Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
கண்ணே கண்மணியே! - cover
LER

கண்ணே கண்மணியே!

ரமணிசந்திரன்

Editora: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopse

அடுத்தது சுவாதி கேபிள்ஸ், கம்பெனிக்குரிய பதில் சார். நம்முடைய ரேட்டைக் குறிப்பிட்டு இருக்கிறோம்” என்று கடைசிக் கடிதத்தை மேனேஜர் வினோதனுடைய கையெழுத்துக்காக நகர்த்தினாள் மதுரா.மேலெழுந்தவாரியாக பார்வையிட்ட பின்னர் அவன் கையெழுத்திட்ட அத்தனை கடிதங்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பலானாள்.“வேலை நிறைய இருக்கிறதா?” என்று வினோதனின் குரல் அவளை நிறுத்தியது!“இல்லை ஸார். இதையெல்லாம் உறையில் இட்டு ஒட்ட வேண்டும். அவ்வளவுதான். முகவரிகூட டைப் செய்தாயிற்று.”“பத்து நிமிடங்களில் கிளம்பி விடுவாய்?” என்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான் அவன்.“ஆமாம்” என்று கடிதங்களுடன் நகர்ந்தாள் மதுரா.வினோதனின் பார்வை தன்மீது படிந்திருப்பதை உணர்ந்தும் உணராதவள் போன்று ஓர் சீரான வேகத்துடன் அறையை விட்டு வெளியேறினாள்.கடிதங்களை மடித்து, உரிய உறைகளில் இட்டு ஒட்டுகையில் மனது யோசித்தது.வினோதன் பார்வைக்கு நன்றாகத்தான் - மிகவும் நன்றாகவேதான் இருந்தான்.குணமும் நல்லதுதான்.படிப்போடு நல்ல பதவியும் இருந்தது.எல்லாவற்றுக்கும் மேலாக அவளை விரும்புகிறவனும் கூட.தம்பியைப் பார்த்துக் கொள்வான்; தாயாரின் பொறுப்பையும் கூட ஏற்றுக் கொள்வான்.
 
இவனை மறுப்பது மதியீனம்தான்.ஆனால்....‘ஆனால்’தான்.இந்த ஆனால் ஒரு கேள்வியும் இல்லை; இதற்கு விடை மட்டுமின்றி, முடிவும் இல்லை.வினோதனின் மனம் நோகாதபடி அவனது அழைப்பை மறுத்துவிட்டு, காத்து நின்று பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்த போது மதுரா மிகவும் களைத்துப் போயிருந்தாள்.உடலைக் காட்டிலும் மனது மிகவும் ஓய்ந்து போயிருந்தது.வினோதனோடு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் எத்தனை நாள் ஆடுவது?அவனை ஒப்புவதோ முடியாத காரியம்.வெளிப்படையாக அவன் கேட்டு இவள் மறுக்க நேர்ந்து விட்டால் பிறகு அங்கே தொடர்ந்து பணிபுரிவது எப்படி சாத்தியம்?வேலையை விட்டு விலகினாலோ வேறு வேலை கிடைப்பது - அதுவும் இந்தப் போட்டிக்குள் கிடைப்பது எளிதல்லவே.வேலையில்லாமல் - அதன் மூலம் வரும் பணம் இல்லாமல் இந்த வீட்டில் ஒரு நாள் வாழ முடியுமா?”எண்ணி எண்ணி ஓய்ந்து போயிருந்த மனதை மேலும் உளைப்பதற்கென்று வீட்டிலும் பிரச்சினைகள் காத்திருந்தன.வாயிலில் நின்றபடி தெரு முனைவரை ஒருதரம் எட்டிப் பார்த்துவிட்டு, “தம்பி இன்னமும் வரவில்லையம்மா” என்று கவலையுடன் உரைத்துவிட்டு உள்ளே சென்று தன் கட்டிலில் சாய்ந்தார் புவனேஸ்வரி.எவனாவது நண்பனோடு அரட்டை அடித்துக் கொண்டிருப்பான் என்று எண்ணியபடியே உள்ளே சென்றாள் மதுரா
Disponível desde: 03/04/2025.
Comprimento de impressão: 190 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Thayumanavar Hymns - cover

    Thayumanavar Hymns

    Thayumanavar

    • 0
    • 0
    • 0
    தாயுமானவர் பாடிய அனைத்துப் பாடல்களும் இந்த ஒலி நூலில் யாப்போசையிலும் விருத்த ஓசையிலும் சந்த ஓசையிலும் வழங்கப்பட்டிருக்கின்றன. 
    வழங்கியவர் முனைவர் ரமணி. 
    தாயுமானவர் திருப்பாடற்றிரட்டில் உள்ள பாடல்கள் இவையாம். 
    1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் 2 பரிபூரணானந்தம் 3 பொருள் வணக்கம் 
    4 சின்மயானந்தகுரு 5 மௌனகுரு வணக்கம் 6 கருணாகரக்கடவுள் 
    7 சித்தர்கணம் 8 ஆனந்தமானபரம் 9 சுகவாரி 10 எங்கு நிறைகின்ற பொருள் 
    11 சச்சிதானந்தசிவம் 12 தேசோ மயானந்தம் 13 சிற்சுகோதய விலாசம் 
    14 ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம் 15 தேன்முகம் 16 பன்மாலை 
    17 நினைவு ஒன்று 18 பொன்னை மாதரை 19 ஆரணம் 
    20 சொல்லற்குஅரிய 21 வம்பனேன் 22 சிவன்செயல் 
    23 தன்னையொருவர் 24 ஆசையெனும் 25 எனக்கெனச் செயல் 
    26 மண்டலத்தின் 27 பாயப்புலி 28 உடல்பொய்யுறவு 
    29 ஏசற்ற அந்நிலை 30 காடுங்கரையும் 31 எடுத்த தேகம் 
    32 முகமெலாம் 33 திடமுறவே 34 தன்னை 
    35 ஆக்குவை 36 கற்புறுசிந்தை 37 மலைவளர்காதலி 
    38 அகிலாண்ட நாயகி 39 பெரியநாயகி 40 தந்தைதாய் 41 பெற்றவட்கே 
    42 கல்லாலின் 43 பராபரக்கண்ணி 44 பைங்கிளிக்கண்ணி 
    45 எந்நாள்கண்ணி 46 காண்பேனோ என்கண்ணி 47 ஆகாதோ என்கண்ணி 
    48 இல்லையோ என்கண்ணி 49 வேண்டாவோ என்கண்ணி 50 நல்லறிவே என் கண்ணி 51 பலவகைக்கண்ணி 52 நின்றநிலை 53 பாடுகின்ற பனுவல் 
    54 வண்ணம் 55 அகவல் 56 ஆனந்தக்களிப்பு
    Ver livro
  • Ondu Soligi Godi - cover

    Ondu Soligi Godi

    Raghvendra Patil

    • 0
    • 0
    • 0
    Short story by Raghvendra Patil
    Ver livro
  • Poo Nilavil - cover

    Poo Nilavil

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Ver livro
  • AanaiMudi - cover

    AanaiMudi

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Ver livro
  • Echcham - cover

    Echcham

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ஒரு பழமையான மளிகைக் கடையில், 80 வயது பாட்டாவும் அவரது இளம் கணக்குப் பிள்ளையும் நாள்தோறும் சுவாரசியமான உரையாடல்களில் ஈடுபடுகின்றனர். வெள்ளைக்காரர்களின் விந்தையான ஒரு பழக்கத்தைப் பற்றி அயராது கேள்விகள் எழுப்புகிறார்.வாழ்க்கையின் கடின உழைப்புக்கும் ஓய்வுக்குமிடையே மறைந்திருக்கும் உண்மையை அவர்கள் ஒருநாள் உரையாடலில் கண்டடைகிறார்கள், ஆனால் உண்மையில் எஞ்சியிருப்பது என்ன?
    Ver livro
  • Sivagamiyin Sabatham Part 3 - cover

    Sivagamiyin Sabatham Part 3

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    'Sivagamiyin Sabadham' is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikesi II, and the Pallava Emperor, Mahendra Varmar and at a later stage, his son, Narasimha Varmar, forms the core of the novel. 
    அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது."
    Ver livro