ஒரு சின்ன மிஸ்டெத்
ரமணிசந்திரன்
Editorial: Pocket Books
Sinopsis
ஸ்ரீபதி ட்ரேடர்ஸ்.எட்டுக்குடிக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த டவுனின் மையப் பகுதியல் அமைந்திருந்தது அந்த பம்ப்செட் ஸ்பேர் பார்ட்ஸ் கடை. சதுரம் சதுரமான ஷெல்ஃபுகளில் பம்ப்செட் ஸ்பேர்கள் இனம் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.மேஜையோரம் நின்றிருந்த அந்த காக்கிப் பேன்ட்-பதினாறு வயசுப் பையன் கஸ்டமர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.“யார் ஸார் வேலும்?”“எங்கேடா உன் முதலாளி?”“இப்ப வந்துடுவார் ஸார்...”“இப்பன்னா எப்போ?”“எட்டரை மணிக்கு...”தன் வாட்சில் பார்வையைப் போட்டார்.8.25“எட்டரைன்னா ஒரு எட்டே முக்கால் ஆகுமா...?”“அதெப்படிங்க...? எட்டரைன்னா எட்டரைக்குத்தான் வருவார்...”ஒரு ஃபோல்டிங் சேரை எடுத்து விரித்துப் போட்டான்.இப்படி உக்காருங்க ஸார்... அஞ்சு நிமிஷத்தில் வந்துடுவார். முதலாளி கொஞ்சம் ஆசாரமானவர். வீட்ல பூஜை... அது... இதையெல்லாம் முடிச்சுட்டு - கோயிலுக்கு போய்ட்டு அப்புறமாத்தான் இங்கே வருவார்...”அவன் சொல்லி முடித்த விநாடி வாசலில் மொபெட் சத்தம். கிருஷ்ணமூர்த்தி வந்து சேர்ந்திருந்தான். நீலநிறப் பூக்கள் தெறித்த டி.ஸி. சர்ட்டை உடம்புக்குக் கொடுத்து, வேஷ்டி கட்டியிருந்தான். நெற்றி நிறைய திருநீற்றுப்பட்டை, நடுவில் ஒரு குங்குமக் கீற்று. அசப்பில் கொஞ்சம் ‘முந்தானை முடிச்சு’ பாக்யராஜ் மாதிரி பார்வையை வருடினான்.“குட்மார்னிங் ஸார்...”“குட்மார்னிங்!”கிருஷ்ணமூர்த்தி மொபெட்டை ஸ்டாண்ட் இட்டுவிட்டு கடைப்படிகளில் ஏறினான். உட்கார்ந்திருந்த அந்த கஸ்டமர் எழுந்தார்.“வந்து ரொம்ப நேரமாச்சுங்களா?”“இல்லே... இப்பத்தான் வந்தேன்.”“மன்னிக்கணும்... கோயில்ல பூஜை முடிய லேட் ஆயிடுச்சு...”“இருக்கட்டுங்க... இதுக்கு எதுக்கு மன்னிப்பு கின்னிப்பு எல்லாம்?”கிருஷ்ணமூர்த்தி புன்னகைத்தபடியே நாற்காலிக்கு உடம்பைக் கொடுத்தான். எட்டுக்குடியின் பரம்பரைப் பாரம்பரியமுள்ள அந்த கோவிந்தராஜ் குடும்பத்தில் மூன்றாவது சகோதரன் இந்த கிருஷ்ணமூர்த்தி. இந்த முப்பத்தைந்தாவது வயதில் கையிலுள்ள ஆறுவயசுப் பையனைப் டவுன் எல்கேஜில் சேர்த்திடலாமா அல்லது கிராமத்து எலிமெண்ட்ரி பள்ளியிலேயே தவழவிடலாமா? என்று பெரிதாய் யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறான்.கஸ்டமர்களிடம் இவன் பேசினால் அதில் ஒரு நயம் இருக்கும்... அந்த நயத்துக்காகவே இவன் வியாபாரம் நிமிர்வோடே இருக்கிறது
