Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
கனவு மெய்ப்பட வேண்டும் - cover
LER

கனவு மெய்ப்பட வேண்டும்

ரமணிசந்திரன்

Editora: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopse

அன்று காலையிலிருந்தே மைத்திரேயிக்கு ஒரே பரபரப்பு.பல் துலக்கி வந்ததிலிருந்தே தொடங்கிவிட்டாள்! “அம்மா, இன்று தலைக்கு ஷாம்பூ போடுவதா வேண்டாமா?” என்று தாயாரிடம் கேட்டாள்.“போட்டுக் கொள்ளேன். தலைமுடி அழகாகப் பளபளவென்று இருக்கும்!” இது அம்மா சிவகாமி.“என்னம்மா, ஷாம்பூ போடச் சொல்கிறீர்கள்! ஒரு சின்னக் காற்றுக்குக் கூந்தல் பறந்து கலைந்து போய் விடாதா?” இது மைத்திரேயி.“அப்படியானால், ஷாம்பூ போடாதே!”“என்னம்மா, நீங்கள்! அப்புறம், முகமெல்லாம் எண்ணை வழியாதா? நான் வேறு, இன்றைய நேர்முகப் பேட்டியை மறந்து, நேற்று தலையில் எண்ணை வேறு தேய்த்துத் தொலைத்தேன்!” என்று எரிச்சல்பட்டாள் மகள்.“தெரிகிறதில்லையா? பின்னே ஷாம்பூ போட்டு முடி அலசு... அட அட என்னடி நீ? காலை வேளையில், நான். அஷ்டாவதானம்’ செய்கிற நேரத்தில், இன்னும் ஒன்றாய், நீ வேறு என்ன என்னைப் போரடிக்கிறாய்? நீயாய் யோசித்து, உனக்காய்ச் சரி என்று பட்டதைச் செய், போ!” என்று மகளை விரட்டிவிட்டுத் தன் வேலையில் முனைந்தாள் தாய். “இருபத்திரண்டு வயது முடிந்துவிட்டது. இவள் வயதுக்கு நான் இவளைப் பெற்றும் விட்டேன். இவளானால் பச்சைக் குழந்தை மாதிரி எப்படிக் குளிப்பது என்று கேட்டுக் கொண்டு... இருக்கிறாள்!” என்று எரிச்சலோடு முணுமுணுத்தபடி வெட்டி முடித்த காய்களைத் தட்டில் எடுத்து வைத்தாள்.அடுத்து, அவள் வாணலியை அடுப்பில் ‘ணங்’கென்று வைத்த வேகம், தண்ணீர் மோட்டாரை நிறுத்தி விட்டு வந்த சுந்தரத்தைப் பேச வைத்தது. “பெற்றவளுக்கு ரொம்பத் தெரியும் என்று நினைத்து சின்னப்பிள்ளை ஒன்று கேட்டால் பெரிதாகச் சலித்துக் கொள்கிறாயே!”“இதோ, இதைப்பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். சின்னப் பிள்ளையா, அவள்? இருபத்திரண்டு வயது முடிந்து, ஆறேழு மாதங்கள் சென்றாயிற்று ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணத்தைப் பண்ணி வைக்காமல், ‘ட்ராக் சூட்’ போட்டு ஆண்பிள்ளை மாதிரி ஓடக் கூட்டிப் போகிறீர்கள்! இப்போதானால் வேலைக்கு வேறே அனுப்பப் போகிறீர்கள! இப்போது அவள் சம்பாதித்து என்ன ஆகப்போகிறது? காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தை...’“.“என்னடி அவசரம்? இப்போதெல்லாம் இருபத்திநாலு வயதுக்கு முன்னால் யார் பெண்களுக்குத் திருமணம் செய்கிறார்கள்? கொஞ்ச காலம் சுதந்திரமாய் இருக்கட்டுமே! கல்யாணமானால் இருக்கவே இருக்கிறது, கண்டிப்பு, கட்டுப்பாடு எல்லாம். உன்னையே எடுத்துக்கொள்! பத்தொன்பது வயதில் கல்லூரிப்படிப்பு முடியும் முன்பே திருமணம் உடனே குழந்தை! என்றாவது கவலையற்று இருந்திருக்கிறாயா? பிள்ளையாவது சந்தோஷமாய் அனுபவிக்கட்டுமே என்று நினையேன்!”“கல்யாணம், குழந்தை என்றால் கட்டுப்பாடும் கவலையும்தானா? மகிழ்ச்சியாகவும்...அடடா! போங்கள் சார்! காலை வேளையில் வேலை நடுவே வந்து பேச்சுக் கொடுத்தால் இப்படித்தான். பாருங்கள்! கடுகை இரண்டாம் தடவை போட்டிருக்கிறேன்!” என்று அலுப்பும் எரிச்சலுமாக உரைத்தாள் சிவகாமி.“நல்லதுக்குச் சொல்கிற புருஷனோடு மல்லுக் கட்டினாயல்லவா! அப்படித்தான் நடக்கும். டேய், மது, மனோ, இன்றைக்கு உங்களுக்குக் காய்ப் பொரியலுக்குப் பதிலாக, உன் அம்மா கடுகுப் பொரியல் செய்திருக்கிறாளாமடா! நன்றாகச் சாப்பிடுங்கள்! நல்லவேளையாக எனக்கு மதியச் சாப்பாடு வெளியே! கலெக்டர்கள் கூட்டம் மதிய உணவோடு சேர்ந்து இருக்கிறது! தப்பித்தேன்!” என்று அவர் சிரிக்கவும் சிவகாமியின் முகம் லேசாகச் சிவந்தது
Disponível desde: 03/04/2025.
Comprimento de impressão: 136 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Iraval Sorgam - cover

    Iraval Sorgam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
    மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி நெஞ்சுவலியால் அவதிப்படும் தன்னுடைய அப்பாவைக் கூட்டிக்கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வருகிறாள். இரண்டு ட்யூட்டி டாக்டர்களின் காமப்பார்வை அவள் மேல் விழுகிறது. அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பித்தாளா இல்லையா என்பதும், அதற்குப் பிறகு நடக்கும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்தது இந்த இரவல் சொர்க்கம்."
    Ver livro
  • Sirappuranam Hijiraththukkantam - cover

    Sirappuranam Hijiraththukkantam

    Umaruppulavar

    • 0
    • 0
    • 0
    தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர். இந்நூலை முழுவதும் முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். 
    ஈமான் கொண்ட படலம்; மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம்; யாத்திரைப் படலம்; விடமீட்ட படலம்; சுறாக்கத்துத் தொடர்ந்த படலம்; உம்மி மகுபதுப் படலம்; மதீனம்புக்க படலம்; கபுகாபுப் படலம்; விருந்திட்டீமான் கொள்வித்த படலம்; உகுபான் படலம்; சல்மான் பாரிசுப் படலம்; ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்; ஓநாய் பேசிய படலம்; வத்தான் படைப் படலம்; பாத்திமா திருமணப் படலம்; சீபுல் பகுறுப் படலம்; புவாத்துப் படலம்; அசீறாப் படலம்; பத்னுன்ன குலாப் படலம்; பத்றுப் படலம்; சவீக்குப் படலம்; குதிரிப் படலம்; தீயம்றுப் படலம்; அபிறாபிகு வதைப் படலம்; அசனார் பிறந்த படலம்; அபூத்தல்ஹா விருந்துப் படலம்; உகுதுப் படலம்; அமுறாப் படலம்; ககுபு வதைப் படலம்; சுகுறாப் படலம்; பதுறு சுகுறாப் படலம்; உசைனார் பிறந்த படலம்; தாத்துற் றஹ்ஹாக்குப் படலம்; சாபிர் கடன் றீர்த்த படலம்; முறைசீக்குப் படலம்; கந்தக்குப் படலம்; உயை வந்த படலம்; பனீ குறைலா வதைப் படலம்; லுமாமீமான் கொண்ட படலம்; செயினபு நாச்சியார் கலியாணப் படலம்; ஒட்டகை பேசிய படலம்; மழையழைப்பித்த படலம்; அந்தகன் படலம்; கவுலத்தை விட்டுக் கூட்டின படலம்; உமுறாவுக்கு போன படலம்; சல்மா பொருத படலம்; உறனிக் கூட்டத்தார் படலம் என ரமணியின் இந்த ஒலி நூலில் ஹிஜிறத்துக் காண்டம் (ச
    Ver livro
  • Chandu - cover

    Chandu

    Shanthinath Desai

    • 0
    • 0
    • 0
    ಶಾಂತಿನಾಥ ದೇಸಾಯಿ ಅವರು ಪ್ರಮುಖ ಆಧುನಿಕ ಕನ್ನಡ ಲೇಖಕರಾಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಅವರ ಕಥೆಗಳು ಮಾನವ ಸಂಬಂಧಗಳ ವಿಷಯಗಳೊಂದಿಗೆ ವ್ಯವಹರಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಬದಲಾಗುತ್ತಿರುವ ಸಮಾಜದ ಸವಾಲುಗಳನ್ನು ಮತ್ತು ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಮೌಲ್ಯಗಳಿಂದ ಅದರ ದಿಕ್ಚ್ಯುತಿಯನ್ನು ಅನ್ವೇಷಿಸುತ್ತದೆ.
    Ver livro
  • Kapilathevarnayanar Hymns - cover

    Kapilathevarnayanar Hymns

    Kapilathevanayanar

    • 0
    • 0
    • 0
    பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு அந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர் கபிலதேவர். கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் இவரும் ஒருவரே எனக் கருதுவோரும் உளர். 
    விநாயகர் வழிபாடு 
    விநாயகர் வழிபாடு தமிழகத்தில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பரவலாக இடம் பெற்றிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுவதால் மூத்த நாயனாராகிய விநாயகர் மீது பிரபந்தம் அருளிய இவர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பர் சிலர். மேலும் இவர் அருளிய யாப்பு வகைகள் பிற்காலத்தன ஆதலினானும் இவர்தம் நூல்களின் சொல்லாட்சிகள் பிற்காலத்தனவாய் இருத்தலானும் இவரும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆதல் கூடும் எனப் பேராசிரியர் திரு. க வெள்ளைவாரணனார் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.
    Ver livro
  • May June Julie - cover

    May June Julie

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    ஒரு இளம் பெண் திடிரென்று தற்கொலை செய்து கொள்கிறாள். அவளின் கணவன் தன் மனைவி தற்கொலை செய்துகொள்ள எந்தக் காரணமும் இல்லை என்று நம்புகிறான். துப்பறிவாளர்கள் பரத்-சுசீலா களத்தில் இறங்க, மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.
    
    A young woman kills herself. Her husband swears that there is no reason for her to commit suicide. Detectives Bharath and Suseela start investigating and mysterious incidents unfold. To know more listen to May June Julie.
    Ver livro
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Anônimo

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Ver livro