¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
பகல் நேர மின்னல் - cover

பகல் நேர மின்னல்

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

வேதாவின் இருதயம் ஒரு கணம் ஸ்தம்பித்து பின் ரத்தத்தை இறைக்க ஆரம்பித்தது.“எ... என்ன சொ... சொன்னீங்க... சீனிவாசன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காரா...?”“ஆ... ஆமா...”“என்னாச்சு...?”“பஸ்ஸை விட்டு இறங்கி ஆபீஸ்க்கு போகிற வழியில... யாரோ ஒரு பொண்ணை ரெண்டு ரெள ங்க கலாட்டா பண்ணிகிட்டு இருந்திருக்காங்க... சீனி சன் அவங்களை கண்டிக்கப்போக கத்தியால் குத்திட்டாங்க...”வேதாவுக்கு மார்பை அடைத்தது.“க... க... கத்தியால் குத்திட்டாங்களா...?”“ப்ளீஸ்! சீக்கிரம் வாங்க...! சீனிவாசன் உங்க பேரைச் சொல்லித்தான் முனகிட்டிருக்கான்...”“ஏதும்... ஆபத்தில்லையே...?”“டாக்டர் ஒண்ணும் சொல்லலை...”“இப்ப... வர்றேன்...” ரிஸீவரை வைத்து விட்டு அரை நிமிஷத்திற்கு முன்னால் இருந்த சந்தோஷமெல்லாம் தொலைந்து போயிருக்க மானேஜரின் அறையை நோக்கி ஓடினாள்.விஷயத்தைக் கேள்விப்பட்ட நந்தகோபால் ரிவால்விங் நாற்காலியினின்றும் அதிர்ந்து போய் எழுந்தான்.“வாங்க... என் கார்லேயே போயிடலாம்...” கிளம்பினார்கள்தாம்பரம் ஜி ஹெச். நல்ல வெய்யிலில் நிறைய அவுட் பேஷண்ட்களோடு கசகசப்பாய் தெரிய காஸுவால்டி வார்டுக்கு முன்னால் சீனிவாசன் நண்பன் சதானந்தம் கலவர முகமாய் நின்றிருந்தான்.பார்த்ததும் ஓடி வந்தான்.“ஆபரேஷன் நடந்திட்டிருக்கு...”வேதா பேச்சு வராமல் திணற நந்தகோபால் கேட்டான்.“டாக்டர் என்ன சொன்னார்...?”“கத்திக்குத்து கல்லீரல் வரைக்கும் இறங்கிட்டதாகவும்... ஒரு ஆபரேஷனை பண்ணிட்டுத்தான் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும்ன்னு சொல்லிட்டார்.”“கத்திக்குத்து சம்பவம் எங்கே நடந்தது...?”“சிட்கோ ஸ்டாப்பிங்கில் இறங்கி நானும் சீனிவாசனும் எங்க ஆபீஸுக்கு போகிற ரோட்ல நடந்துகிட்டிருந்தோம். வழியில ஒரு பூக்கார பொண்ணை துரத்திகிட்டு ரெண்டுபேர் பைக்ல வந்து வம்பு பேசிட்டிருந்தாங்க... ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ஏரியாவில் பைக்ல வந்தவங்க துணிச்சலா அந்தப் பொண்ணோட கையைப் பிடிச்சு இழுக்கவும்... சீனிவாசன் சூடாகி நியாயம் கேக்கப் போனான். ரெண்டு வார்த்தைகூட பேசியிருக்க மாட்டான்... ரெண்டு பேர்ல ஒருத்தன் கையில் மடக்கி வெச்சிருந்த பேனாக் கத்தியை விரிச்சு... சீனியோட வயத்துல் குத்திட்டான்”“குத்தினவங்களை பிடிச்சீங்களா...?”“நான் முயற்சி பண்ணினேன். ஆனா முடியலை... கத்தியைக் காட்டிகிட்டே பைக்ல ஏறி பறந்திட்டாங்க...”“பைக் நெம்பரைப் பார்த்தீங்களா?”“ரத்தமா கீழே கிடக்கிற சீனிவாசனை அள்ளி ஹாஸ்பிடலுக்கு உடனே கொண்டு போகணும்ங்கிற... ஞாபகம்தான் இருந்ததே தவிர வேற எந்த ஞாபகமும் எனக்கு இல்ல...”“போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங் ளாஇன்ஸ்பெக்டர் உள்ளே இருக்கார்...”வேதா தளர்ந்து போய் அங்கே சுவரோரமாய் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொள்ள நந்தகோபால் வார்டுக்கு முன்னால் நின்றிருந்த இன்ஸ்பெக்டரை நோக்கிப் போனான்.
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 89 páginas.

Otros libros que te pueden interesar

  • Mattravai Nalliravu 105kku - cover

    Mattravai Nalliravu 105kku

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "சித்ரா ஆபீஸ் வேலைக்குப் போகிற ஒரு குடும்பப்பெண். கணவன் முரளி பலவித கெட்ட
    பழக்கங்களுக்கு அடிமையானவன். சரிவர வேலைக்குப் போகாமல் ஏதாவது காரணம்
    சொல்லிக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறான்.
    அன்றைய தினம் ஆபீஸீக்குப் போகும் சித்ராவுக்கு எதிர்பாராத பிரச்சினை ஏற்படுகிறது.
    அவளுடைய கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் பத்மநாபன் அவளை தன்னுடைய அறைக்கு வரவழைத்து ஒரு சிறிய சூட்கேஸை அவளிடம் கொடுத்து அவளுடைய வீட்டில் பத்திரமாய் வைத்திருந்து ஒரு வாரம் கழித்து திரும்பவும் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்கிறார். சித்ரா முதலில் மறுத்தாலும், கம்பெனியின் எம்.டி. சொல்கிறாரே என்று தயங்கி வாங்கிக் கொள்கிறாள். அதற்கு அடுத்த நாளே, ஒரு அதிர்ச்சியான விஷயம் நடக்கிறது. என்ன செய்வது என புரியாமல் இருப்பவளுக்கு மேலும் அதிர்ச்சி தரக் கூடிய
    சம்பவங்கள் நடைப்பெருகின்றன. சித்ரா அந்த பிரச்சினைகளையெல்லாம் எப்படி
    புத்திசாலித்தனமாய் சமாளித்து வெளிவருகிறாளா இல்லையா என்பது தான் மற்றவை
    நள்ளிரவு 1.05க்கு என்பதின் கதை. அது சரி.., தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன
    சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? கேட்டால் புரியும் மர்மம் விலகும்."
    Ver libro
  • Kadaisi Theekkuchi - cover

    Kadaisi Theekkuchi

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஒரு விஞ்ஞானி தனது பயோ டெக்னாலஜி கண்டுபிடிப்புகளை எதிர்கால மனிதசமூகத்தை காப்பாற்றும் நோக்கில் தன் மனைவியுடன் பாதுகாக்க போராடுகிறார். தொடர்ச்சியாக உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல்களையும், எதிர்பாராத சம்பவங்களையும் இந்த ஜோடி ஒரு கொலையை மறைக்கும்போது எதிர்கொள்கின்றனர்.
    Ver libro
  • Vittu Vidu Karuppaa - cover

    Vittu Vidu Karuppaa

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    The village of Vettaikara Mangalam has a strange rule. Only if the village deity Karuppusamy approves, will the villagers do anything. A doctor falls in love with Ratna, a young girl from the village. When he proposes, she asks him to seek the approval of Karuppusamy. Who is this Karuppusamy? Doctor Neena comes in search of the answer. What does she find out? Listen to Vittu Vidu Karuppa.
    
    வேட்டைக்காரன் மங்கலம் கருப்புசாமி துடியான சாமி. இந்த சாமி உத்தரவு தந்தால் தான் யாரும் எதையும் செய்யலாம். இந்த ஊரை சேர்ந்த ரத்னாவை டாக்டர் ஒருவர் காதலிக்க ரத்னா கருப்பு உத்தரவு தராது என்னை காதலிக்காதே என்கிறாள். கருப்பு யார் காதலிக்க அனுமதி தர? டாக்டர் நீனா என்பவள் உண்மையை கண்டறிய வருகிறாள். கண்டுபிடித்தாளா?
    
    ஒரு கிராமத்து மர்மம் தான் விட்டு விடு கருப்பா!
    Ver libro
  • Iraval Sorgam - cover

    Iraval Sorgam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
    மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி நெஞ்சுவலியால் அவதிப்படும் தன்னுடைய அப்பாவைக் கூட்டிக்கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வருகிறாள். இரண்டு ட்யூட்டி டாக்டர்களின் காமப்பார்வை அவள் மேல் விழுகிறது. அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பித்தாளா இல்லையா என்பதும், அதற்குப் பிறகு நடக்கும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்தது இந்த இரவல் சொர்க்கம்."
    Ver libro
  • Moodu Pani Nilavu - cover

    Moodu Pani Nilavu

    Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    மதிப்பும் மரியாதையும் பணச்செழிப்பும் நிறைந்த குடும்பத்தின் ஒரே மருமகள் யமுனா. பொறுப்பாகவும் அன்பாகவும் தன் புகுந்த வீட்டில் வாழும் யமுனாவின் மேல் ஒரு கொலை பழி சுமத்த படுகிறது. நிழலாய் தொடரும் சங்கடங்களை அவள் எப்படி சமாளிக்கிறாள்? தெரிந்து கொள்ள கேளுங்கள் - மூடு பனி நிலவு
    Ver libro
  • Vivek Irukka Bayamen - cover

    Vivek Irukka Bayamen

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    This is a political thriller. A dramatic political change in Tamil Nadu. Work is going on behind the scenes for the plot to occur. For that an MP is coming to Chennai from Delhi with a bizarre plan. Traumatic events are layered within the execution of that plan. Unexpected deaths. Vivek is all set to find out the facts. Listen to Vivek Irukka Bayamen to know how he sets things in place.
    
    இது ஒரு அரசியல் த்ரில்லர். தழிழ்நாட்டில் அதிரடியான ஒரு அரசியல் மாற்றம்
    நிகழ்வதற்காக திரைமறைவில் சதி பின்னும் வேலை நடக்கிறது. அதற்காக
    டெல்லியிலிருந்து ஒரு விபரீதமான திட்டத்தோடு எம்.பி.ஒருவர் சென்னைக்கு வருகிறார். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்குள் அடுக்கடுக்காய் அதிர்ச்சி சம்பவங்கள். எதிர்பாராத மரணங்கள். உண்மைகளைக் கண்டறிய விவேக் களம் இறங்குகிறான். விவேக்கின் கூர்மையான விசாரணை உண்மைகளை வெளியே கொண்டு வருகிறது.
    Ver libro