¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
ஒரு அழகான ஆபத்து - cover

ஒரு அழகான ஆபத்து

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

ஜெயன் அயர்ந்துபோய் அவளைப் பார்த்தான் “நீயா...?”“ஏன் என்னைப் பார்த்தால் கல்யாணப் பொண்ணு மாதிரி தெரியலையா?” கல்யாணி ஒரு சிரிப்போடு கேட்க, ஜெயன் அவளை பார்வையால் கழுவினான்.“ஒரு அஞ்சு நிமிடம் அப்படி உட்கார். பெரியவரைக் கேட்டுட்டு சொல்றேன்.”ஜெயன் வரவேற்பறையின் மூலைக்குப் போய்-ஸ்டூலின் மேல் உட்கார்ந்திருந்த இன்டர்காமின் ரிசீவரை எடுத்தான். அதிகபட்ச மரியாதைக் குரலில் அரை நிமிடம் பேசினான். பிறகு ரிசீவரை வைத்துவிட்டு கல்யாணியின் பக்கமாய் திரும்பினான்.“மாடிப்படி ஏறி மேலே போனதும் முதல் அறை. பெரியவர் வரச்சொன்னார். போய்ப் பாரு. அநாவசியமா ரொம்ப நேரம் பேசிட்டிருக்காதே...!”“ம்... ம்...” தலையாட்டிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தாள் கல்யாணி. ஹாலின் தரைப்பரப்பு பூராவும் கண்ணாடியாய் மொசைக். ஏராளமான சாண்ட்லியர் விளக்குகள். தேக்குமரக் கதவுகள். நிலைப்படிகள். ஆளுயரக் கண்ணாடிகள்.சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே பிரமிப்பாய் மாடிப்படிகளில் ஏறினாள்,முதல் அறைக்கு முன்பாக வந்து நின்றாள். கதவின் நிலைப்படியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த திரைச்சீலையை மெல்ல விலக்கினாள். குரலின் தொனியை தாழ்த்திக்கொண்டு கேட்டாள்.“நான் உள்ளே வரலாமா சார்?”“வாம்மா... உள்ளே வாம்மா” குரலில் ஒருவித இனிமை விரவியிருக்க, உள்ளேயிருந்து அழைப்பு வந்ததுகல்யாணி உள்ளே போனாள். அறை அரையிருட்டாய் இருந்தது. அறையின் சன்னல்கள் இறுக்கமாய் சாத்தப்பட்டிருக்க, ஈசிச்சேர் ஒன்றில் ராஜசேகரன் சாய்ந்திருந்தார்.ஐம்பது வயதான ராஜசேகரன் ரொம்பவும் வயோதிகமாய் தெரிந்தார். “பொல்” லென்று தலையில் வெளுத்து ஒற்றை நாடி சரீரத்தில் நிரம்பவும் ஒடிசலாய் இருந்தார். மனசுக்குள் உலாவுகிற ஒரு இனம்புரியாத கவலை கண்களில் உட்கார்ந்திருந்தது. குளிருக்கு பாதுகாப்பாக உல்லன் கோட்டைப் போட்டு, கழுத்துக்கு மப்ளரை சுற்றியிருந்தார்.“வணக்கம் சார்.”“வாம்மா... இப்படி உட்கார்.” ராஜசேகரன் தனக்கு எதிரேயிருந்த சோபாவைக் காட்டினார்.கல்யாணி சோபாவின் நுனியில் தவிப்பாய் உட்கார்ந்தாள்.“உன் பேர்தான் கல்யாணியா?”“ஆமா சார்.”“சொந்த ஊர் கோயமுத்தூரா?”“ம்...”“உன்கூட யாரும் வரலையாம்மா?”கல்யாணி வெறுமையாய் புன்னகைத்தாள்.“என்கூட வர்றதுக்கு யாரும் இல்ல சார். எனக்கு அஞ்சு வயசாயிருக்கும்போதே அம்மாவும் அப்பாவும் காலமாயிட்டாங்க. எனக்கு கூடப் பிறந்தவங்களும் யாரும் இல்லை. என்னோட சொந்தக்காரங்கள்ல ஒருத்தர் என்னை ஒரு கிறிஸ்தவ அநாதை விடுதியில் கொண்டு போய் சேர்த்துவிட்டார். அந்த அநாதை விடுதியிலேயே வளர்ந்து, சிரத்தையா படிச்சு முன்னுக்கு வந்து, இப்போ ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு இருக்கேன்.”“எந்த கம்பெனி?”“ஹைபவர் ட்ரான்ஸ்மிஷன் பெல்ட்ஸ் கம்பெனி.”“என்னவா இருக்கிறே?”“டைப்பிஸ்டு.”ராஜசேகரன் சில விநாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு, பின் மெல்லிய குரலில் கேட்டார்.“அந்த திருமண விளம்பரத்தை என்றைக்குப் பார்த்தே?”“நேத்தைக்கு சாயந்தரம்.”“அந்த விளம்பரத்தைப் பார்த்ததுமே உன்னோட மனசுல, என்ன எண்ணம் வந்தது?”கல்யாணி மெல்ல தலைகுனிந்து தன் வலது கை விரல் நகங்களையே பார்த்துக்கொண்டு சொன்னாள். “சார், நீங்கள் கொடுத்த அந்த திருமண விளம்பரத்தில் வாசகங்கள் வித்தியாசமாக இருந்தன. “அவசரமாய் நடைபெற வேண்டிய ஒரு திருமணம். 25 வயதான அழகான மணமகனுக்கு 20 வயதுக்கு உட்பட்ட மணமகள் தேவை. கடிதப் போக்குவரத்து வேண்டாம். சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் மணப் பெண்ணோடு நேரில் வரவும். முகவரி...” இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் மனதுக்குள்ளே ஒரு இனம்புரியாத ஆவல். எந்தவிதமான சொந்த பந்தம் இல்லாத எனக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் கட்டி வைக்க யாருமே முன்வரப் போறதில்லை. அதனால், இந்த விளம்பரம் மீது அக்கறை எடுத்துகிட்டு நானே புறப்பட்டு வந்தேன்...”கல்யாணப் பேச்சை நிறுத்திவிட்டு, அவர் முகத்தைப் பார்த்தாள்
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 73 páginas.

Otros libros que te pueden interesar

  • Adhu Mattum Ragasiyam - cover

    Adhu Mattum Ragasiyam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    எண்பது வயதில் ஒரு முரட்டு மனிதர்! இந்த வயதிலும் பெண்ணாசை. இவருக்கு பயந்தால் தான் ஊரில் வாழவே முடியும். இவர் வாழும் ஊரில் ஒரு மூடப்பட்ட கோவில். இதன் கதவை திறக்க கூடாது. திறந்தால் ஊர் அழியும். கதவின் பின்புறம் உள்ள மர்மம் என்ன? இந்த கோவிலை திறக்க விடாமல் பாதுகாக்கும் முரட்டு மனிதர் யார்? ஒரு காதல் ஜோடி இவரால் படும் பாடு? கதவு திறந்ததா? கேளுங்கள் அது மட்டும் ரகசியம்.
    Ver libro
  • Engae En Kannan - cover

    Engae En Kannan

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    An atheist gets hold of a Krishna Idol that has been worshiped by an Iyengar family. Upon receiving instructions from the Iyengar, he worships the idol. What happens after this? Listen to Enge En Kannan.
    
    பல தலைமுறைகளாக ஒரு ஐயங்கார் குடும்பத்தில் ஒரு கிருஷ்ண விக்கிரகம் பூஜிக்கப்பட்டு வருகிறது. காசி யாத்திரை செல்லும் சமயம் விக்கிரகத்தையும் உடன் எடுத்து செல்கிறார் ஐயங்கார். ரயில் பயணத்தில் கிருஷ்ண விக்கிரக பெட்டி, கடவுள் இல்லை என்று சொல்லும் ஒரு நாத்திகன்  வசம் கிடைக்கிறது. அவன் நாத்திகன் ஆனால் நல்லவன். ஐயங்கார் அவனை கண்டறிந்து தன் சார்பில் அந்த விக்கிரகத்தை பூஜிக்க சொல்கிறார். அவனும் அவருக்காக பூஜிக்கிறான். அதுவரை வராத கிருஷ்ணனும் வருகிறான். அதிசயங்கள் புரிகிறான். எப்படி? பலவித திருப்பங்கள் கொண்ட பரபரப்பான கதை.
    Ver libro
  • Kolai Thodarbukku Appaal - cover

    Kolai Thodarbukku Appaal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Our hero goes to Dubai for a job and stays in a small room. What is his job and why does he face a lot of problems in it? How intelligent are the Dubai Police? Listen Kolai Thodarbukku Appaal to know more.
    
    செல்வம் கொழிக்கும் துபாயில் தமிழர்கள் நிறைய பேர் பல்வேறு பணிகளில்
    இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகனும் துபாயில் ஓர் அறையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அது எது மாதிரியான வேலை என்பதும் அந்த வேலையின் காரணமாய் அவன் சந்திக்கும் பிரச்சினைகளுமே நாவலின் சுவாரஸ்யமான விஷயங்களாய் இருக்கின்றன. துபாய் போலீஸின் கெட்டிக்காரத்தனங்கள் இந்த நாவலில் கூடுதல் கவனத்தோடு சொல்லப்பட்டு இருப்பது கொலை தொடர்புக்கு அப்பால் நாவலுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்.
    Ver libro
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும்,  ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Ver libro
  • Nalliravu Vaanavil - cover

    Nalliravu Vaanavil

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Mysterious incidents happening in Delhi and Mylapore are very suspicious and dangerous. These incidents are to prevent a 'Bio-Truth' from being misused by corrupt forces. It is known that a rainbow cannot be formed in night, but this novel says otherwise. Listen to know how!
    
    சாஃப்ட்வேர் தொழில் நுட்பத்தில் ஒரு பயோட்ரூத் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த உன்னதமான உண்மை, தீய சக்திகளின் கைகளுக்கு போய்விடக்கூடாதே என்பதற்காக  டெல்லியில் சில சம்பவங்களும், மயிலாப்பூரில் ஒரு சாதாரண நடுத்தரக்குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களும் விபரீதம் நிறைந்தவையாக உள்ளன. நள்ளிரவு வானவில் தோன்றுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று எல்லோர்க்கும் தெரியும். ஆனால் இந்த நாவல் சாத்தியம் என்கிறது.
    எப்படி?  செவி கொடுத்து கேட்டுப் பாருங்கள்.
    Ver libro
  • Detective DK Case 04 - Where death waits! - cover

    Detective DK Case 04 - Where...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும். மர்மம், திகில், சாகசம் நிறைந்த இந்த படைப்பை தவற விடாதீர்கள்! 
    Pala nooru aandugalaga yaarum anaaga mudiyatha Saathaan Kaadu… Anga pona yellaaarum marma maathiri sethutu vandhirkanga. Aana andha kaattukulla oru periya ragasiyam amanooshyatha thaandi marandhu irukku. Nam hero DK eppadi andha marma ragasiyatha veli kondu varraan-nu kaanum idha video miss pannadheenga! Marmam, thigil, saagasam niraintha oru vera level experience. 
    An Ancient Forest. A Deadly Curse. One Man Dares to Enter. For centuries, no one has returned alive from Saathankadu – a forest whispered to be cursed. Those who entered met mysterious and violent deaths. Locals speak of ghostly shadows, whispers in the dark, and an unseen presence that guards something… ancient. But when a strange symbol connected to a powerful political figure appears in the forest's border, Detective DK and Rishi must step in not just to uncover the truth, but to survive it. What lies beyond the fear? A lost history? A hidden power? Saathankadu Ragasiyam is the fourth thrilling adventure in the Detective DK Investigations series - blending psychological horror, Tamil folklore, and raw investigation in one unforgettable tale.
    Ver libro