Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
கருநாகபுர கிராமம் - cover

கருநாகபுர கிராமம்

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

காங்கேய நாட்டு மன்னன் பிரகதத்தன், காட்டில் வேட்டையாடி முடித்துவிட்டு அந்தப் பெரிய ஆலமரத்தின் அடியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த குடிலுக்கு வந்து சேர்ந்தபோது மதிய வேளை.சூரியன் உச்சி வானத்தில் இருந்து சுட்டாலும் அந்தக் கோடையின் கடுமை, ஆலமரத்தின் அடர்த்தியான இலைகளால் வடிகட்டப்பட்டு விட்டதால் அவனுக்கு குளுமையாகவே இருந்தது. குடிலுக்கு வெளியே இருந்த பாறைத்திட்டின் மீது தாவி ஏறி உட்கார்ந்தான்.குடிலில் இருந்து வெளிப்பட்ட அமைச்சர் நல்லியக் கோடனார், மன்னன் பிரகதத்தனை நெருங்கினார்.“மன்னா...! உணவு அருந்தும் வேளை. நாம் மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டரை நாழிகை நேரத்திற்குள் நாடு போய்ச் சேர வேண்டும். இன்று இரவு சீன வியாபாரிகள் வர்த்தகம் பற்றிப் பேச வந்துவிடுவார்கள். அதற்கு முன்பாக நாம் அரசவையைக் கூட்டி சில முன்னேற்பாடான விஷயங்களைப் பேசி முடிக்க வேண்டும்...”எனக்கு நினைவிருக்கிறது அமைச்சரே! அதைப் பற்றி உங்களிடம் நானே பேச வேண்டும் என்று இருந்தேன்...!”நல்லியக் கோடனார் தன்னுடைய முகத்தில் பெரியதொரு திகைப்பைக் காட்டினார்.“என்னிடம் எதைப்பற்றிப் பேச வேண்டும் மன்னா...?”“நமக்கு இந்த சீன வர்த்தகம் தேவையா...?”“ஏன் மன்னா...?”“சென்ற முறை அவர்கள் நம்மிடம் வந்து வியாபார பேச்சுவார்த்தை நடத்தும்போது, பேசிய உரையாடலில் நிறைய பொய் இருந்தது. கண்களில் ஒருவித தந்திரம் தெரிந்தது. எனக்கு மட்டும் இப்படி தோன்றவில்லை. என்னுடைய சகோதரர்கள் இளந்தத்தன், கொற்றன் ஆகியோர்க்கும் அதேபோன்ற எண்ணம் தோன்றியுள்ளது.”அமைச்சர் நல்லியக் கோடனார் மன்னன் பிரகதத்தனை ஏறிட்டார்.“மன்னா...! உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் நீங்களும் சரி, உங்களுடைய சகோதரர்களும் சரி, பின்னால் ஏற்படும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். இந்த சீனர்களின் வர்த்தக விஷயத்திலும் அது சரியாகவே இருக்கும். இன்றைக்கு அவர்களோடு நடத்தப் போகும் வணிக வர்த்தகப் பேச்சில் நாம் பட்டும் படாமல் பேசுவோம். நாம் பேசும் பேச்சிலிருந்தே அவர்கள் புரிந்துகொண்டு நம்மைவிட்டு விலகிவிடுவார்கள்.பிரகதத்தன் மேற்கொண்டு பேசும் முன்பு பெரிய மரத்திற்கு பின்புறம் இருந்து ஏதோ சத்தம் கேட்டது.“அது என்ன சத்தம் அமைச்சரே?”“குதிரையின் குளம்பொலி போல் தெரிகிறது மன்னா!”இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த மரத்தின் பின்னாலிருந்து பால் போன்ற வெண்மை நிறத்தில் நல்ல உயரத்தில் குதிரையொன்று தெரிய, அதன் மேல் கரிய நிறத்தோடு திடகாத்திரமான உடம்போடு ஒருவன் உட்கார்ந்திருந்தான்மன்னன் பிரகதத்தன் அந்தக் குதிரையைப் பார்த்து கண்ணிமைக்க மறந்தான்.“அமைச்சரே!”“மன்னா!”“குதிரையை பார்த்தீங்களா... எவ்வளவு அழகாய் இருக்கிறது?”“ஆம் மன்னா...! இதுபோன்ற தும்பைப் பூ நிறத்தில் இப்படியொரு குதிரையை நான் பார்ப்பது இதுதான் முதல் தடவை”“எனக்கு அந்தக் குதிரையைப் பிடித்து இருக்கிறது அமைச்சரே! இப்படியொரு குதிரையில் ஏறி அமரவும், பயணிக்கவும் ஒருவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் குதிரையின் மேல் உட்கார்ந்திருப்பவன் அந்தப் பெருமைக்கு ஏற்றவன்போல் தெரியவில்லையே? அவன் யார் என்பதை விசாரியுங்கள்.”“இதோ... மன்னா.”சொன்ன அமைச்சர் அந்த விநாடியே வேகமாய் நகர்ந்து குதிரையை நோக்கிப் போனார்.
Available since: 02/08/2024.
Print length: 128 pages.

Other books that might interest you

  • Mattravai Nalliravu 105kku - cover

    Mattravai Nalliravu 105kku

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "சித்ரா ஆபீஸ் வேலைக்குப் போகிற ஒரு குடும்பப்பெண். கணவன் முரளி பலவித கெட்ட
    பழக்கங்களுக்கு அடிமையானவன். சரிவர வேலைக்குப் போகாமல் ஏதாவது காரணம்
    சொல்லிக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறான்.
    அன்றைய தினம் ஆபீஸீக்குப் போகும் சித்ராவுக்கு எதிர்பாராத பிரச்சினை ஏற்படுகிறது.
    அவளுடைய கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் பத்மநாபன் அவளை தன்னுடைய அறைக்கு வரவழைத்து ஒரு சிறிய சூட்கேஸை அவளிடம் கொடுத்து அவளுடைய வீட்டில் பத்திரமாய் வைத்திருந்து ஒரு வாரம் கழித்து திரும்பவும் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்கிறார். சித்ரா முதலில் மறுத்தாலும், கம்பெனியின் எம்.டி. சொல்கிறாரே என்று தயங்கி வாங்கிக் கொள்கிறாள். அதற்கு அடுத்த நாளே, ஒரு அதிர்ச்சியான விஷயம் நடக்கிறது. என்ன செய்வது என புரியாமல் இருப்பவளுக்கு மேலும் அதிர்ச்சி தரக் கூடிய
    சம்பவங்கள் நடைப்பெருகின்றன. சித்ரா அந்த பிரச்சினைகளையெல்லாம் எப்படி
    புத்திசாலித்தனமாய் சமாளித்து வெளிவருகிறாளா இல்லையா என்பது தான் மற்றவை
    நள்ளிரவு 1.05க்கு என்பதின் கதை. அது சரி.., தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன
    சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? கேட்டால் புரியும் மர்மம் விலகும்."
    Show book
  • Velvet Kutrangal - cover

    Velvet Kutrangal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    What happened to the flight that started from Malaysia to Beijing? There is a possibility noone even thought about? Listen to this racy thriller to know more.
    
    மலேசியாவிலிருந்து பீஜிங் புறப்பட்ட விமானம் என்னவாயிற்று? யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒரு சாத்தியம் இருந்தது. அதை ஜெட் வேகத்தில் சொல்கிறது இந்த வெல்வெட் குற்றங்கள்.
    Show book
  • Yaarendru Mattum Sollathe - cover

    Yaarendru Mattum Sollathe

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    இது காதல் கலந்த அமானுஷ்ய மர்ம நாவல்! ஒரு நாகமணிக்கல் தான் இந்த நாவலின் மையம்.. ஒரு பணக்கார பெண்மணியும், ஜமீன்தார் ஒருவரும் இந்த கல்லுக்காக போட்டி போடுகிறார்கள். இதனுடே சித்தர்களும் வந்து போகிறார்கள். ஒரு காதல் கதைக்குள் எப்படி இதெல்லாம் என்கிற கேள்விக்கு 24 அத்தியாயங்களில் யாரும் எதிர்பாத்திராத ஒரு பதிலை தருகிறது இந்த நாவல். கேளுங்கள் -- ஒரு புதிய உலகுக்குள் நுழைந்தது போல் இருக்கும்.
    Show book
  • Neela Nilaa - cover

    Neela Nilaa

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Students studying archaeology decide to venture into a deep forest to research about an old fort. Despite the warnings by the forest department, they enter the forest. Did they reach the fort? What is the relationship between the fort and moon? What is Blue Moon? Listen to Neela Nila!
    
    அடர்த்தியான ஒரு காட்டுப்பகுதிக்குள் இருக்கிறது ' காணாதது கண்டான் ' என்கிற ஒரு பழங்காலத்து கோட்டை. எந்த காலத்திலோ கட்டப்பட்ட அந்தக் கோட்டையை ஆய்வு செய்வதற்காக ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த சில ஆராய்ச்சி மாணவ மாணவிகள் வருகிறார்கள். வனத்துறை எச்சரிக்கையையும் மீறி அவர்கள் காட்டுப் பகுதிக்குள் நுழைகிறார்கள்.
    அவர்களால் ' காணாதது கண்டான் ' கோட்டையை அடைய முடிந்ததா.....? எதைத் தேடி அவர்கள் வந்தார்கள். அவர்கள் தேடிவந்த பொருளுக்கும் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்? நிலா சரி! அது என்ன நீல நிலா ......... ?
    Show book
  • Oru Gram Dhrogam - cover

    Oru Gram Dhrogam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "துரோகத்தில் கூட ஒரு கிராம் பத்து கிராம் என்று அளவு உண்டா ? என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்பதற்கு சிறிய உளி ஒன்று போதும். அதேபோல் ஒரு பெரிய அணைக்கட்டு உடைவதற்கு ஒரு சிறிய விரிசலும் ஒரு குடம் தூய்மையான பால் ஒரு துளி விஷத்தால் விஷமாக மாறவும் போதுமானது. அதேபோல் நல்ல நட்பும், இனிய உறவுகளும் முறிந்து போக ஒரு சிறிய துரோகம் போதும்.
    
    இந்த நாவலில் ஒரு கிராம் துரோகம் என்ன என்பது நாவலின் கடைசிப் பகுதியை நீங்கள் கேட்கும்போதுதான் தெரியும். கதையின் மையக்கரு ஒரு விஞ்ஞான விஷயம்தான். அது சோலார் எனர்ஜி சம்பந்தப்பட்டது. இன்றைய விஞ்ஞான யுகத்தில் சோலார் எனர்ஜியை உபயோகப்படுத்தி எத்தனையோ அதிசயங்களை விஞ்ஞானிகள் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியொரு அற்புதம் இந்த நாவலிலும் நிகழ்த்தப்படுகின்றது.
    
    இந்த விஞ்ஞான த்ரில்லர் நாவலில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸர் விவேக் நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் வருகிறார். அவர் குற்றவாளிகளை நோக்கி நெருங்க வகுக்கிற வியூகங்கள் கேட்க வாசகர்களைத் திகைக்க வைக்கும்.
    
    ஒட்டுமொத்த நாவலும் டெல்லியோடு சம்பந்தப்பட்டது என்பதால், டெல்லிக்கு போய்விட்டு வந்த உணர்வும் வாசகர்களுக்கு ஏற்படும் என்பது உறுதி."
    Show book
  • Iraval Sorgam - cover

    Iraval Sorgam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
    மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி நெஞ்சுவலியால் அவதிப்படும் தன்னுடைய அப்பாவைக் கூட்டிக்கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வருகிறாள். இரண்டு ட்யூட்டி டாக்டர்களின் காமப்பார்வை அவள் மேல் விழுகிறது. அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பித்தாளா இல்லையா என்பதும், அதற்குப் பிறகு நடக்கும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்தது இந்த இரவல் சொர்க்கம்."
    Show book