Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
வெல்கம் டூ மார்ச்சுவரி - cover

வெல்கம் டூ மார்ச்சுவரி

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

பம்பாய்.விவேபார்லே - ஏரியாவின் கரம்சந்த் ரோடு, ஐந்தாம் எண்ணிட்ட பங்களாவுக்குள்ளே - டெலிபோனில் உற்சாகம் கொப்பளிக்க பேசிக் கொண்டிருந்தாள் மாயா. காலை ஏழுமணியாகியும் நைட் கவுனில் இருந்த மாயாவுக்கு - பம்பாய் மண்ணுக்கே உரித்தான டால்டா உடம்பு.“சுனில்! ஜூஹீ பீச் அலுத்துப் போச்சு... இன்னிக்கு எலிபெண்டா கேவ்ஸ் போகலாமா...?”“எலிபெண்டா கேவ்ஸ் மாத்திரம். என்னவாம்...? ஏழெட்டு தடவை போயிட்டோமே...?”“சரி... இன்னிக்க கமலா பார்க்...”“வேண்டாம்... அங்கே ரௌடீஸ் வந்து - மட்டமான பொண்ணுகளோடு படுத்துட்டு...”“சொல்லாதே! வேற எங்கேதான் போறதாம்...?”“நான் ஒரு இடம் சொல்வேன். நீ தட்டக்கூடாது.”“சொல்லு?”“நாரிமன் பாயிண்ட் போயிடலாம்.”“அங்க... என்ன இருக்கு?”“காட்டேஜஸ் இருக்கு. எல்லாமே கடலைப் பார்த்த மாதிரி வ்யூ. சுத்திலும் தென்னைமரக் கூட்டம்...”“காட்டேஜெல்லாம் வேண்டாம்.”“ஏன்...?”“நீ சும்மா இருக்க மாட்டே?என்ன பண்ணுவேணாம்?”“வயித்துல வாரிசோட உன் பக்கத்துல உட்கார்ந்து தாலியைக் கட்டிக்கும்படியா பண்ணிடுவே...”“சேச்சே! நா... என்ன அவ்வளவு மட்டமானவனா?”உன்னைப்பத்தி எனக்கு தெரியாதாக்கும்.”“சரி யுவர் சாய்ஸ் ஈஸ்... ஓ.கே... எலிபெண்டா கேவ்ஸே போயிடலாம்... கேட் வே, ஆஃப் இண்டியாவுக்கு எத்தனை மணிக்கு வர்றே...?”“ஷார்ப்பா நைன்... ஓ... கிளாக்...”“உன்னுடைய மதிப்பிற்குரிய மாமா - கம் - கார்டியன் - கம் - லாயர் செல்வநாயகம் உன்னை வெளியே போக அலவ் பண்ணுவாரா...?”“வழக்கம்போல ஒரு மகத்தான பொய்யைச் சொல்லிட வேண்டியது தான்...”“லேட் பண்ணிடாதே...”“8.55 க்கு இருப்பேன், போதுமா?”“போதும்... போதும்...! ரிஸீவரை வெக்கிறதுக்கு முன்னாடி ப்ளீஸ் ஒரு கிஸ்.”“இன்னும் பல் தேய்க்கலை.”“பரவால்ல குடு...இச்...”“சே! ரிஸுவரே ஈரமாயிடுச்சு...”“யூ... நாட்டி...” - ரிஸீவரை கவிழ்த்த மாயா அறைக்குள், மாமா தெய்வநாயகம் நுழைவதைப் பார்த்து - “குட்மார்னிங் அங்கிள்”“குட்மார்னிங் மை பேபி...”கட்டிலின் நுனியில் உட்கார்ந்த தெய்வநாயகத்திற்கு ஐம்பது வயது உடம்பு மீசையும் காதோற கிருதாக்களும் அவசரமாய் நரைத்திருக்க - தலையில் பாதி முடி இன்னமும் இருந்தது. உடம்பில் சதை தளராமல் இறுக்கமாய் தெரிந்தது. இந்த நிமிஷம் ஜாக்கிங் ட்ரஸ்ஸில் இருந்தார்.“என்ன அங்கிள்... இவ்வளவு லேட்டா ஜாக்கிங் போறீங்க...?”“ராத்திரி லேட் நைட் பெட். எந்திரிக்க நேரமாயிடுச்சு...”“பம்பாய் சூரியன் இந்நேரத்துக்கு சுள்ளுனு இருப்பானே...? ஜாக்கிங் வேண்டாமே அங்கிள்...”“இல்ல… பேபி... நான். வெளியே போகலை. தோட்டத்தைச் சுத்தித்தான் ஓடப்போறேன்...”“அப்படீன்னா சரிதான்...”ஆமா... போன்ல யார் கூட பேசிட்டிருந்தே...?”“சாராகிட்டே...”“விடிஞ்சா போதும்... அந்த சாரா டயலைச் சுத்திடுவாள...”“அங்கிள்! சாராவோட்ட அக்காவுக்கு இன்னிக்கு பர்த்டேயாம். ஒன்பது மணிக்கு சின்ன பார்ட்டியாம். வரச் சொல்றா…”“காலேஜ் இன்னிக்கு லீவ்தானே?”“ஆமா...”“போய்ட்டு வா...”“மத்தியானம் லஞ்ச்சும், அவங்க வீட்ல தான்...”“அப்படின்னா... சாயந்தரம் தான் வருவே?”“ஆமா அங்கிள்...சரி, நான் தோட்டத்தைச் சுத்தறேன். நீ குளிக்க கிளம்பு உங்கப்பா உயிரோடு இருந்த காலத்துல... ஏழுமணிக்கு மேல பெட்ல, யாராவது படுத்திருந்தா அவருக்கு துர்வாச கோபம் வந்துடும். அவ்வளவு பெரிய மனுவன் வாயிலிருந்து - பேட்டை ரெளடி மாதிரி கெட்ட வார்த்தையா கொட்டும்...” சொல்லிக்கொண்டே எழுந்து போனார் தெய்வநாயகம்...மாயா குளியலறைக்குள் புகுந்தாள்முழுசாய் அரை மணி நேரத்திற்குப் பிறகு,குளித்து முடித்து - டவலை மார்புக்கு மேல் முடிச்சிட்டுக் கொண்டு குளியலறையினின்றும் வெளிப்பட்டு - அறைக்கதவைச் சாத்தி தாழிட்டு விட்டு - ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் வந்து நின்றாள்இன்றைக்கு எதற்குள் நுழையலாம்...?சுடிதார்...? சல்வார் கம்மீஸ்...?“சுனிலுக்கு ஸாரிதான் பிடிக்கும். போன மாதம் எடுத்த அந்த வெளிர் மஞ்சள் நிற மைசூர் சஜ்ஜி சில்க் சேலையைக் கட்டிக்கொள்ளலாமா…?“சுவர் பீரோவைத் திறந்து - சேலை பெட்டி கோட், பிரா, ஜாக்கெட் என்று வரிசையாய் பொறுக்கிக் கொண்டுகண்ணாடி முன்பாக வந்து நின்றான். மார்புக்கு கட்டியிருந்த டவலின் முடிச்சை தளர்த்தி - பிராவை எடுத்து அணிய ஆரம்பித்தவளின் பார்வை ஏதேச்சையாய் கண்ணாடிக்குப் போனதும் - முகம் மாறினாள்.!
Available since: 02/08/2024.
Print length: 78 pages.

Other books that might interest you

  • Neela Nilaa - cover

    Neela Nilaa

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Students studying archaeology decide to venture into a deep forest to research about an old fort. Despite the warnings by the forest department, they enter the forest. Did they reach the fort? What is the relationship between the fort and moon? What is Blue Moon? Listen to Neela Nila!
    
    அடர்த்தியான ஒரு காட்டுப்பகுதிக்குள் இருக்கிறது ' காணாதது கண்டான் ' என்கிற ஒரு பழங்காலத்து கோட்டை. எந்த காலத்திலோ கட்டப்பட்ட அந்தக் கோட்டையை ஆய்வு செய்வதற்காக ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த சில ஆராய்ச்சி மாணவ மாணவிகள் வருகிறார்கள். வனத்துறை எச்சரிக்கையையும் மீறி அவர்கள் காட்டுப் பகுதிக்குள் நுழைகிறார்கள்.
    அவர்களால் ' காணாதது கண்டான் ' கோட்டையை அடைய முடிந்ததா.....? எதைத் தேடி அவர்கள் வந்தார்கள். அவர்கள் தேடிவந்த பொருளுக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்? நிலா சரி! அது என்ன நீல நிலா ......... ?
    Show book
  • Kadathal Kaatru - cover

    Kadathal Kaatru

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    உலகிலேயே மிகப் பெரிய கடத்தல்காரன். பணம் , நகை, கலைப்பொருட்கள் என்று இவன் கடத்தாத விஷயமே இல்லை. பல பேரை நேருக்கு நேர் நின்று ஒரே ஆளாக சமாளிக்க கூடிய பராக்கிரமசாலி. .குறிபார்த்து சுடுவதில் இவனை மிஞ்ச ஆளே கிடையாது. பல மொழிகளில் உரையாடுவான். இவனிடம் ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும், எந்த பெண்ணும் மயங்கிவிடுவாள். ஒரு ஹீரோவின் அத்தனை லட்சணங்களும் பொருந்திப்போகும் இவன், நிஜத்தில் ஹீரோவா , வில்லனா? தாவூத் இஸ்மாயில் . போலீஸ் இவனுக்கு நண்பனா எதிரியா? இப்படிப்பட்ட திறமைசாலிக்கு வேறு எதிரிகள் இருக்கமுடியுமா? இப்போது எதற்காக இவன் இந்தியா வந்திருக்கிறான்? அவனை தீர்த்துக்கட்டத் தயாராக இருக்கும் எதிரிகள் அவனை சும்மா விடுவார்களா? பரபரப்பான திருப்பங்களும் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளும் நிறைந்த இந்த நாவலை எழுதியவர், கோட்டயம் புஷ்பநாத். மலையாளத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விறுவிறுப்பான நாவல்களை எழுதிய இவரின் படைப்புகள் தமிழ், ஹிந்தி, வங்காளம், குஜராத்தி உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
    Show book
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Show book
  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Show book
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Anonymous

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Show book
  • Anjathe Anju - cover

    Anjathe Anju

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "இரண்டு பணக்கார இளைஞர்கள் தனியாக உட்கார்ந்து குடிபோதையில் பல விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேடிக்கையாக பேச ஆரம்பித்த ஒரு விஷயம் வினையாக மாறுகிறது.
    
    அதாவது என்னதான் திட்டம் போட்டு ஒருவரை கொலை செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து கொலையாளியால் தப்ப முடியாது. அவன் ஏதாவது தப்பு செய்து மாட்டிக்கொள்வான் என்று ஒருவன் சொல்ல, இன்னொரு நண்பன் அதை மறுக்கிறான்.
    
    "புத்திசாலித்தனமாய் யோசித்து துல்லியமாய் திட்டம் போட்டு ஒருவரை கொலை செய்தால் போலீஸையும், சட்டத்தையும் ஏமாற்ற முடியும். ஒரு கொலை செய்கிறேன். நான்தான் கொலை செய்தேன் என்பது போலீஸுக்கு எந்தக்காலத்திலும் தெரியப் போவதில்லை. ஒரு வருட கால அவகாசம். போலீஸ் கையில் நான் மாட்டிக் கொள்ளாவிட்டால் உன் சொத்தை என்னுடைய பெயர்க்கு நீ எழுதி வைக்க வேண்டும். நான் மாட்டிக்கொண்டல் என்னுடைய சொத்து உனக்கு..."
    
    இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
    
    பந்தயப்படி அந்த நண்பன் கொலை செய்தானா.... கொலை செய்திருந்தால் பிடிபட்டானா? என்பதை சொல்லும் கதைதான் அஞ்சாதே அஞ்சு."
    Show book