¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
மிஸ் பாரதமாதா - cover

மிஸ் பாரதமாதா

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

ஸ்... ஸார்... அது... டெட்பாடியா...? எனக்குத் தெரியாது ஸார்... அந்தப் பொண்ணு பேஷண்ட்ன்னு... சொல்லித்தான்...”சுந்தரேசன் கண்கள் விரிய அதிர்ச்சியாய் சொல்லிக் கொண்டிருக்கும்போதே - கான்ஸ்டபிளின் கையிலிருந்த லாட்டி அவனுடைய மோவாயை வலுக்கட்டாயமாய் நிமிர்த்தியது.‘‘உம்... பேர்... என்ன டா...?’’“சு... சு. சுந்தரேசன்...’’‘‘மொதல்ல கீழே எறங்கு...’’“ஸார்... எனக்கு ஒண்ணும் தெரியாது... அந்தப் பொண்ணுதான்...’’“‘எங்கடா அவ...?”“இ... இந்த சந்துக்குள்ளே போனா...’’‘‘பொய் பேசாதே...’’‘‘நிஜமாத்தான் ஸார்...”‘‘சந்துக்குள்ளே யாரை பார்க்கப் போனா?”‘‘அவ... அக்காவை...’’‘‘வா... சந்துக்குள்ளே போய் பார்க்கலாம்...’’ ஒரு கான்ஸ்டபிள் நின்று கொள்ள - இன்னொருவர் தன் கையில் வைத்து இருந்த லாட்டியால் சுந்தரேசனைத் தள்ளிக்கொண்டு அந்த அரையிருட்டுச் சந்துக்குள் நுழைந்தார்காற்றில் மூத்திர நாற்றம். குப்பைத் தொட்டிக்குள் ஒரு நாய் இறங்கி எதையோ கிளறிக் கொண்டிருந்தது. கார்ப்பரேஷன் விளக்கு கம்பத்தில் தூசி படிந்த ட்யூப் லைட் ஒன்று மங்கலான வெளிச்சத்தை உமிழ்ந்து சந்துக்குள் இருந்த வீடுகளைக் காட்டியது.“‘எந்த வீடுடா...?”“எனக்கு தெரி... தெரியாது ஸார்...’’“ஏண்டா... ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிகள் மாதிரி ஒரு டெட்பாடியை கார்க்குள்ளே போட்டு கொண்டு வந்திருக்கீங்க... எதுவுமே தெரியாத மாதிரி பாவ்லா பண்றியே...?’’“சத்தியமா எனக்கு... எதுவுமே தெரியாது ஸார்...’’“ரொம்ப நேரத்துக்கு இதையே நீ சொல்லிட்டிருக்க முடியாது. அந்தப் பொண்ணு யாரு...? டாக்ஸிக்குள்ளே செத்துக்கிடக்கிறவன் யாரு? எதுக்காக அவனை கொலை பண்ணுங்க...?’’‘‘ஸார்... டாக்ஸியில் இருக்கிறது டெட்பாடின்னு இப்பத்தான் எனக்குத் தெரியும்... அந்தப் பொண்ணு என்னை ஏமாத்திட்டா...”“நீ சொல்றது எதுவுமே நம்பற மாதிரி இல்லையே? உன்னை லாக்கப்புக்கு கொண்டு போனாத்தான் உண்மையைச் சொல்லுவே போலிருக்கு...’’‘‘ஸ... ஸார்...’’“ம்...”சுந்தரேசன் கண்கள் கலங்க கான்ஸ்டபிளைக் கும்பிட்டான்.‘‘எனக்கு கல்யாணமாகி மூணு மாசம்தான் ஸார் ஆச்சு... ஏதோ டாக்ஸியை ஓட்டி பொழைப்பை நடத்திட்டிருக்கேன்... இந்தக் கொலையைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது ஸார். என்னை இக்கட்டுல மாட்டிவிட்டு குடும்ப சந்தோஷத்தை கெடுத்துடாதீங்க ஸார்...சந்து இப்போது மறுபக்க ரோட்டுக்கு போய் முடிந்திருந்தது. பக்கெட்டில் பசையை வைத்துக்கொண்டு - 100-வது நாள் போஸ்டர் ஒன்றை சுவரில் ஒட்டும் முயற்சியில் இருந்த லுங்கி ஆசாமி ஒருவன் பார்வைக்கு கிடைத்தான்.கான்ஸ்டபிள் கூப்பிட்டார்.‘‘வாடா இங்கே...’’அவன் பசை கையோடு - பவ்ய நடையோடு - வந்தான். கண்களில் மிரட்சி.‘‘இந்தப் பக்கம் எந்த பொண்ணாவது வந்தாளா?’’“இ... இல்லீங்களே...’’‘‘நீ எவ்வளவு நேரமா இங்கே இருக்கே...?’’“இப்பத்தான் வந்தேன்ங்க...’’சுந்தரேசன் வியர்த்து வழிகிற முகத்தோடு எச்சில் விழுங்கிக் கொண்டே சொன்னான்.‘‘ஓடிட்டா போலிருக்கு...’’கான்ஸ்டபிள் அவனுடைய காலரைப் பற்றினார்.‘‘இங்கெல்லாம் நீ உண்மையை ஒத்துக்கமாட்டே... வா ஸ்டேஷனுக்குப் போயிடலாம்...’’‘‘ஸ... ஸார்... ஸார்...’’“பேசாதே... நட்றா... டாக்ஸிக்குள்ளே கொலை செய்யப்பட்ட டெட் பாடியை வெச்சுகிட்டு... பொய் கதா காலட்சேபமா பண்றே... லாக்கப்புக்கு கொண்டு போய் லாடம் கட்டினா... நான் முந்தி... நீ முந்தின்னு எல்லா உண்மையும் ஓடி வந்துடாதா... என்ன...?’’சுந்தரேசனை கான்ஸ்டபிள் நெட்டித் தள்ளிக் கொண்டு போனார்
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 54 páginas.

Otros libros que te pueden interesar

  • Then Kizhakku Minnal - cover

    Then Kizhakku Minnal

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Protagonist who lives in the US with his family is forced to come back to India as his son is dying of some weird disease. He is advised to pray to his family deity. He encounters various supernatural obstacles in his journey. Listen to Then Kizhakku Minnal.
    
    குலதெய்வ வழிபாடு - அதன் பின் உள்ள சக்தியை கூறிடும் நாவல். அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கதாநாயகனின் மகனுக்கு விசித்திர நோய். குல தெய்வ வழிபாடு செய்தால் குணமாகும் என்கிறது ஜோதிடம். அதன் பொருட்டு இந்தியா வருபவனுக்கு விசித்திர சோதனைகள். அவ்வளவும் அமானுஷ்யம்!
    Ver libro
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Ver libro
  • Porkaasu Thottam - cover

    Porkaasu Thottam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This is a novel that goes back and forth between the past and the present. There is a treasure in a cemetery. The cemetery holds in it a lot of secrets. What are they? This story is sure to drag you into its thrilling world. Listen to Porkaasu Thottam.
    
    இது ஒரு வரலாறும் சமகாலமும் கலந்த புதினம். புதையல் தான் கதையின் மையம். குறிப்பாக மயானமும் மயானத்தில் இருக்கும் ரகசியங்களும் எவரும் அறியாதவை. கேட்பவர்களை தன் கதைக்களத்திற்குள் இழுத்துச்செல்லும் விறுவிறுப்பான நாவல்.
    Ver libro
  • Konjam Megam Konjam Nilavu - cover

    Konjam Megam Konjam Nilavu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "தியாகு ஒரு பணக்கார ,இளைஞன். அவனுக்கு ஒரு அண்ணனும் அண்ணியும்
    இருக்கிறார்கள். அவன் ஒரு "சைக்கோ" என்பது வெளியே யாருக்கும் தெரிவது இல்லை. குடும்பத்தில் இயல்பாய் இருந்து கொண்டே அவ்வப்போது மனநோயாளியாய் மாறி சில விபரீதங்களைப் புரிகிறான். அவனுடைய இந்த செயல்களுக்கு ஒரு நாயும் துணை புரிகிறது. தியாகு ஒரு சைக்கோவாக மாற என்ன காரணம் ? அவனைப் பிடிக்க காவல்துறை எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளில் இருந்தும் தியாகு எப்படித் தப்பிக்கிறான்… கடைசியில் அவன் மாட்டுவானா, இல்லை அவனுக்கு வேறு ஒரு முடிவு காத்திருக்கிறதா ?
    நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாய் நகரும் எதிர்பாராத சம்பவங்கள் கேட்பவர்களைத் திகைக்க வைக்கும்"
    Ver libro
  • Thamaraikulam - cover

    Thamaraikulam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த யூதா என்ற அதிபயங்கர பெண்பித்துபிடித்த மந்திரவாதியின் பிடியில் சிக்கும் சோபியாவின் குடும்பம், பலவித துர்சம்பவங்களை எதிர்கொள்கிறது. சோபியாவின் வீட்டில் வேலைசெய்யும் கிளாராவும் , கோவிலகத்தை சேர்ந்த உதயனும் இதை கண்டுபிடித்து அதை தடுக்க மாந்திரிக நம்பூதிரி மற்றும் பாதிரியார் காபிரியேல் உதவியை நாடுகிறார்கள். தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை "தாமரைக்குளம்"
    Ver libro
  • Kadathal Kaatru - cover

    Kadathal Kaatru

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    உலகிலேயே மிகப் பெரிய கடத்தல்காரன். பணம் , நகை, கலைப்பொருட்கள் என்று இவன் கடத்தாத விஷயமே இல்லை. பல பேரை நேருக்கு நேர் நின்று ஒரே ஆளாக சமாளிக்க கூடிய பராக்கிரமசாலி. .குறிபார்த்து சுடுவதில் இவனை மிஞ்ச ஆளே கிடையாது. பல மொழிகளில் உரையாடுவான். இவனிடம் ஐந்து நிமிடங்கள் பேசினால் போதும், எந்த பெண்ணும் மயங்கிவிடுவாள். ஒரு ஹீரோவின் அத்தனை லட்சணங்களும் பொருந்திப்போகும் இவன், நிஜத்தில் ஹீரோவா , வில்லனா? தாவூத் இஸ்மாயில் . போலீஸ் இவனுக்கு நண்பனா எதிரியா? இப்படிப்பட்ட திறமைசாலிக்கு வேறு எதிரிகள் இருக்கமுடியுமா? இப்போது எதற்காக இவன் இந்தியா வந்திருக்கிறான்? அவனை தீர்த்துக்கட்டத் தயாராக இருக்கும் எதிரிகள் அவனை சும்மா விடுவார்களா? பரபரப்பான திருப்பங்களும் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளும் நிறைந்த இந்த நாவலை எழுதியவர், கோட்டயம் புஷ்பநாத். மலையாளத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விறுவிறுப்பான நாவல்களை எழுதிய இவரின் படைப்புகள் தமிழ், ஹிந்தி, வங்காளம், குஜராத்தி உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
    Ver libro