கொலைவிழும் மலர்வனம்
ரமணிசந்திரன்
Editorial: Pocket Books
Sinopsis
நித்யா ஆச்சரியமாய் நாகலட்சுமியைப் பார்த்தாள். புன்சிரிப்போடு கேட்டாள்.“ஏன் அத்தை அப்படிச் சொன்னீங்க?”“இந்த சம்பந்தம் எனக்குப் பிடிக்கலை”“உங்களுக்கு இந்த சம்பந்தம் பிடிச்சிருக்கிறதா மாமா சொன்னாரே!” ‘‘அவர் பொய் சொல்லியிருக்கார்.”“அவர் ஏன் பொய் சொல்லணும்?”“நித்தி! உனக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பத்தி நான் ஒரு ஸ்கெட்ச் போட்டிருக்கேன். உன்னோட குணத்துக்கும் அழகுக்கும் இந்த பெங்களூர் மாப்பிள்ளை கட்டுப்படியாக மாட்டான். உங்க மாமா உனக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சு உயிலோட வாசகத்தை நிறைவேத்திடனும்னு நினைக்கிறார். உன்னைத்தேடி ஒரு ராஜகுமாரன் வர்றதுக்குள்ளே ஒரு சிப்பாயைப் பார்த்துக் கட்டி வெக்க ஆசைப்படறார்”நித்யா சிரித்தாள்.“அத்தை! மாமா எனக்கு என்னிக்குமே நல்லதைத்தான் பண்ணுவார். உங்களுக்கு நல்லாவே தெரியும். எனக்கு ரெண்டு வயசோ, மூணு வயசோ இருந்தப்ப அம்மாவும், அப்பாவும் இறந்துட்டாங்க. கிட்டத்தட்ட அம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்தை இந்தப் பதினேழு வருஷமா கட்டிக் காத்து ஒரு கார்டியனா இருந்து, ஒரு சல்லிக் காசுக்குக்கூட ஆசைப்படாமே என்கிட்ட மாமா குடுத்திருக்கிறார். இந்தப் பதினேழு வருஷத்துல அவர் நினைச்சிருந்தா என்னை எமாத்தியிருக்க முடியும் ஆனால் அவர் என்னை ஏமாத்தலை. எல்லாகாரியத்துக்குமே அவர் எனக்கு அப்பாவா, நீங்க அம்மாவா இருந்திருக்கீங்க. மாமா எனக்குப் பார்த்திருக்கிற இந்த மாப்பிள்ளை நல்லவரோ கெட்டவரோ எனக்குத் தெரியாது. அவர் முடிவு பண்ணிட்டார். நான் கழுத்தை நீட்டப் போறேன்”நாகலட்சுமி ‘உச்’ கொட்டினாள்உன்னோட மாமா மாதிரியே நீயும் அவசரப்படறே நித்தி. இப்போ பார்த்திருக்கிற பெங்களூர் மாப்பிள்ளையைப் பத்தி நான் எந்தக் குறையும் சொல்லத் தயாராயில்லை, என்னோட தம்பி கோபிநாத் பெங்களூர் போய் ஒரு வாரம் இருந்து மாப்பிள்ளையைப் பத்தின. சகல விஷயங்களையும் சேகரிச்சுட்டு வந்திருக்கான். அவனுடைய ரிப்போர்ட்படி மாப்பிள்ளைக்கு நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் தரலாம். இருந்தாலும் என் மனசுக்குப் பிடிக்கலை. இதைக் காட்டிலும் ஒரு நல்ல இடம் வரும். அது வரைக்கும் வெயிட் பண்ணு நித்தி”நித்யா பார்வையைக் கீழே தாழ்த்தி ஒரு ரோஜா மோக்கைக் கை விரலால் தடவிக் கொண்டே சொன்னாள். “ஸாரி அத்தை. நான் பெங்களூர் வரப்போறதா மாமாகிட்டே சொல்லிட்டேன். எல்லாத்துக்கும் மேலா எனக்கு அந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கு...”நாகலட்சுமி நித்யாவின் கன்னத்தை தட்டினாள்.சிரித்தாள்.“ஒகே நித்தி... உனக்குப் பிடிச்சிருந்தா சரிதான்... உன்கூட பெங்களூர் வரணும்ன்னு எனக்கும் ஆசைதான். ஆனா இந்த நொண்டியாலே வர முடியாது... பங்க்ஷனை வீடியோ எடுத்தா கேஸட்டைக் கையோட வாங்கிட்டு வா. போட்டுப் பார்க்கலாம்...”நித்யா நாகலட்சுமியின் மின்சாரம் பாய்ந்து சாம்பல் நிறமாகிப் போன கால்களைக் கழிவிரக்கத்தோடு பார்த்தாள்.நாம கார்லதானே போறோம் அத்தை. வீல்சேரை காரோட டாப் காரியரில் கட்டி பெங்களூர் கொண்டு போயிடலாமே...!”“வேண்டாம் நித்தி... நான் வரலை. ஒரு சுப காரியம் நடக்கறப்போ நான் நாற்காலியை உருட்டிக்கிட்டு அலைஞ்சா அது பார்க்கிறதுக்கு நல்லா இருக்காது. மாமாவே வர வேண்டாம்ன்னு சொல்லிட்டார். சொர்ணம் இருக்கா. என்னைப் பார்த்துக்குவா...”“ஓ.கே… அத்தை நான் குளிச்சுட்டு வந்துடறேன்நித்யா நகர, நாகலட்சுமி மறுபடியும் கூப்பிட்டாள்.“நித்தி”“ம்...”நந்த கோபாலின் மனைவி லட்சுமியும், மகள் ஷோபனாவும் பக்கத்து அறையிலிருந்து ஒன்றாய் வெளிப்பட்டுப் புன்னகைத்துக் கொண்டே நித்யாவின் தோளைப் பற்றினார்கள்
