கற்பனையோ அற்புதமோ!
ரமணிசந்திரன்
Editora: Publishdrive
Sinopse
அம்மா!” என்று, தன் ‘சன்னி’யைக் கிளப்பியவாறே உரக்க அழைத்தாள் சித்ரகலா. “நான் ஸ்கூலுக்குப் போய்விட்டு வருகிறேன்...” என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோதே, அவளுடைய அன்னை மாலினி வந்து சேர்ந்தாள்.கையிலிருந்த உணவு பாக்கெட், தண்ணீர் அடங்கிய பையை ‘சன்னி’யில் தொங்கவிட்டவள், “சரிதான்மா, போய் நல்ல பிள்ளையாய்ப் படித்துவிட்டு வாடாம்மா, கண்ணு!” என்று உருக்கமாய்க் கூறவும் தாய் மகள் இருவருக்கும் சிரிப்பு வந்தது.“நூற்றுக்கு ஒரு பத்து... அல்லது பதினைந்து மார்க் வாங்குகிற அளவு படித்தால் போதுமா?” என்று மகள் அப்பாவியாய்க் கண்களை விரிக்க, “சேச்சே! அவ்வளவு கஷ்டப்படாதே, கண்மணி! சும்மா ஓர் ஐந்து, ஆறு மதிப்பெண் எடுத்தால் போதாது?” என்று கேட்க மீண்டும் சதங்கை ஓசையாய் நகையொலி கலகலத்தது.“ம்கூம்! அந்தக்காலத்தில் நீங்கள் என்ன மாதிரி படித்தீர்கள் என்று இப்போது தெரிகிறது. இருக்கட்டும், உங்களை வந்து பேசிக் கொள்கிறேன்!” என்று செல்ல மிரட்டலுடன் வண்டியைக் கிளப்பிச் சென்றாள் மகள்.வெறும் ‘பான்ட்’ மட்டும் மாட்டி விட்டிருந்த நீளக் கூந்தல் காற்றில் பறக்க, எழில் ஓவிமாய்ச் சென்ற மகளின் அழகை ரசித்தபடி நின்றிருந்த மாலினிக்குத் திடுமென உள்ளூரத் திக்கென்றதுபெற்றவளின் கண்தானே பிள்ளைகளுக்கு ஆதாரம்!சேச்சே! அதெல்லாம் சும்மா! பெற்று வளர்த்த தாயார் அன்பாய் ஆசையாய்ப் பார்ப்பதனாலேயே பிள்ளைகளுக்குக் கெடுதல் நேருமா, என்ன? வெறும் கதை!... ஆனாலும், ‘என் மகளை எந்தத் தீமையும் அணுகாமல் கூடவே துணையிருந்து காப்பாற்று, முருகா!’ என்றும் வேண்டிக் கொண்டது அந்த அன்னை மனம் தாயின் மனதில் இப்படி ஒரு சில சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், தான் செல்ல வேண்டிய இடத்தை நல்லபடியாகவே சென்றடைந்தாள் சித்ரகலா.‘காது கேளாதோர், வாய் பேசாதோர்’ பள்ளி அது அவளது பள்ளி இறுதி ஆண்டிலும், கல்லூரி நாட்களிலும் ‘வாலன்டரி வொர்க்’காக அவ்வப்போது இங்கு வந்து. அவள் பணியாற்றினாள். ஏனோ, மனதிற்கு மிகவும் பாந்தமாக இருக்கவே, படிப்பு முடிந்தபின், இங்கு ஒரு முழுநேர ஆசிரியையாகப் பணி செய்யத் தொடங்கினாள்.அவளுடைய தாயார் மாலினிக்கு முதலில் இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ‘பொழுது போகவில்லை என்றால் மேலே படி, படிப்பு விருப்பம் இல்லை என்றால் தையல், பெயிண்டிங், கம்ப்யூட்டர் கோர்ஸ் எதிலாவது சேர். எல்லாம் விட்டு, இது எதற்கு? முதலில் பணி, தொண்டு என்று பெருமையாக இருந்தாலும், எப்போதும் அந்தப் பிள்ளைகளின் இழப்பை எண்ணி ஒரு வேதனையுடனேயே வேலை செய்ய வேண்டும் உனக்கு ஏனம்மா இந்தத் தலையெழுத்து?” என்று மகளைத் தடுக்க முயன்றாள்.“எல்லோரும் இப்படியே நினைத்து விலகிப் போனால் யார் அம்மா அவர்களுக்கு உதவுவார்கள்?” என்று திருப்பிக் கேட்டாள் மகள்.“சம்பளத்திற்காக வருகிறவர்கள் இருப்பார் என்று சொல்லாதீர்கள், மன ஈடுபாடு இல்லாமல் வெறும் கூலிக்காக உழைக்கிற உழைப்பு இங்கே போதாது!” என்று கூறிப் பிடிவாதமாக இந்த வேலையில் சித்ரகலா ஈடுபட்டாள்.ஆனால், அவளை அறிந்த அவளுடைய அன்னை சொன்னது உன்மையில், உள்ளூர ஒரு சிறு வருத்தம் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அந்தப் பிள்ளைகளின் சாதனைகளைப் பார்க்கும்போது அவளுக்கு மகிழ்ச்சியும் அதிகமாகவே இருந்தது. அவர்கள் செய்த கைவினைப் பொருட்களைக் கொண்டுவந்து காட்டியபோது, மாலினியே மிகவும் ஆச்சரியப்பட்டாள். அவ்வளவு நேர்த்தி அவற்றில்! இல்லாத புலன்களின் சக்தியெல்லாம் இருக்கிற மற்ற புலன்களில் வந்து அதிகப்படியாகச் சேர்ந்துவிட்டது போல அவ்வளவு திறமையோடு செய்யப்பட்டிருந்தன
