Rejoignez-nous pour un voyage dans le monde des livres!
Ajouter ce livre à l'électronique
Grey
Ecrivez un nouveau commentaire Default profile 50px
Grey
Abonnez-vous pour lire le livre complet ou lisez les premières pages gratuitement!
All characters reduced
கண்ணை நம்பாதே - cover

கண்ணை நம்பாதே

ரமணிசந்திரன்

Maison d'édition: Pocket Books

  • 0
  • 0
  • 0

Synopsis

சூளைமேடு.கங்கையம்மன் கோயில் வீதியின் கடைசி குறுக்குத் தெரு மின்சாரத்தைத் தொலைத்துவிட்ட இருட்டில் இருக்க, வேப்ப மரத்துக்குக் கீழே இருந்த சிறிய வீட்டில் செல்போனின் ரிங்டோன் நிசப்தத்தை அறுத்துக் கொண்டு எழுந்தது.போர்வைக்குள் சுருண்டிருந்த சாரதி சட்டென்று தூக்கம் கலைந்து போர்வைக்குள்ளிருந்து இடது கையை நீட்டி சுவரோரமாய் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்து காதில் வைத்தான். தூக்கம் அறுபடாத குரலில் கேட்டான்.“யாரு...?”“சாரதி. நான்தான் அலமேலு அம்மா பேசறேன்.”“ஓ, நீங்களா...? என்னம்மா இந்த நேரத்துல போன்...?”“சாரதி, நீ எனக்கொரு உதவி பண்ணனும்...?”போர்வையை உதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான் சாரதி. “சொல்லுங்கம்மா. என்ன செய்யணும்...?”“ஒரு மருந்து வேணும். நெஞ்சுவலிக்கான மாத்திரை. வீட்ல இருக்கும்னு நினைச்சு வாங்காமே விட்டுட்டேன். இப்போ நெஞ்சுல லேசா வலி. இப்படி லேசா வலி வந்தாலே உடனே மாத்திரையைப் போட்டுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார். மாத்திரை போடலைன்னா வலி அதிகமாய்டும்ன்னும் சொன்னார். இப்ப மணி பனிரெண்டு. கோடம்பாக்கம் மெயின் ரோட்டுக்குப் போனா அங்கே தன்வந்தரி மெடிக்கல் ஷாக் விடிய விடியத் திறந்திருக்கும். நீ ஒரு நடை போய் வாங்கிட்டு வந்து குடுத்துடறியா சாரதி...?”“என்னம்மா இப்படிக் கேக்கறீங்க...? இதோ கிளம்பிட்டேன். இன்னும் இருபது நிமிஷத்துக்குள்ளே அந்த மாத்திரை உங்க கையில இருக்கும். மாத்திரையோட பேர் என்ன...?”“இபுபுரோஃபென்”“இப்ப ஞாபகம் வருதும்மா. போன மாசம்கூட ஒரு தடவை இந்த மாத்திரையை நான் உங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன்.”“அதேதான்.”“இந்த அகால நேரத்துல உனக்குத் தொந்தரவு தர்றேன் சாரதி.”“இதெல்லாம் ஒரு தொந்தரவே கிடையாதம்மா. இதோ நான் உடனே புறப்படறேன்.”செல்போனை அணைத்துவிட்டு, போர்வையை உதறிக் கொண்டு எழுந்த சாரதி, லுங்கியைக் களைந்துவிட்டு வேகவேகமாய் பேண்ட்டுககும் சர்ட்டுக்கும் மாற ஆரம்பித்தான்சற்றுத் தள்ளி பாயில் படுத்துக் கொண்டிருந்த சாரதியின் அம்மா ராஜம் எழுந்து உட்கார்ந்தபடி ஈனஸ்வரத்தில் கேட்டாள்.“எங்கடா புறப்பட்டே...?”“அலமேலு அம்மாவுக்கு அர்ஜெண்டா ஒரு மருந்து வேணுமாம். போய் வாங்கிக் கொடுத்துட்டு வந்துடறேன்ம்மா...”“சாரதி, நா ஒண்ணு சொன்னா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே...?”“என்னம்மா...?”“பகல் பூராவும் ஹோட்டலிலிருந்து சாப்பாடு எடுத்துட்டுப் போய் ‘ஆன்லைன்’ல சப்ளை பண்ணிட்ட வர்றே. படுத்து தூங்கறதுக்கு பதினோரு மணி ஆயிடுது. ஒரு ஆறுமணி நேரமாவது தூங்கி எந்திரிச்சாத்தானே உடம்பு நல்லாயிருக்கும். இப்படி அர்த்த ராத்திரியில் யாராவது போன் பண்ணிக் கூப்பிட்டா ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிட வேண்டியதுதானே...?”“அப்படியெல்லாம் என்னால சொல்ல முடியாதம்மா. அந்த அலமேலு அம்மா ரொம்ப நல்லவங்க. நீ எப்படி எங்கிட்ட உரிமை எடுத்துக்கிட்டு பேசுவியோ அதே மாதிரிதான் அந்த அம்மமாவும் பேசும். அந்த அம்மாவோட வீட்டுக்காரர் போன வருஷம்தான் தவறிட்டார். குழந்தைங்க வெளிநாட்ல இருக்காங்க. மூணு வேளையும் ‘ஆன்லைன்’ சாப்பாடுதான். நான்தான் கொண்டு போய் குடுத்துட்டு இருக்கேன். இப்ப போன்ல நெஞ்சு வலிக்குது, மருந்து உடனே வேணும்னு கேக்கும்போது எப்படீம்மா ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழிக்க முடியும்...? போயிட்டு ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே வந்துடறேன்மா.”“சரி, சரி... போ, போ... நான் சொன்னா நீ கேட்கவா போறே.? மணி எவ்வளவு...?”“பனிரெண்டே கால்.”“ரெண்டு நாளா தெருவிளக்கு எரியலை. மெயின் ரோடு போகிற வரைக்கும் இருட்டாய் இருக்கும். வண்டியைப் பார்த்து ஓட்டு.
Disponible depuis: 13/01/2024.
Longueur d'impression: 128 pages.

D'autres livres qui pourraient vous intéresser

  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும்,  ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Voir livre
  • Irumbu Pattampoochigal - cover

    Irumbu Pattampoochigal

    Rajesh Kumar

    • 0
    • 0
    • 0
    இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு ஆண்களுக்கு மட்டும் இல்லை, பெண்களுக்கும் உண்டு என்று சொல்ல வருகிற கதையம்சம் கொண்ட நாவல் இது. பெண்கள் உடலளவில் மென்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் பெண்களில் பலர் உள்ளத்தளவில் வலிமை வாய்ந்தவர்கள். அப்படிப்பட்ட பெண்களுக்குப் பெயர் இரும்புப் பட்டாம்பூச்சிகள். அந்த இரும்புப் பட்டாம்பூச்சிகளில் ஒருத்திதான் இந்த நாவலின் நாயகி. அவள் செய்த சாகசம்தான் என்ன? காது கொடுத்து கேளுங்கள்.
    Voir livre
  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Voir livre
  • Adhirum Udhiram - cover

    Adhirum Udhiram

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Crime against women is one of the most common news we read/hear about. This blood-curdling book talks about a new kind of crime against women. Listen to Adhirum Udhiram to know more.
    
    மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பெண்மை பலரால் போற்றப்பட்டுக்கொண்டு இருந்தாலும் ஒரு சிலரால் அந்தப் பெண்மை
    கயமைப்படுத்தப்பட்டு வருகிறது. பாலியல் சீண்டல், பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு என்ற பெயர்களில் பெண்கள் சீரழிக்கப்பட்டு வருவதை நாளிதழ்களில் படித்தும், தொலைக்காட்சிகளில் செய்திகளாக
    கேட்டும் வருகிறோம். மாதர் சங்கங்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்துகின்றன.  அண்மைக்காலமாய் பெண்களின் மேல் இன்னொரு விபரீதம் அரக்கத்தனமாய் பாய்ந்து குதறி எடுத்துக்கொண்டு இருக்கிறது. அது எதுமாதிரியான விபரீதம் என்பதை நீங்கள் அறிய நேரும்போது உங்களின் உதிரம் அதிரப்போவது உறுதி.
    Voir livre
  • Ettu Bommai Kaaval - cover

    Ettu Bommai Kaaval

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Usually villages have one guardian deity but this village has eight deities on the eight entrances into the village. There is a treasure hidden in the village and it is impossible to loot it. Someone tries to loot it. What happens? Listen to Ettu Bommai Kaaval.
    
    கிராமங்களில் நுழைமுகத்தில் காவல் தெய்வம் என்று ஒன்றிருக்கும். ஆனால் ஒரு கிராமத்தில் அதன் எட்டு திசையிலும் காவல் தெய்வங்கள் உள்ளன. கிராமத்துக்குள் ஒரு தங்கப்புதையல். அந்த தெய்வங்களை மீறி அதை ஒருவர் கொண்டு செல்ல முடியாது.  ஒருவன் முயல்கிறான்! முடிந்ததா அவனால்?
    Voir livre
  • Ragasiyamaga Oru Ragasiyam - cover

    Ragasiyamaga Oru Ragasiyam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    The temple in the village of Siddharpatti is closed everyday at 6PM. Anyone who stays inside the temple post 6 PM gets killed by KaalaBhairava. Listen to this intriguing thriller to know why.
    
    சித்தர்பட்டி ஒரு கிராமம் -இங்கே சித்தர்கள் கட்டிய சிவன் கோயில் ஒரு அதிசயம்.இந்த கோயில் மாலை ஆறு மணியானால் மூடப்படும். ஆறு மணிக்கு மேல் கோயிலுக்குள்  யார் இருந்தாலும் காலபைரவனால் கொல்லப்படுவார். ஏன் அப்படி? திருப்பமும் பரபரப்பும் நிறைந்த திரில்லர் தான் ரகசியமாக ஒரு ரகசியம்.
    Voir livre