¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
மன்னிக்கப்பட்ட மரணம் - cover

மன்னிக்கப்பட்ட மரணம்

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

பீட்டர் திண்ணையில் சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு - வீட்டுக்குள் நுழைந்தான். கண்களிலும்- மீசையிலும் நடிகர் பிரதாப்பை நினைவுக்குக் கொண்டு வந்தான். சிவில் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு பக்கத்து டவுனில் சொந்தமாக சிவில் கன்சல்டன்ஸி அலுவலகம் நடத்தி வருபவன். பிஸ்னெஸ் சூடுபிடித்து விட்டதால் இன்னும் சில வாரங்களில் சைக்கிளை உதறிவிட்டு ஒரு ஹிண்ட்-சூசூகி வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.ஈஸி சேரில் உட்கார்ந்து - யோவானின் நல்வழி புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்த பீட்டரின் அப்பா ஸ்டேன்லி அவனுடைய வரவால் கலைந்து போய் நிமிர்ந்தார்.“என்ன பீட்டர் இன்னிக்கு லேட் போலிருக்கு?”“இன்னிக்கு செவ்வாய். அந்தோணியார் கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்”ஸ்டேன்லி பீட்டரின் அப்பா. பாங்க் ஒன்றில் வேலையிலிருந்த ஸ்டேன்லி ரெண்டு வருஷத்திற்கு முன்னால் வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டவர். இப்போது ரிடையராகிற வயது. சுத்தமாய் தலை, தாடிப் பிரதேசங்களில் நிறமிழந்திருந்தார். படிக்க கண்ணாடியின் துணை அவசியமாயிருந்தது. மார்பில் நிளமாய் தொங்கிய செயினின் முடிவில் ஒரு வெள்ளி சிலுவை புரண்டது.பீட்டர் ஷர்ட்டைக் கழற்றி சுவர் ஆணியில் மாட்டிவிட்டு பின்பக்கம் போய் கை, கால், முகம் கழுவிவிட்டு துண்டால் முகத்தை ஒற்றியபடியே திரும்பி வந்தான்.“ஏன் பீட்டர்...”“சொல்லுங்கப்பா...”“கவர்ன்மெண்ட் வொர்க் ஒண்ணை கான்ட்ராக்ட் எடுத்திருந்தியே...?நான் எடுக்கலைப்பா... கருணாம்பிகா மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் டைரக்டர் மருதநாயகம் எடுத்த கான்ட்ராக்ட் அது... அதுக்காக என்னை வேலை பார்க்க சொன்னார்...”“அதுல என்னவோ ப்ராப்ளம்னியே, சரியாயிடுச்சா?”“இல்லைப்பா.... பாதியில நான் வொர்க்கை பார்க்க முடியாதுன்னுட்டேன்... அவனெல்லாம் ஒரு பெரிய மனுஷன்... கவர்ன்மென்ட் பணத்தை திங்கறதுலயே குறியா இருக்கான்... மனசாட்சி உள்ளவன் அந்த ஆளோட சேர்ந்து வேலை செய்ய மாட்டான்...”“ஸோ, வொர்க் - வேண்டாம்னுட்டே....?”“இன்னிக்குதான் சொன்னேன்... சொன்னதோடு மட்டும் நிக்கப் போறதில்லை கவர்ன்மென்ட் ஆஃபிசர்ஸ்கிட்டே அந்த மருதநாயகத்தோட ஊழலை பத்தி சொல்லப் போறேன்...”“சில பெரிய மனுஷங்க அப்படிதான் இருப்பாங்க பீட்டர்.... நமக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கிக்க வேண்டியது தான்... அதுக்காக அங்கேயும் இங்கேயும் அவங்களைப் பத்தி சொல்லி வீண் பகையை வளர்த்துக்க வேண்டாம். அந்த ஆளோட வொர்க்கை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டியில்லே? விடு பிரச்னையை...”“ந்நோ... இப்படி எல்லாரும் பயந்துகிட்டிருந்தா கவர்ன்மென்ட் பணத்தைத் திங்கறவன் தின்னுட்டேதான் இருப்பான்... இவனை மாதிரி நாலு பெரிய மனுஷங்க மாட்டிகிட்டா எல்லாருக்கும் கொஞ்சம் பயம் வரும்...”“நீ சொன்னா கேக்க மாட்டே பீட்டர்...!”ஸ்டேன்லி மறுபடியும் அந்த நல்வழி புத்தகத்துக்குள் மூழ்கினார்.பீட்டர் கண்ணாடி முன்பாக நின்று தலை வாரி- பவுடரை ஒரு கோட்டி முகத்துக்குக் கொடுத்துவிட்டு மறுபடியும் சர்ட்டுக்குள் நுழைந்தான்.“அப்பா... நான் சர்ச்சுக்கு போய்ட்டு வர்றேன்...”பீட்டர் வெளியே வந்தான்
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 90 páginas.

Otros libros que te pueden interesar

  • Aayiram Arivaal Kottai - cover

    Aayiram Arivaal Kottai

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This story talks about the power of the Village God that stands surrounded by a fence made of weapons. The God is a guardian to all those who abide by the truth. What about those who lie? Listen to Aayiram Arivaal Kottai.
    
    ஒரு கிராமத்து சாமியின் சக்தியை சொல்லும் பரபரப்பான புதினம் இது. அரிவாளால் வேலி கட்டி நடுவில் நிற்கும் அந்த சாமி சத்தியமானது. சத்தியம் தவறுபவர்களுக்கோ அது எதிரானது. விறுவிறுப்பான கதை - ஆயிரம் அரிவாள் கோட்டை .
    Ver libro
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Ver libro
  • Ettu Bommai Kaaval - cover

    Ettu Bommai Kaaval

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Usually villages have one guardian deity but this village has eight deities on the eight entrances into the village. There is a treasure hidden in the village and it is impossible to loot it. Someone tries to loot it. What happens? Listen to Ettu Bommai Kaaval.
    
    கிராமங்களில் நுழைமுகத்தில் காவல் தெய்வம் என்று ஒன்றிருக்கும். ஆனால் ஒரு கிராமத்தில் அதன் எட்டு திசையிலும் காவல் தெய்வங்கள் உள்ளன. கிராமத்துக்குள் ஒரு தங்கப்புதையல். அந்த தெய்வங்களை மீறி அதை ஒருவர் கொண்டு செல்ல முடியாது.  ஒருவன் முயல்கிறான்! முடிந்ததா அவனால்?
    Ver libro
  • Yandhira Jaalam - cover

    Yandhira Jaalam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This is the story of Yantras and Mantras! The protagonist who tries to kill himself is saved by a monk and he gives a Yantra to him. In 48 days, the protagonist becomes a Lakhpati. The monk asks for the Yantra back. What does he do? Listen to Yandhira Jaalam.
    
    யந்திர மந்திர தந்திரத்தில் யந்திரம் ஒன்றின் ஜாலத்தை சொல்லும் கதை இக்கதை. தற்கொலைக்கு முயல்பவன் கையில் ஒரு சன்யாசி யந்திரம் ஒன்றை தந்து பூஜிக்க சொல்கிறார். 48  நாளில் லட்சாதிபதி ஆகிறான் அவன். தான் கொடுத்ததை திரும்ப கேட்கிறார். அவன் தந்தானா?
    Ver libro
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Ver libro
  • Vivekum 41 Nimishangalum - cover

    Vivekum 41 Nimishangalum

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Police, judges and other law enforcing officials are cornered to release a convict who is in prison for a heinous crime committed. Crime Branch Officer Vivek comes up with a solution to this unique situation in just 41 minutes. Listen to Vivekum 41 nimishangalum to know the story.
    
    காவல்துறை அதிகாரிகளும், நீதியரசர்களும் நியாயத்திற்கு புறம்பாக நடக்க மிரட்டப்படுகிறார்கள். மரண தண்டனை விதிக்கப்படும் நிலையில் உள்ள ஒரு கொடூரமான குற்றவாளியை விடுதலை செய்யும்படியும், அப்படி செய்யப்படாவிட்டால் அந்த நீதிபதி உயிரிழக்க நேரிடும் என்றும் ஒர் உயர் போலீஸ் அதிகாரியே சொல்ல வேண்டிய நிலைமை. அரசு அதிகாரிகள் இப்படிப்பட்ட ஒர் ஆபத்தான சூழலில் இருக்கும் போது க்ரைம் ப்ராஞ்சை சேர்ந்த அதிகாரி விவேக் 41 நிமிஷத்தில் ஓர் அதிரடி திட்டம் போட்டு மிரட்டல் பேர்வழிகள் யார் என்பதை தனக்கே உரிய சாதுர்யமான முறையில் கண்டு பிடித்து பெரிய அதிகாரிகளின் பாராட்டைப் பெறுகிறார்.
    Ver libro