Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
கிழக்கு வெளுத்ததம்மா - cover
LER

கிழக்கு வெளுத்ததம்மா

ரமணிசந்திரன்

Editora: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopse

அன்றைய மீட்டிங் தன்னை இவ்வளவு தூரம் பாதித்து விடக்கூடும் என்று எட்டாத கற்பனையில் கூட மீரா எண்ணியிருக்கவில்லை. பாதிப்பை உணர்ந்த பிறகும் கூட அவளால் அதை நம்ப இயலவில்லை.ஆறு ஆண்டுகள்!நீண்ட நெடிய ஆறு ஆண்டுகளாகப் பயின்று வைத்திருந்த அமைதி அப்படிப் பறந்துவிடுமா?எதையோ இழந்துவிட்டாற்போல என்னவோ கிட்டாமல் போனதுபோல நெஞ்சுக் கூட்டினுள் ஏன் இந்தத் தவிப்பு?அன்றைய நிகழ்ச்சிகளை அசைபோடக்கூட! உள்ளுர அவளுக்கு அச்சமாக இருந்தது.அச்சமென்ன? அதற்கு அவசியமே இல்லையே என்று வெகு சிரமப்பட்டு ஓர் அலட்சியத்தை வருவித்துக் கொண்டு அவள் நிமிர்ந்தபோது அவளது காண்டஸா, கேட்டின் வழியே வழுக்கிய படி சென்று அவளது வீடு என்று சொல்லப்படும் மாளிகையின் முன்னே சென்று நின்றது.சூழ்நிலையை உணர்ந்து சுதாரித்து அவள் திரும்புமுன் பணியாளர் ஒருவன் ஓடிவந்து கார்க் கதவைத் திறந்து விட்டுப் பணிவுடன் ஒருபுறம் ஒதுங்கி நின்றான்.தன் உடைக்குப் பொருத்தமாக எடுத்துச் சென்றிருந்த வெள்ளி நிறக் கைப்பையைக்கூட மறந்து, இயந்திரமாய் இறங்கி வீட்டுப் படியேறினாள மீரா.நேராக அவளது அறைக்குள் சென்று விட்டால், குளிரக் குளிர ஷவரில் குளித்து விட்டால் இந்தக் கொதிப்பு அடங்கி விடுமோ!ஆனால் கொதிப்பா இது?... கொஞ்...சம் கூடக் கோபமே இல்லையே
 
முகத்துக்கு நேராகப் ‘பொய்க் கணக்குச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறீர்கள்’ என்று அவன் குற்றம் சாட்டும் போது கூட ஆத்திரம் வரவில்லையே.ஆனால் உடம்பெல்லாம் எரிகிற மாதிரி இந்த அனலைக் குளிர்விப்பதே நினைவாக மாடிப்பக்கம் திரும்பியவளுக்குத் தன் அறையில் இருந்த ஆள் உயரப் படங்கள் நினைவு வந்தன.அவைகளைப் பார்த்தால் அமைதி திரும்பக் கூடுமோ என்று எண்ணி ஓர் எட்டு எடுத்து வைத்தவள் தயங்கி பக்கவாட்டில் இருந்த ‘ஃப்ரெஞ்ச் லிண்டோ’ வைத் திறந்து கொண்டு இறங்கித் தோட்டத்திற்குச் சென்று மரத்தடிகளில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த ஆசனங்களுள் ஒன்றில் அமர்ந்தாள்.சீராக வெட்டப்பட்டிருக்கும் பாந்த புல் தரையும், இடை இடையே வட்டப் பாத்திகளில் பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகளும் ஆங்காங்கே மரங்களுமாக அந்தப் பரந்த தோட்டம் எப்போதுமே அவளுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவது வழக்கம்.இன்று அதுவும் தோற்றது.இத்தனைக்கும் வானம் கொஞ்சம் அதிக நீலமாக, இலைகள் கொஞ்சம் அதிகப் பசுமையாகத் தான் தெரிகிறது. மலர்கள் கூடக் கொஞ்சம் அதிக அழகாகத்தான் பளிச்சிட்டன...ஆனாலும்...“என்ன நடந்தது மருமகளே!”சற்றுத் திகைத்து “ஓ...ஒன்றுமில்லை மாமா.” என்று பணிவுடன் எழுந்தாள் மீரா.“பரவாயில்லை. உட்காரம்மா.” என்று தானும் அமர்ந்து கொண்டார் சேதுபதி.அவள் மீண்டும் அமரும் வரையில் பொறுத்திருந்து விட்டுப் “பின் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தார். “வந்து ஒரு காபி கூடக் குடிக்கவில்லை? இங்கேயே கொண்டு வரச் சொல்லிவிட்டு வந்தேன்.” என்றார் கரிசனத்துடன்.பாசத்தைப் பொழியும் இவரிடம் என்னவென்று சொல்வது?
Disponível desde: 03/04/2025.
Comprimento de impressão: 181 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Laili Majanoon - cover

    Laili Majanoon

    Va Ve Su Iyer

    • 0
    • 0
    • 0
    தமிழின் முதல் சிறுகதையாக கருதப்படுகிறது. சிறுகதை என்ற வடிவம் இந்தக் கதையோடுதான் தொடங்குவதாக கருதப்படுகிறது. எளிமையான, மிகை உணர்ச்சிக் கதை என்றாலும் இன்றும் படிக்கக் கூடிய கதைதான்.
    Ver livro
  • Mandhira Muzhakkam - cover

    Mandhira Muzhakkam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பழங்காலத்தில் ஏழீக்கரை கிராமத்தில் கொடிகட்டிப் பறந்திருந்த குடும்பம் பொன்னாட்டு மனை . மூத்த வாரிசுகளின் ஆடம்பர சுகபோகமான வாழ்க்கை முறைகளால் இன்று வறுமையில் தள்ளப்பட்டு அந்த குடும்பத்தில் மீதம் உள்ளவர்கள், பத்ரன நம்பூதிரியும் இருபத்தேழு வயதான வேலை இல்லா பட்டதாரி மகன் கிருஷ்ணன் உண்ணியும் தான். கிருஷ்ணன் உண்ணி வீட்டில் இருந்த பழைய ஓலைசுவடிகளை புரட்ட, முன்னோர்களின் நினைவு எழுந்து அவர்களை விட கெட்டிக்காரனாக வேண்டும் என்கிற ஆசை கொள்கிறான்.
    
    இந்நிலையில் புகழ்பெற்ற நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் திருமணம் மூன்றாவது தடவையாக தடைப்பட , இந்த சம்பவங்களின் பின்னணியை தெரிந்து கொள்வதற்காக பெண் வீட்டார் பிரஸ்னம் பார்க்க முடிவுசெய்கிறார்கள். தந்தையின் தூண்டுதலால் அங்கு செல்லும் கிருஷ்ணன் உண்ணி நம்பூதிரியின் பெண் திருமணம் நடைபெற , தன் திறமையை செயல் படுத்தி என்ன செய்கிறான் என்பதை அறிய கேளுங்கள் "மந்திர முழக்கம்"
    Ver livro
  • Makeup Punnagai - cover

    Makeup Punnagai

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    The protagonist is the daughter of a film stars' make-up artist. She falls in love and her life is entangled in problems. Listen to Make-Up Punnagai to know how she succeeds in her love.
    
    கதாநாயகி சினிமாவில் ஒப்பனை எனப்படும் மேக்கப் கலையில் இயங்கும் பெண்மணியின் மகள். அவளுக்கு ஏற்படும் இயல்பான காதலை நிறைவேற்றிக் கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை எப்படி வெல்கிறாள் என்பதே இந்தக் கதை.
    Ver livro
  • Moodargalin Sorgam - cover

    Moodargalin Sorgam

    Vaikom Mohammed Bashir

    • 0
    • 0
    • 0
    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர். நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார். நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.
    Ver livro
  • Irandhukidantha Thendral - cover

    Irandhukidantha Thendral

    Anônimo

    • 0
    • 0
    • 0
    வெளியூரில் வேலை செய்யும் குமரன் தன்னுடைய மனைவி பார்ப்பதற்காக இரவு நேர பஸ்ஸில் பயணம் செய்கிறான். இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி குப்பை மண்டி கிடந்த அந்த இடத்தில் அவன் கண்ட காட்சி அவனை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்ட வைக்கிறது என்பதை திகிலோடு சொல்வதுதான் இந்த கதை.
    Ver livro
  • Kaanal Neero Kanmaniye - கானல் நீரோ கண்மணியே - cover

    Kaanal Neero Kanmaniye - கானல்...

    Uma Nathan

    • 0
    • 0
    • 0
    நேசமான மனைவி, சொந்த தொழில், அன்பான தாய், நலமாய் வாழும் தங்கை, தோள் கொடுக்கும் தோழமை. அதோடு தன் காதல் வாழ்வின் சாட்சியாய் தங்களுக்கு வரப்போகும் குழந்தை என சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த வெற்றியை அடித்து கீழே தள்ளியது, பிரசவத்தில் மரணித்த தன் மனைவி தியாவின் முடிவு. அதற்கு மேல் மற்றொரு அதிர்ச்சி தியாவின் கடைசி ஆசையாய் அவள் தன் தமக்கையை மறுமணம் செய்யக் கூறியது. யாரை இனி தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ அவளையே எப்படி மணந்து கொள்வான்? அதன் பின் அவன் வாழ்வில் சந்தோஷம் இருக்குமா? 
     Loving Wife, Succesful Business, Affectionate Mother, Happily settled sister, Understanding Friends. What more a person need? Vetri is blessed with a baby as a proof of his love with his wife. But all his happiness in cloud nine is doomed, when his wife died in child birth. More than that, his wofe’s last wish for him to marry her elder sister Natchathra. The same person, whom he never wanted to meet in life ever. What will happen in Vetri’s life? Will he see happiness in life again?
    Ver livro