Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு… - cover

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

“நீங்கள் என்னதான் சொல்லுங்கள் அப்பா. சீதையை ராமர் தீக்குளிக்கச் செய்தது நிச்சயமாய் ரொம்பவும் அநியாயம்தான். பிரிந்திருந்தால் பெண் கெட்டுப் போய் விடுவாளா? அப்படிப் பார்த்தால் ஆண்கள்தான் அந்த விஷயத்தில் ரொம்பவும் மோசம். ஆனா நரைமீசைக்காரன் கூடப் பஸ்ஸில் பெண்ணைக் கண்டால் உரசத்தான் வருகிறான். நியாயமாக என்றால் சீதைதான் ராமரைத் தீக்குளிக்கச் செய்திருக்க வேண்டும். அங்குமிங்கும் அலைந்து திரிந்து வந்தவர் அவர்தானே? அவரை விட்டுவிட்டு அத்தனை ராட்சதர்கள் மத்தியில் சிறையிருந்த அப்பாவி சீதைக்குப் போய் அக்னிப் பரீட்சை வைத்தது எப்படி நியாயமாகும்?நான் மட்டும் சீதையாக இருந்திருந்தால் குறைந்தபட்சம் என்னோடு நீயும் தீக்குளித்து உன் ஏக பத்தினித்தனத்தை நிரூபித்துக் காட்டு என்றிருப்பேன். அது தானேப்பா சரி?”ஏதோ பேச முயன்ற மனைவியைப் பார்வையால் தடுத்து, “நீ என்ன சொன்னாலும் நூறு சதவீதமாய் அதை நான் அப்படியே ஒத்துக் கொள்கிறேன்” என்றார் சிவகுரு.“போங்கள் அப்பா. எனக்காக ஒன்றும் சொல்ல வேண்டாம். நீங்கள் நன்றாக யோசித்து நான் சொல்வது சரியா தப்பா என்று அபிப்ராயம் சொல்லுங்கள். அம்மாவானால், ஓர் அவதாரத்தின் கதையை நான் பார்க்கிற விதமே தப்பு என்கிறார்கள். அவதாரம் என்றால் அதைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றும் விதமாக இருக்க வேண்டாமா? இப்படி மனைவியின் மேல் சந்தேகப்பட்டுக் கொடுமை செய்யவா பயில்வது...? என்னப்பா, நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படி?”“என்னடாம்மா. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டாமே! ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக நன்றாகச் சாப்பிட்டுவிட்டுச் சும்மா உட்காராமல் வேறே என்னதான் செய்வதாம்?”“வேறே ஒன்றும் செய்ய வேண்டாம். சும்...ம்மா அப்படி உட்கார்ந்தபடியே எனக்கு ஒரு பதிலைச் சொல்லுங்கள் போதும்.”
 
மகள் விடப் போவதில்லை என்று கண்டதும், சற்றே யோசித்துவிட்டு, சிவகுரு தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.“பாப்பா, என் அபிப்ராயம் என்னவென்றால்... அதாவது...”தந்தை முடிக்கும் முன் குரலே உணர்த்திவிட்டாற் போல் சௌதாமினி பாய்ந்தாள்.“என்னப்பா நீங்கள்? ராமர் செய்தது சரி என்றா சொல்லப் போகிறீர்கள்?காலம் காலமாய் வருகிற ஆண்புத்தியை நீங்களும் காட்டிவிடாதீர்கள்...”“அட அப்பா பேசி முடிக்கத்தான் கொஞ்சம் இடம் கொடேன். இப்படி என்ன பொறுமை இன்மை, ஒரு பொண்ணுக்கு?” சாரதா அதட்டவும் அதற்குப் பணிந்தவள் போலக் கையால் வாயை மூடிக்கொண்டாள் சௌதாமினி.மகளின் பாவனையில் முறுவலித்துவிட்டு, சிவகுரு சொன்னார்.“ஒரு கணவனாக இருந்து சீதையைத் தீக்குளித்துத் தூய்மை நிலைகாட்டச் சொன்னார் என்றால் ராமர் செய்தது தப்புதான். ஆனால் அவர் ராஜா ராமனாக அல்லவா சொன்னார்! அந்த வகையில்...”“ராஜா ராமன் என்றால் மட்டும் உற்றார் உறவினரைப் பிரிந்து, உற்ற கணவனைப் பிரிந்து, முழுக்க முழுக்க அன்னியர்கள் அதிலும் அரக்கர்கள் மத்தியில் சிறைப்பட்டுக் கிடந்த ஒரு பெண்ணைத் தீக்குளித்து உன் தூய்மையை நிரூபி என்பது எந்த வகையில் நியாயமாகுமாம்? எப்படியும் ராமகதையில் அந்த இடம் மகா மோசமான தப்பு அப்பா. மறைந்திருந்து வாலியைக் கொன்றதை விட மிகமிகப் பெரிய அநியாயம்!”“ஊகூம். இப்போதும் நீ நோக்குகிற விதம் சரியில்லை. சீதை யாரோ ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்திருந்தால் ராமர் இந்த அக்கினிப் பரீட்சை வைத்திருக்க மாட்டார். சீதை அவருடைய மனைவியாக - அயோத்தியின் வருங்கால அரசியாக இருந்ததால்தான் அவளுக்கு அந்த மாதிரி ஒரு கொடுமையான ப்ரீட்சையை அவர் வைக்கும்படி ஆயிற்று
Available since: 04/03/2025.
Print length: 84 pages.

Other books that might interest you

  • Ms - cover

    Ms

    Anonymous

    • 0
    • 0
    • 0
    காதல், கல்யாணம், வியாபாரம், வேதாந்தம் என்று வாழ்க்கையின் சவால்களை தன துணிவால் வென்றெடுக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. இது ஒரு தனி மனுஷியின் கதை அல்ல. ஒரு தலைமுறையின் கதை.
    Show book
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Show book
  • Avvaiyar Aathichudi - Tamil AudioBook - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Aathichudi - Tamil...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    ஆத்திசூடி என்பது  ஒளவ்வையார் எழுதிய புகழ்பெற்ற நூல். இந்நூலில் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு நல்லொழுக்கக் கருத்து வழங்கப்பட்டுள்ளது. 
    இதில் தர்மம், ஒழுக்கம், கல்வி, அன்பு, அடக்கம், பணிவு, கடமை போன்ற வாழ்க்கை வழிகாட்டும் நெறிமுறைகள் எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளன. 
    ஆத்திசூடியை படிப்பதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒழுக்க நெறி, பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். 
    இது தமிழ் இலக்கியத்தின் அடித்தள நூல்களில் ஒன்றாகவும், பள்ளிக் கல்வியில் அவசியமான பாடமாகவும் போற்றப்படுகிறது.
    Show book
  • Thaaimai Oru Konam - cover

    Thaaimai Oru Konam

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
    Show book
  • Manipallavam - 3 - cover

    Manipallavam - 3

    Na Parthasarathy

    • 0
    • 0
    • 0
    பூம்புகார் நகரத்தை ஒத்த கதைக்களமும் ஆளப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாக கொண்டு கையாளப்பட்ட நாவல் இது. மற்போர்களின் பெருமையும் வீரத்தயும் விடுத்து அறிவு போர் செய்த ஆற்றல் மிக்க கதாநாயகன் இளங்குமரன் , அவன் மேல் அளவுகடந்த அன்பை செலுத்தி வாசகர் மனதை கொள்ளை கொள்ளும் நாயகி சுரமஞ்சரி என சாதாரணர்களை சுற்றி சுழலும் இந்த கதை மணிபல்லவ தீவில் சில மர்மங்களையும் ஸ்வாரசியங்களையும் கொண்டு விளங்குகிறது. மூன்று பகுதியாய் இல்லாமல் மூன்று பருவங்களாய் படரும் கதை பூம்புகார் வீதிகளில் வாசகர்களை வார்த்தை ஜாலம் கொண்டு உலா வரச்செய்கிறது.
    Show book
  • திரவதேசம் - Thiravadesam Vol 2 of 2 - 2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் - சிறந்த சரித்திர நாவல் - cover

    திரவதேசம் - Thiravadesam Vol 2...

    Dhivakar

    • 0
    • 0
    • 0
    2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் 
    முதலாம் உலகப் போரின் கடைப் பகுதியில் இந்திய இங்கிலாந்து அரசியல் பற்றியது 
    மெட்ராஸில் தொடங்கி தில்லி வழியாக லண்டன் சென்று பம்பாயில் முடியும் கதை 
    பாரதம் உலக நாடுகளில் உயர்ந்த நாடு என்பதை வெளிக்காட்டும் புனிதம் 
    அள்ள அள்ளக் குறையாத பாரத செல்வங்கள் பற்றி பேசும் கதை
    Show book