரெளன் கவரை நீட்டினார்.சித்தார்த்தன் நெற்றியில் பெரிதாய் ஒரு கேள்விக்குறி...!“என்ன போட்டோஸ்?”“வாங்கிப் பாரு... தெரியும்...”வாங்கிப் பார்த்தான். கவர்க்குள்ளே ஐந்து போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோக்கள். ஒவ்வொரு போட்டோவிலும் ஒரு பெண் நேர்பார்வை பார்த்து புன்னகைத்தாள்.“என்னப்பா இதெல்லாம்...?”“பொண்ணுங்க எப்படி இருக்காங்க...?”“நல்லாத்தான் இருக்காங்க...”“இதுல யாராவது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணிச் சொல்லு... நாளைக்கு பெண் பார்க்க போலாம்.”“அ... அப்பா...”“என்ன...?”“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்...! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்...”“எதுக்கு ரெண்டு வருஷம் வாய்தா கேட்கிறே?”“கம்பெனியோட பிசினஸ் கிராப் இப்பத்தான் ரெய்ஸாகியிருக்கு... அதை இன்னும் டெவலப் பண்ணிட்டு...இதோ பார்ரா... கம்பெனியோட பிசினஸ் கிராப்பைப் பத்தி நீ கவலைப்படாதே... உனக்கு கீழே ஒரு ஏ.வி.பி., ஒரு ஜி.எம்., ரெண்டு டி.ஜி.எம்., நாலு மேனேஜர்ஸ், ஒரு அட்மினிஷ்ட்ரேஷன் ஆபீஸர், பத்து அக்கவுண்ட் ஆபீஸர்ஸ் இருக்காங்க. இவங்க எல்லாரும் கம்பெனியோட பிசினஸ் கிராப்பை பார்த்துக்குவாங்க.”“அப்பா...! நான் என்ன சொல்ல வர்றேன்னா...?”“நோ... ஆர்க்யூமெண்ட் ப்ளீஸ்... போட்டோக்களைப் பாரு...! அஞ்சுல ஒண்ணை செலக்ட் பண்ணு.”“உடனேவா...?”“உடனே... உடனே...!”“எனக்கு அவகாசம் வேணும்...”“எப்ப எனக்கு உன்னோட முடிவைச் சொல்லுவே?”“இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு உங்க கையில இந்த போட்டோக்களில் ஏதாவது ஒண்ணு இருக்கும்.”“நிஜமாத்தானே சொல்றே...?”“இதுல பொய் சொல்ல என்னப்பா இருக்கு...?”“சித்தார்த்...! இந்தப் போட்டாக்களில் இருக்கிற பெண்கள் எல்லாமே நம்ம ஸ்டேட்டஸுக்கு ஏத்த மாதிரி பெரிய இடத்துப் பெண்கள். இதுல நீ யாரை செலக்ட் பண்ணினாலும் எனக்கு சந்தோஷமே!”“ராத்திரி நான் வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு போட்டோவைக் கொடுத்துடறேன். போதுமா...?”“போதும்...! நான் புறப்படறேன்... நீயும் வீட்டுக்கு சீக்கிரமே வந்து சேரு… உழைப்புக்கும் ஒரு எல்லை இருக்கு... ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்த உடம்பு இப்போ இல்லை. கண்ணாடிக்கு முன்னாடி ஒரு ரெண்டு நிமிஷம் நின்னு உன்னையே நீ பார்த்துக்கிட்டாத்தான் தெரியும்... எப்படி இளைச்சு போயிருக்கேன்னு...!”சித்தார்த் சிரித்தான். “அப்பா...! அடுத்த மாசம் ஊட்டிக்குப் போய் பதினஞ்சு நாள் ரெஸ்ட் எடுக்கப் போறேன். அந்த ரெஸ்ட்ல பழைய உடம்பு வந்துடும்...! கவலைப்படாதீங்க...!உன்னோட அம்மா உயிரோடு இருந்திருந்தா இப்படி உன்னை விட்டிருக்கமாட்டா... எப்பவோ கல்யாணத்தை பண்ணி வெச்சிருப்பா... நீயும் ஒரு பேரப் பிள்ளையையோ பேத்தியையோ பெத்து கொடுத்து இருப்பே...!’ காமேஷ்வரன் தனக்குள் முனகிக் கொண்டே அறையைவிட்டு வெளியேறினார்
Disponível desde: 08/02/2024.
Comprimento de impressão: 69 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Ver livro
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Ver livro
  • Mandhira Muzhakkam - cover

    Mandhira Muzhakkam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பழங்காலத்தில் ஏழீக்கரை கிராமத்தில் கொடிகட்டிப் பறந்திருந்த குடும்பம் பொன்னாட்டு மனை . மூத்த வாரிசுகளின் ஆடம்பர சுகபோகமான வாழ்க்கை முறைகளால் இன்று வறுமையில் தள்ளப்பட்டு அந்த குடும்பத்தில் மீதம் உள்ளவர்கள், பத்ரன நம்பூதிரியும் இருபத்தேழு வயதான வேலை இல்லா பட்டதாரி மகன் கிருஷ்ணன் உண்ணியும் தான். கிருஷ்ணன் உண்ணி வீட்டில் இருந்த பழைய ஓலைசுவடிகளை புரட்ட, முன்னோர்களின் நினைவு எழுந்து அவர்களை விட கெட்டிக்காரனாக வேண்டும் என்கிற ஆசை கொள்கிறான்.
    
    இந்நிலையில் புகழ்பெற்ற நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் திருமணம் மூன்றாவது தடவையாக தடைப்பட , இந்த சம்பவங்களின் பின்னணியை தெரிந்து கொள்வதற்காக பெண் வீட்டார் பிரஸ்னம் பார்க்க முடிவுசெய்கிறார்கள். தந்தையின் தூண்டுதலால் அங்கு செல்லும் கிருஷ்ணன் உண்ணி நம்பூதிரியின் பெண் திருமணம் நடைபெற , தன் திறமையை செயல் படுத்தி என்ன செய்கிறான் என்பதை அறிய கேளுங்கள் "மந்திர முழக்கம்"
    Ver livro
  • Oosi Munayil Usha - cover

    Oosi Munayil Usha

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    On the palm of a murdered man, it is written "Today - me. Tomorrow?" Usha, a very beautiful woman gets entangled in the murder mystery. To know more, listen to Oosi Munayil Usha"
    
    உஷா என்கிற ஒரு அழகான பெண்ணுக்கு ஏற்படக்கூடிய ஒரு அபாயகரமான
    சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த நாவல். கொலை செய்யப்பட்ட ஒரு நபரின் உள்ளங்கையில் இன்று நான்......நாளை ? என்று எழுதப்பட்ட வாசகத்தோடு நாவலின் நாயகி உஷா எப்படி சம்பந்தப்பட்டு, அதிலிருந்து மீள்கிறாள் என்பது இந்த ஊசிமுனை உஷா சொல்லப் போகிறாள்.
    Ver livro
  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Anônimo

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Ver livro
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Ver livro