Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
தூரத்துப் பொன்மான் - cover
LER

தூரத்துப் பொன்மான்

ரமணிசந்திரன்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

செளம்யா மறுபடியும் அந்த விளம்பர வாசகங்களை படித்தாள். “உங்களிடம் நல்ல ஜாதி வைரங்கள் இருக்கிறதா...? கேட்கும் விலை கொடுத்து வாங்க ஆர்வமாய் உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வரவும். கடிதத் தொடர்போ - டெலிபோன் பேச்சோ - வேண்டாம். எந்த நேரத்திலும் சந்திக்க வேண்டிய முகவரி: எம்.அடிசன், நம்பர் தர்ட்டி டூ, ரெயின்போ மிஸ்ட் ஹில், குன்னூர்.”அவள் விளம்பரத்தைப் படித்துவிட்டு நிமிர்ந்தபோது - லட்சுமி அம்மாள் அந்த ஃபைலை புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.“மேடம்...”“அந்த விளம்பரத்தைப் படிச்சியா...?”“ப... படிச்சேன்…”“அந்த அடிசனைப் பார்க்க நீதான் போகப் போறே... கார்லதான். டிரைவர் உன்கூட வருவான்...”சௌம்யா உட்கார்ந்திருக்க லட்சுமி அம்மாள் தொடர்ந்தாள். “நீ அடிசனைச் சந்திச்சு சொல்ல வேண்டியதெல்லாம் இதுதான்... நல்ல ஜாதி வைரங்கள் இருக்கு... எப்ப வேணுமின்னாலும் பார்க்க வரலாம். வியாபாரம் ரகசியமாய் முடிய வேண்டும். யார்க்கும் தெரியக்கூடாது…”“மேடம்...”“சொல்லு...”“விளம்பரம் குடுத்திருக்கிற அந்த அடிசன் எப்படிப்பட்டவர்ன்னு தெரியாமே... நாம மூவ் பண்றது சரியா மேடம்…?”லட்சுமி அம்மாள் தன் ஆரோக்கியமான பற்களைக் காட்டி புன்னகைத்தாள். “அந்த சந்தேகம் உனக்கு வரும்னு தெரியும். அடிசன் ரொம்பவும் நல்லவர். அற்புதமான ஜெம்மாலிஸ்ட்...”“மேடம்! நீங்க அவரை...”“பார்த்திருக்கேன்... போயிருக்கேன்... பழகுறதுல அடிசன் ரொம்பவும் இனிமையானவர்... கார்ல இங்கிருந்து குன்னூர் போக ரெண்டு மணி நேரம். அடிசன் கிட்டே ஒரு அரை மணி நேரப் பேச்சு... திரும்பவும் ரெண்டு மணி நேர பயணத்துல நீ இங்கே வந்துடலாம்... என்ன சொல்றே...?”“சரி... சரி... மேடம்...”“உன் முகத்துல சந்தோஷத்தைக் காணும். பயப்படறியா...?”“இல்ல மேடம். போய்ட்டு வர்றேன்...”“நீ எதுக்காக போறன்னு டிரைவருக்கு தெரியக்கூடாது. விஷயம் சுமுகமா இருக்கணும்...”“எஸ் மேடம்.”“நான் சொல்ற பேரையெல்லாம் நோட் பண்ணிக்க.”சௌம்யா ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொள்ள லட்சுமி அம்மாள் கையில் வைத்திருந்த ஃபைலைப் புரட்டியபடியே சொன்னாள்.“கிம்பர்லி-37, ஸோபியா-70, எட்டாரா-55, நீலாம்பர்-66.”சௌம்யா குறித்துக் கொண்டதும் சொன்னாள்.“இதெல்லாம் நம்மக்கிட்டே இருக்கிற டயமண்ட்ஸோட ஜாதிப் பெயர்கள். அடிசன் கேட்கும்போது அவர்கிட்டே சொல்லணும்.”“எஸ் மேடம்.”“போய் டிபன் சாப்பிட்டு கிளம்பு.”சௌம்யா எழுந்தாள்கார் குன்னூரைத் தொட்டபோது ஒன்பதரை மணி. சூரியன் வானத்தில் இருந்தாலும் குளிர் உறைத்தது. ஜனங்கள் ஸ்வெட்டர்களோடும்; கம்பளி, குல்லாக்களோடும் நடந்து போனார்கள். ப்ளம்ஸும் வால்பேரியும் தள்ளுவண்டிகளில் நிரம்பியிருந்தன. ஊட்டி போகும் டூரிஸ்ட் பஸ்களில் வடநாட்டு முகங்கள் இந்தி சம்பாசணைகளோடு தெரிந்தன.“டிரைவர்!”டிரைவர் திரும்பி செளம்யாவைப் பார்த்தாள்.“உங்களுக்கு ரெயின்போ மிஸ்ட் ஹில் தெரியுமா?”“தெரியாதம்மா... நானே உங்ககிட்ட கேக்கலாம்னு இருந்தேன்...”“சரி! அந்த டிராபிக் கான்ஸ்டபிள்கிட்டே கேப்போம்... வண்டியை அவர் பக்கமா கொண்டு போ...”டிரைவர் கொண்டு போனான்.டிராபிக்கை ஒழுங்குபடுத்த மறந்துவிட்டு - ஒரு பழக்கூடைக்காரியிடம் ராத்திரி பார்த்த சினிமாவைப் பற்றி கமெண்ட் அடித்து – சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் - செளம்யா, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று விளிப்பதைக் கேட்டதும் திரும்பினார்
Disponível desde: 11/02/2024.
Comprimento de impressão: 142 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Then Kizhakku Minnal - cover

    Then Kizhakku Minnal

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Protagonist who lives in the US with his family is forced to come back to India as his son is dying of some weird disease. He is advised to pray to his family deity. He encounters various supernatural obstacles in his journey. Listen to Then Kizhakku Minnal.
    
    குலதெய்வ வழிபாடு - அதன் பின் உள்ள சக்தியை கூறிடும் நாவல். அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கதாநாயகனின் மகனுக்கு விசித்திர நோய். குல தெய்வ வழிபாடு செய்தால் குணமாகும் என்கிறது ஜோதிடம். அதன் பொருட்டு இந்தியா வருபவனுக்கு விசித்திர சோதனைகள். அவ்வளவும் அமானுஷ்யம்!
    Ver livro
  • Porkaasu Thottam - cover

    Porkaasu Thottam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This is a novel that goes back and forth between the past and the present. There is a treasure in a cemetery. The cemetery holds in it a lot of secrets. What are they? This story is sure to drag you into its thrilling world. Listen to Porkaasu Thottam.
    
    இது ஒரு வரலாறும் சமகாலமும் கலந்த புதினம். புதையல் தான் கதையின் மையம். குறிப்பாக மயானமும் மயானத்தில் இருக்கும் ரகசியங்களும் எவரும் அறியாதவை. கேட்பவர்களை தன் கதைக்களத்திற்குள் இழுத்துச்செல்லும் விறுவிறுப்பான நாவல்.
    Ver livro
  • Detective DK - Case No:04 - சாத்தான்காட்டு ரகசியம் - Where death waits! - cover

    Detective DK - Case No:04 -...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும். மர்மம், திகில், சாகசம் நிறைந்த இந்த படைப்பை தவற விடாதீர்கள்! 
    Pala nooru aandugalaga yaarum anaaga mudiyatha Saathaan Kaadu… Anga pona yellaaarum marma maathiri sethutu vandhirkanga. Aana andha kaattukulla oru periya ragasiyam amanooshyatha thaandi marandhu irukku. Nam hero DK eppadi andha marma ragasiyatha veli kondu varraan-nu kaanum idha video miss pannadheenga! Marmam, thigil, saagasam niraintha oru vera level experience. 
    An Ancient Forest. A Deadly Curse. One Man Dares to Enter. For centuries, no one has returned alive from Saathankadu – a forest whispered to be cursed. Those who entered met mysterious and violent deaths. Locals speak of ghostly shadows, whispers in the dark, and an unseen presence that guards something… ancient. But when a strange symbol connected to a powerful political figure appears in the forest's border, Detective DK and Rishi must step in not just to uncover the truth, but to survive it. What lies beyond the fear? A lost history? A hidden power? Saathankadu Ragasiyam is the fourth thrilling adventure in the Detective DK Investigations series - blending psychological horror, Tamil folklore, and raw investigation in one unforgettable tale.
    Ver livro
  • May June Julie - cover

    May June Julie

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    ஒரு இளம் பெண் திடிரென்று தற்கொலை செய்து கொள்கிறாள். அவளின் கணவன் தன் மனைவி தற்கொலை செய்துகொள்ள எந்தக் காரணமும் இல்லை என்று நம்புகிறான். துப்பறிவாளர்கள் பரத்-சுசீலா களத்தில் இறங்க, மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.
    
    A young woman kills herself. Her husband swears that there is no reason for her to commit suicide. Detectives Bharath and Suseela start investigating and mysterious incidents unfold. To know more listen to May June Julie.
    Ver livro
  • Engae En Kannan - cover

    Engae En Kannan

    Anônimo

    • 0
    • 0
    • 0
    பல தலைமுறைகளாக ஒரு ஐயங்கார் குடும்பத்தில் ஒரு கிருஷ்ண விக்கிரகம் பூஜிக்கப்பட்டு வருகிறது. காசி யாத்திரை செல்லும் சமயம் விக்கிரகத்தையும் உடன் எடுத்து செல்கிறார் ஐயங்கார். ரயில் பயணத்தில் கிருஷ்ண விக்கிரக பெட்டி, கடவுள் இல்லை என்று சொல்லும் ஒரு நாத்திகன் வசம் கிடைக்கிறது. அவன் நாத்திகன் ஆனால் நல்லவன். ஐயங்கார் அவனை கண்டறிந்து தன் சார்பில் அந்த விக்கிரகத்தை பூஜிக்க சொல்கிறார். அவனும் அவருக்காக பூஜிக்கிறான். அதுவரை வராத கிருஷ்ணனும் வருகிறான். அதிசயங்கள் புரிகிறான். எப்படி? பலவித திருப்பங்கள் கொண்ட பரபரப்பான கதை.
    Ver livro
  • Oru Gram Dhrogam - cover

    Oru Gram Dhrogam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "துரோகத்தில் கூட ஒரு கிராம் பத்து கிராம் என்று அளவு உண்டா ? என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்பதற்கு சிறிய உளி ஒன்று போதும். அதேபோல் ஒரு பெரிய அணைக்கட்டு உடைவதற்கு ஒரு சிறிய விரிசலும் ஒரு குடம் தூய்மையான பால் ஒரு துளி விஷத்தால் விஷமாக மாறவும் போதுமானது. அதேபோல் நல்ல நட்பும், இனிய உறவுகளும் முறிந்து போக ஒரு சிறிய துரோகம் போதும்.
    
    இந்த நாவலில் ஒரு கிராம் துரோகம் என்ன என்பது நாவலின் கடைசிப் பகுதியை நீங்கள் கேட்கும்போதுதான் தெரியும். கதையின் மையக்கரு ஒரு விஞ்ஞான விஷயம்தான். அது சோலார் எனர்ஜி சம்பந்தப்பட்டது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் சோலார் எனர்ஜியை உபயோகப்படுத்தி எத்தனையோ அதிசயங்களை விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியொரு அற்புதம் இந்த நாவலிலும் நிகழ்த்தப்படுகின்றது.
    
    இந்த விஞ்ஞான த்ரில்லர் நாவலில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸர் விவேக் நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் வருகிறார். அவர் குற்றவாளிகளை நோக்கி நெருங்க வகுக்கிற வியூகங்கள் கேட்க வாசகர்களைத் திகைக்க வைக்கும்.
    
    ஒட்டுமொத்த நாவலும் டெல்லியோடு சம்பந்தப்பட்டது என்பதால், டெல்லிக்கு போய்விட்டு வந்த உணர்வும் வாசகர்களுக்கு ஏற்படும் என்பது உறுதி."
    Ver livro