Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு… - cover
LER

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…

ரமணிசந்திரன்

Editora: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopse

“நீங்கள் என்னதான் சொல்லுங்கள் அப்பா. சீதையை ராமர் தீக்குளிக்கச் செய்தது நிச்சயமாய் ரொம்பவும் அநியாயம்தான். பிரிந்திருந்தால் பெண் கெட்டுப் போய் விடுவாளா? அப்படிப் பார்த்தால் ஆண்கள்தான் அந்த விஷயத்தில் ரொம்பவும் மோசம். ஆனா நரைமீசைக்காரன் கூடப் பஸ்ஸில் பெண்ணைக் கண்டால் உரசத்தான் வருகிறான். நியாயமாக என்றால் சீதைதான் ராமரைத் தீக்குளிக்கச் செய்திருக்க வேண்டும். அங்குமிங்கும் அலைந்து திரிந்து வந்தவர் அவர்தானே? அவரை விட்டுவிட்டு அத்தனை ராட்சதர்கள் மத்தியில் சிறையிருந்த அப்பாவி சீதைக்குப் போய் அக்னிப் பரீட்சை வைத்தது எப்படி நியாயமாகும்?நான் மட்டும் சீதையாக இருந்திருந்தால் குறைந்தபட்சம் என்னோடு நீயும் தீக்குளித்து உன் ஏக பத்தினித்தனத்தை நிரூபித்துக் காட்டு என்றிருப்பேன். அது தானேப்பா சரி?”ஏதோ பேச முயன்ற மனைவியைப் பார்வையால் தடுத்து, “நீ என்ன சொன்னாலும் நூறு சதவீதமாய் அதை நான் அப்படியே ஒத்துக் கொள்கிறேன்” என்றார் சிவகுரு.“போங்கள் அப்பா. எனக்காக ஒன்றும் சொல்ல வேண்டாம். நீங்கள் நன்றாக யோசித்து நான் சொல்வது சரியா தப்பா என்று அபிப்ராயம் சொல்லுங்கள். அம்மாவானால், ஓர் அவதாரத்தின் கதையை நான் பார்க்கிற விதமே தப்பு என்கிறார்கள். அவதாரம் என்றால் அதைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றும் விதமாக இருக்க வேண்டாமா? இப்படி மனைவியின் மேல் சந்தேகப்பட்டுக் கொடுமை செய்யவா பயில்வது...? என்னப்பா, நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படி?”“என்னடாம்மா. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டாமே! ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக நன்றாகச் சாப்பிட்டுவிட்டுச் சும்மா உட்காராமல் வேறே என்னதான் செய்வதாம்?”“வேறே ஒன்றும் செய்ய வேண்டாம். சும்...ம்மா அப்படி உட்கார்ந்தபடியே எனக்கு ஒரு பதிலைச் சொல்லுங்கள் போதும்.”
 
மகள் விடப் போவதில்லை என்று கண்டதும், சற்றே யோசித்துவிட்டு, சிவகுரு தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.“பாப்பா, என் அபிப்ராயம் என்னவென்றால்... அதாவது...”தந்தை முடிக்கும் முன் குரலே உணர்த்திவிட்டாற் போல் சௌதாமினி பாய்ந்தாள்.“என்னப்பா நீங்கள்? ராமர் செய்தது சரி என்றா சொல்லப் போகிறீர்கள்?காலம் காலமாய் வருகிற ஆண்புத்தியை நீங்களும் காட்டிவிடாதீர்கள்...”“அட அப்பா பேசி முடிக்கத்தான் கொஞ்சம் இடம் கொடேன். இப்படி என்ன பொறுமை இன்மை, ஒரு பொண்ணுக்கு?” சாரதா அதட்டவும் அதற்குப் பணிந்தவள் போலக் கையால் வாயை மூடிக்கொண்டாள் சௌதாமினி.மகளின் பாவனையில் முறுவலித்துவிட்டு, சிவகுரு சொன்னார்.“ஒரு கணவனாக இருந்து சீதையைத் தீக்குளித்துத் தூய்மை நிலைகாட்டச் சொன்னார் என்றால் ராமர் செய்தது தப்புதான். ஆனால் அவர் ராஜா ராமனாக அல்லவா சொன்னார்! அந்த வகையில்...”“ராஜா ராமன் என்றால் மட்டும் உற்றார் உறவினரைப் பிரிந்து, உற்ற கணவனைப் பிரிந்து, முழுக்க முழுக்க அன்னியர்கள் அதிலும் அரக்கர்கள் மத்தியில் சிறைப்பட்டுக் கிடந்த ஒரு பெண்ணைத் தீக்குளித்து உன் தூய்மையை நிரூபி என்பது எந்த வகையில் நியாயமாகுமாம்? எப்படியும் ராமகதையில் அந்த இடம் மகா மோசமான தப்பு அப்பா. மறைந்திருந்து வாலியைக் கொன்றதை விட மிகமிகப் பெரிய அநியாயம்!”“ஊகூம். இப்போதும் நீ நோக்குகிற விதம் சரியில்லை. சீதை யாரோ ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்திருந்தால் ராமர் இந்த அக்கினிப் பரீட்சை வைத்திருக்க மாட்டார். சீதை அவருடைய மனைவியாக - அயோத்தியின் வருங்கால அரசியாக இருந்ததால்தான் அவளுக்கு அந்த மாதிரி ஒரு கொடுமையான ப்ரீட்சையை அவர் வைக்கும்படி ஆயிற்று
Disponível desde: 03/04/2025.
Comprimento de impressão: 84 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Ennumpozhudhu - cover

    Ennumpozhudhu

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ஒரு இரவின் நெருக்கமான தருணங்களில், கணவன் தன் மனைவியிடம் கேரளத்தின் பழங்கதையொன்றைப் பகிர்கிறான் – தெற்குதிருவீட்டுக் கன்னியின் காதல், நீரின் பிம்பத்தில் பிறந்து சந்தேகத்தின் நஞ்சில் முடியும் சோகக் கதை. அவர்களின் உடல் நெருக்கமும், வார்த்தைகளின் விளையாட்டும், மறைமுகக் கோபங்களும் இந்தக் கதையின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன: காதலின் இனிமை, சந்தேகத்தின் வலி, துரோகத்தின் அழிவு. இந்தக் கதை அவர்களின் திருமணத்திற்கு என்ன பொருள் தருகிறது? இப்போது ஏன் இதை அவளிடம் சொல்கிறான்? உணர்ச்சிகளின் ஆழத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களைத் தேடும் ஒரு கதை.
    Ver livro
  • கொய்யாக்கனி - cover

    கொய்யாக்கனி

    Perunchiththiranar

    • 0
    • 0
    • 0
    பெருஞ்சித்திரனார் (1933–1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைக‌ள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். முப்பத்தைந்து படைப்புகளைப் படைத்துத் தம் இலக்கிய ஆளுமையைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிலைநாட்டினார். இவர் படைப்புகளைப் பயின்றோர் தமிழ் உணர்வும் ஊக்கமும் பெற்றனர். தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டாற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார் அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார். இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன. பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும்; இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன.
    Ver livro
  • Thamizhachiyin Kathi - cover

    Thamizhachiyin Kathi

    Bharathidasan

    • 0
    • 0
    • 0
    தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது. 
    அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் வழியாக வருகையில், வளவனூர்ப் புறத்துத் தென்னந் தோப்பொன்றில் திம்மனைக் காணுகிறார்கள் என்று இக்கவிதை தொகுப்பு ஆரம்பமாகிறது. அவன் மனைவியாகிய சுப்பம்மாவின் மேல் காமம் சுதரிசன் சிங்குக்கு மீறுகிறது. துன்பியல் காப்பியமாக அமையும் இந்நூல் தமிழிச்சியாகிய சுப்பம்மா வீறு கொண்டெழுந்து முடிவில் எப்படி இறக்கிறாள் என்ற கதையைச் சொல்கிறது.
    Ver livro
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Ver livro
  • Raja Vanam - cover

    Raja Vanam

    Ram Thangam

    • 0
    • 0
    • 0
    வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலையோடு விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, பட்சிகள் எனத் தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து, அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது. வனப் பயணத்தை விவரிக்கும் காட்சிகள், நவீன கேமிராக்களில் பதிவானது போல அத்தனை துலக்கம். இப்பிரபஞ்ச வாழ்வை, அணு அணுவாய் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும்.
    Ver livro
  • Silapathikaram Full Story – Tamil Audiobook - cover

    Silapathikaram Full Story –...

    Ilango Adigal

    • 0
    • 0
    • 0
    சங்ககாலத்தின் சிறந்த காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள் எழுதியது. தமிழின் பெருமையை உலகறியச் செய்த இந்த காவியம், கண்ணகியின் பக்தி, பொறுமை, நீதி, மற்றும் வீரத்தை வெளிப்படுத்துகிறது. 
    இந்த ஆடியோபுக்கில், 
    சிலப்பதிகாரம் முழுக் கதை தமிழில் உரையாடல் 
    மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் ஆன்மீக ஆர்வலர்களுக்கு எளிய புரிதல் 
    இலக்கியத்தை காதோரம் கேட்கும் வசதி 
    தினசரி கேட்க சிறந்த வழிகாட்டி 
    சிலப்பதிகாரம் நம்பிக்கையும் நீதியும் எப்போதும் வெற்றி பெறும் என்பதை உணர்த்தும் மகத்தான காவியம்.
    Ver livro