Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
வானவில் குற்றம் - cover
LER

வானவில் குற்றம்

ரமணிசந்திரன்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

ப்ரதாப் உலுக்கியதில் சட்டென்று கண் விழித்தாள் அஞ்சலா. பேசிக்கொண்டே வந்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே ஞாபகம் இல்லை. ப்ரதாப்பின் தோளில் தலையை சாய்த்து - உட்கார்ந்திருந்தபடியே தூங்கி விட்டிருந்தாள்.ட்ரெயின் வேகமாய்த் தடக்கிக் கொண்டு இருந்தது. இரண்டு பக்கமும் ஜன்னல்களுக்கு வெளியே அடர்த்தியாய் இருட்டு. கொஞ்சமாய்த் திறந்திருந்த ஷட்டர் வழியே ஐஸ் தடவின காற்று ஜில்லென்று கம்பார்ட்மென்ட்டுக்குள் பாய்ந்து - உடம்புக்குள் ஊசியாய் ஏறியது.அஞ்சலா கண்களை தேய்த்துக் கொண்டே கேட்டாள்.“நல்லூர் வந்தாச்சா?”“நெருங்கிட்டோம்...”“மணி எத்தனை...?”“பதினொன்னு பத்து...”“இதுக்கு முன்னாடி அந்த ஊருக்குப் போன தில்லைன்னு சொன்னீங்க இல்லையா?”“ஆமா.”“புதுசா அந்த ஊருக்குள்ள இந்த ராத்திரில இறங்கி... எங்காவது எசகுபிசகா மாட்டிக்கப் போறோம் பிரதாப்...”“டோண்ட் ஒர்ரி! நான் எல்லா விபரமும் விசாரிச்சிட்டு தான் புறப்பட்டேன். ரெயில்வே ஸ்டேஷன் வாசல்லயே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு... அந்த ஸ்டாண்ட்ல எத்திராஜ்ன்னு கேட்டா எல்லோருக்குமே தெரியும்... நேராஅவர் வீட்ல கொண்டு போய் விட்டுருவாங்க... எதுக்கும் இருக்கட்டுமேன்னு... ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து அவர் வீட்டுக்கு போற வழியை படம் போட்டு வாங்கி வச்சிருக்கேன்... இவ்வளவு ரிஸ்க் எடுத்து வர்றோம்... அதுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யாம வந்துருவேனா?”“உங்க மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு...! காலைல எத்திராஜ்க்கு ஃபோன் பண்றதா சொன்னீங்களே... பண்ணினிங்களா?”“பண்ணினேன். அவர் நமக்காக காத்திட்டிருக்கிறதா சொன்னார்.”அடுத்த அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு -ஜன்னலுக்கு வெளியே இருந்த அடர்த்தியான இருட்டுக்கு நடுவே - சில வெளிச்சப் புள்ளிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.ரயிலின் வேகம் குறைந்திருந்தது. ப்ரதாப் எழுந்து கொக்கியில் மாட்டியிருந்த ஹேண்ட்பேகைக் கையில் எடுத்துக் கொண்டான்.“அஞ்சலா... ஸ்டேஷன் வந்தாச்சுன்னு நினைக்கறேன்...”“இங்கே எவ்வளவு நேரம் நிக்கும்...?”“ரெண்டு நிமிஷம்ன்னு சொன்னாங்க.ரயிலில் பிரேக் பிடிக்கும் சப்தம், எண்ணெய் வறண்ட கேட் திறப்பது போல் 'ரீச்' சென்று தண்டவாளத்தில் எதிரொலித்தது.தொடர்ந்து - ட்யூப் லைட் வெளிச்சங்களும் - பிளாட்பாரமும் கண்ணில் விழுந்தன.அஞ்சலாவும் பிரதாப்பும் கம்பார்ட்மென்டின் கதவு அருகே வந்தார்கள்.அவர்களைத் தவிர நாலைந்து பேர் அந்த ஸ்டேஷனில் இறங்குகிற முஸ்தீபுகளில் இருந்தார்கள்.ரயிலின் இயக்கம் மெல்ல மெல்லக் குறைந்து சைபராகியதுமற்ற ஆசாமிகள் இறங்கியதைத் தொடர்ந்து அஞ்சலாவும், பிரதாப்பும் ப்ளாட்பாரத்துக்கு வந்தார்கள். சின்ன ஸ்டேஷன் போலத்தான் தோற்றமளித்தது.ஒரே ஒரு ஆள் மட்டும் 'காபி... காபி' என்று கத்தியபடி கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டாய் - சென்று கொண்டிருக்க - மற்றபடி நிசப்தம்.“காப்பி சாப்பிடறியா அஞ்சலா...?”“ரயில்வே ஸ்டேஷன் காபிக்கு அந்த குழாய் தண்ணியே பெஸ்ட்.”கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரின் அறையைக் கடந்தார்கள். குறுகலான வெளியேறும் வழியில் நுழைந்து ஸ்டேஷன் வாசலைத் தொட்டார்கள். நேர் எதிரே சில ஆட்டோக்கள் முகத்தைக் காட்டிக் கொண்டு தெரிந்தன. அதற்கு அப்பால் ஜிப்சி கூட்டங்கள் வானமே கூரையாய் உருண்டிருந்தார்கள். ஆட்டோ ஸ்டாண்டை நெருங்கினார்கள்.பின் சீட்டில் சுருண்டு படுத்திருந்த டிரைவரைத் தட்டி எழுப்பினான் ப்ரதாப். டிரைவர் சிலுப்படித்துப் போன கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு எழுந்தார். சாராய நெடி நாசிக்குள் மூர்க்கமாய் இறங்கியது. கிருதாவை நோக்கிப் போன மீசையும், கழுத்தில் மாட்டியிருந்த தாயத்துக் கயிறும் ரெளடித் தனம் கொடுத்தது.“எங்க போகணும்...?”பிரதாப் இடத்தைச் சொன்னதும் - நிமிர்ந்தார்.“எத்திராஜ் வீட்டுக்கா...!”கேட்டுக் கொண்டே அஞ்சலாவை மேலும் கீழும் பார்த்தார்...அஞ்சலா ப்ரதாப்பின் கையைப் பற்றிக் கொண்டாள்.அவன் தோளோரம் கிசுகிசுத்தாள்
Disponível desde: 08/02/2024.
Comprimento de impressão: 80 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Engae En Kannan - cover

    Engae En Kannan

    Anônimo

    • 0
    • 0
    • 0
    பல தலைமுறைகளாக ஒரு ஐயங்கார் குடும்பத்தில் ஒரு கிருஷ்ண விக்கிரகம் பூஜிக்கப்பட்டு வருகிறது. காசி யாத்திரை செல்லும் சமயம் விக்கிரகத்தையும் உடன் எடுத்து செல்கிறார் ஐயங்கார். ரயில் பயணத்தில் கிருஷ்ண விக்கிரக பெட்டி, கடவுள் இல்லை என்று சொல்லும் ஒரு நாத்திகன் வசம் கிடைக்கிறது. அவன் நாத்திகன் ஆனால் நல்லவன். ஐயங்கார் அவனை கண்டறிந்து தன் சார்பில் அந்த விக்கிரகத்தை பூஜிக்க சொல்கிறார். அவனும் அவருக்காக பூஜிக்கிறான். அதுவரை வராத கிருஷ்ணனும் வருகிறான். அதிசயங்கள் புரிகிறான். எப்படி? பலவித திருப்பங்கள் கொண்ட பரபரப்பான கதை.
    Ver livro
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Anônimo

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Ver livro
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Ver livro
  • Uyirin Marupakkam - cover

    Uyirin Marupakkam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Where is the soul in your body? How does it leave the body when someone's dead? Only mystics know! A mystic returns after his death. A journalist who investigates this story. A very different yet intriguing story. Listen to Uyirin Marupakkam.
    
    உடம்பில் உயிர் எந்த பாகத்தில் இருக்கிறது? அது எப்படி வெளியேறுகிறது? இந்த கேள்விகளுக்கு சித்தர்களை தவிர யாருக்கும் விடை தெரியாது. இறந்தபின் திரும்ப உயிரோடு வரும் ஒரு சித்த சன்யாசி. அது எப்படி என்று ஆராயும் பத்திரிகையாளன். வித்தியாசமான களம், விறுவிறுப்பான போக்கு.
    Ver livro
  • Nirkaadhe Gavanikkadhe - cover

    Nirkaadhe Gavanikkadhe

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    Two rich young men are not satisfied with the luxurious life they have but want to enjoy adrenaline rush by committing some heinous crime! This is the story of the police playing hide and seek with these 2 youngsters. Listen to Nirkadhe Gavanikkadhe.
    
    இரண்டு பணக்கார இளைஞர்களுக்கு அத்தனை உல்லாசத்தையும் அனுபவித்ததும் சாகசமான குற்றங்கள் செய்யும் விபரீத எண்ணம் ஏற்படுகிறது.காவல்துறைக்கும் இவர்களுக்கும் நடுவில் நிகழும் பூனை, எலி துரத்தல்களும், மோதல்களுமே கதை.
    Ver livro
  • Iraval Sorgam - cover

    Iraval Sorgam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
    மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி நெஞ்சுவலியால் அவதிப்படும் தன்னுடைய அப்பாவைக் கூட்டிக்கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வருகிறாள். இரண்டு ட்யூட்டி டாக்டர்களின் காமப்பார்வை அவள் மேல் விழுகிறது. அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பித்தாளா இல்லையா என்பதும், அதற்குப் பிறகு நடக்கும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்தது இந்த இரவல் சொர்க்கம்."
    Ver livro