¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
ஒற்றை மேகம் - cover

ஒற்றை மேகம்

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

பூர்ணிமா லேசாய் பதட்டப் பட்டாள். "மெள்ளமா பார்த்து உட்கார்ங்க...""ஸ்லிப்பாகி கீழே விழுந்துடுவேனான்னு பயப்படறியா?""பின்னே...?""இந்த சக்கர நாற்காலியோட எனக்கு எத்தனை வருஷ ஸ்நேகம் தெரியுமா. நான் கீழே விழப்போனாலும் அது என்னை விடாது.""பெருமையடிச்சுகிட்டு இருக்காமே சீக்கிரமா பாத்ரூமுக்குப் போங்க."சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே பாத்ரூமை நோக்கிப்போன ராஜசேகரன் சட்டென்று நாற்காலியின் இயக்கத்தை நிறுத்தி திரும்பினான்."பூர்ணிமா.""ம்.""மத்தியான லஞ்சுக்கு இங்கிருந்தே கொண்டு போயிடுவோமா? இல்லே. எஸ்டேட் போய் பிரிப்பேர் பண்ணிக்குவோமா?""இங்கிருந்தே கொண்டு போயிடுவோம்.""குக்கிட்டே என்ன மெனு குடுக்கப் போறே?""சிக்கனும் சப்பாத்தியும் போதாது?""போதும்.""எனக்கு போதாது."குரல்கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அறை வாசலில் நின்ற நவீனா - குளித்து முடித்து வேறு கவுனுக்குள் நுழைந்திருந்தாள். பூர்ணிமா அவளை நோக்கிப் போனாள்."என்னடி அதுக்குள்ளே குளிச்சிட்டியா?""ம். குளிச்சுட்டேன்""யார் குளிப்பாட்டிவிட்டா?""ஆயாதான்.""காதுல பார் சோப்பு.""துடைச்சுட்டா போகுது" அலட்சியமாய் சொன்ன நவீனா, ராஜசேகரினிடம் வந்து அவன் மடியில் ஏறி உட்கார்ந்தாள்."டாடி.""என்னம்மா?""எனக்கு லஞ்ச் சிக்கனும் சப்பாத்தியும் வேண்டாம்.""பின்னே... உனக்கு என்ன வேண்டும்?""கட்லெட், வெஜிடபிள் புலவ், ஸாண்ட்விச் அப்புறம் ப்ரட்சோலா"பூர்ணிமா சுட்டு விரலை உயர்த்தினாள். "உதைப்பேன். அதெயெல்லாம் பிரிபேர் பண்ணச் சொன்னா நேரமாயிடும். சப்பாத்தி சிக்கன் மட்டும் போதும்.""பாருங்க டாடி" நவீனா இரண்டு கைகளாலும் ராஜசேகரனின் முகத்தை வருடினாள். அவன் அந்த கைகளைப் பற்றி மெள்ள முத்தமிட்டான்."என் நவீனாக்குட்டியோட மெனு ஓ.கே."என்னங்க இது. நீங்களும் அவளோட சேர்ந்துகிட்டு...""இதோ பார் பூர்ணிமா...! எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. குக்கிட்டே உடனே சொல்லி இந்த மெனுவை பிரிபேர் பண்ணச் சொல்லு.""தாங்க்யூ டாடி!""இதோ பாருங்க. அவளுக்கு நீங்க ரொம்பவும் செல்லம் தர்றீங்க. ஒரு பெண் குழந்தைக்கு இவ்வளவு செல்லம் குடுக்கக்கூடாது.""என் நவீனாக்குட்டிக்கு அப்படித்தான் செல்லம் குடுப்பேன்"பூர்ணிமா இடுப்பில் கைவைத்து முறைக்க --நவீனா கைகளைத் தட்டிக் கொண்டு சிரித்தாள்." ஸேம்... ஸேம்..! மம்மிக்கு ஸேம்!"சரியாய் பத்து மணிக்கு போர்டிகோவில் நின்றிருந்த வெளிநாட்டு 'லாரல்' நிஷாந்த் கார் கிளம்பியது. பின்சீட்டில் ராஜசேகரனும், பூர்ணிமாவும் உட்கார்ந்திருக்க, முன்சீட்டில் டிரைவர் கோபாலுக்குப் பக்கத்தில் நவீனா சாய்ந்து ஆப்பிளைக் கொறித்துக் கொண்டிருந்தாள்."கோபால்!""ஸார்...!""டாப் காரியரில் வீல்சேரை நல்லா கட்டியிருக்கியா?""கட்டியிருக்கேன் ஸார்.""காரை நிதானமாவே ஓட்டு, எந்த வெஹிகிளையும் ஓவர்டேக் பண்ணாதே. மொதல்ல பாரடைஸ் பாயிண்ட் போறோம். அப்புறம்தான் எஸ்டேட்டுக்கு.""சரி சார்..."கார் நிதான வேகத்தில் - பனி பெய்து இன்னமும் ஈரமாயிருந்த ரோட்டில் வழுக்கிக் கொண்டு போயிற்று. கார் இரண்டு இறக்கங்களைக் கடந்தது -"டிரைவர் அங்கிள்" நவீனா கூப்பிட்டாள்.
Disponible desde: 08/02/2024.
Longitud de impresión: 124 páginas.

Otros libros que te pueden interesar

  • Porkaasu Thottam - cover

    Porkaasu Thottam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This is a novel that goes back and forth between the past and the present. There is a treasure in a cemetery. The cemetery holds in it a lot of secrets. What are they? This story is sure to drag you into its thrilling world. Listen to Porkaasu Thottam.
    
    இது ஒரு வரலாறும் சமகாலமும் கலந்த புதினம். புதையல் தான் கதையின் மையம். குறிப்பாக மயானமும் மயானத்தில் இருக்கும் ரகசியங்களும் எவரும் அறியாதவை. கேட்பவர்களை தன் கதைக்களத்திற்குள் இழுத்துச்செல்லும் விறுவிறுப்பான நாவல்.
    Ver libro
  • Adipatta Puli - cover

    Adipatta Puli

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    Coimbatore city is rocked by two terrorist bomb blasts. The mastermind behind them is Karuppasamy who has escaped police custody and joined a terrorist group as a 'consultant'. He sends letters to the Police commissioner's office in advance through courier, giving hints about the upcoming blasts. He demands the release of the arrested terrorist leader Shahul Iqbal. Two more blasts were in the offing. Did the police succumb? Did they trace the location of Karuppusamy? What is the role of the young college-going son of a Police officer who lies in bed recovering from gun-shots, in the complex process of investigations? Did the police thwart the subsequent bomb blasts?
    
    கோயம்புத்தூர் நகரம் அடுத்தடுத்த இரண்டு தீவிரவாத வெடிகுண்டுகளால் அதிர்கிறது. தீவிரவாதிகளுக்குப் பின்னால் மூளையாக இருந்து செயல்படுபவன் கருப்பசாமி. போலீஸ் காவலில் இருந்து தப்பித்த அவன், வெடி குண்டு வைப்பதற்கு அந்த பயங்கரவாதக் குழுவுக்கு 'ஆலோசகராக' இருக்கிறான். போலீசை சீண்டும் விதத்தில் , வரவிருக்கும் குண்டுவெடிப்பு பற்றிய குறிப்புகளைக் முன்கூட்டியே தந்து , போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குக் கூரியர் மூலம் கடிதங்கள் அனுப்புகிறான். கைது செய்யப்பட்ட பயங்கரவாதத் தலைவன் 'ஷாகுல் இக்பாலை' விடுதலை செய்ய கோருகிறான்.
    
    மேலும் இரு குண்டுவெடிப்புகள் நிகழ இருக்கின்றன. போலீசார் அடிபணிந்தார்களா? அவர்கள் கருப்புசாமியின் இருப்பிடத்தைக் கண்டறிந்தார்களா? போலீஸ் விசாரணைகளின் மூலம் துப்புத் துலக்குவதில், துப்பாக்கிச் சூட்டில் இருந்து மீண்டு படுக்கையில் கிடக்கும் ஒரு காவல்துறை அதிகாரியின் இளம் மகனான கல்லூரி மாணவனின் பங்கு என்ன? அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளை காவல்துறை முறியடித்ததா?
    Ver libro
  • Nirkaadhe Gavanikkadhe - cover

    Nirkaadhe Gavanikkadhe

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    Two rich young men are not satisfied with the luxurious life they have but want to enjoy adrenaline rush by committing some heinous crime! This is the story of the police playing hide and seek with these 2 youngsters. Listen to Nirkadhe Gavanikkadhe.
    
    இரண்டு பணக்கார இளைஞர்களுக்கு அத்தனை உல்லாசத்தையும் அனுபவித்ததும் சாகசமான குற்றங்கள் செய்யும் விபரீத எண்ணம் ஏற்படுகிறது.காவல்துறைக்கும் இவர்களுக்கும் நடுவில் நிகழும் பூனை, எலி துரத்தல்களும், மோதல்களுமே கதை.
    Ver libro
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Ver libro
  • Oru Thuli Kadal - cover

    Oru Thuli Kadal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இரண்டு தடங்களை வைத்துக் கதை எழுதுவதில் நிபுணரான ராஜேஷ்குமார் அவர்களின் மற்றோர் படைப்பு.
    ஒருபுறம் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்ட குடும்பத்தை கலைக்க பவ்யா என்னும் புயல் வீச வருகிறது. மற்றொருபுறம் தனது தைரியத்தாலும், நேர்மையான தன்மையாலும் வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொள்கிறாள் மற்றொருவள். அப்புயலின் தாக்கத்தால் அக்குடும்பத்தின் நிலையை அறிய கேளுங்கள் " ஒரு துளி கடல்".
    
    இக்கதையை கேட்டும் வாசகர்கள், இருவேறு தடங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றிணையும்போது ஆச்சரியம் அடைவார்கள். எழுத்தாளரின் கதை நடை நம்மை கதைக்குள் மூழ்கடிக்கிறது.
    Ver libro
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Anónimo

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Ver libro