Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
கானமழை நீ எனக்கு! - cover
LER

கானமழை நீ எனக்கு!

ரமணிசந்திரன்

Editora: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopse

அழகிய மெல்லிய விரல்கள், மடிமீது சாத்தியிருந்த வீணையின் தந்திகளைத் தன் போக்கில் மெல்ல மீட்ட, அதில் எழுந்த இனிய ரீங்காரம் அறையை நிரப்ப, யோசனையில் ஆழ்ந்திருந்தாள் பாரதி.சிந்தனையில் சுற்றுப்புறம் மறந்து இலக்கற்று வெளியை வெறித்தபடி அமர்ந்திருந்த நிலையிலும் மகளின் அழகை ரசித்தவாறு சற்றுநேரம் அறை வாயிலிலேயே நின்றாள் சரஸ்வதி.தம்பூரா போலச் சும்மா மீட்டுவது தவிர, மகளின் மோனநிலை கலைவதாக இல்லை என்று நிச்சயப்பட்டு விடவும் பாரதியின் அருகே சென்று, “என்னடா பாரதி, இன்றைய கச்சேரிக்கு வாசிக்க வேண்டிய எல்லாம் வரிசைப்படுத்திக் கொண்டு விட்டாயா? போன வாரக்கச்சேரியில் தோடி வர்ணம் வாசித்தாய், மறக்கவில்லைதானே. இன்றைக்கு... சங்கராபரணத்தில் ‘கருணை செய்...திட... வாசிக்கிறாயா? அடுத்து...” என்றவள் மகள் சும்மா உச்சுக்கொட்டவும் வியந்து, “என்னம்மா?” என்று விசாரித்தாள்.“ஒன்...றுமில்லயம்மா” என்று அலுப்புடன் கூறி வீணையை நகர்த்தி வைத்தாள் பாரதி.“என்னம்மா, சாதகம் செய்யவில்லை?”“என்ன சாதகம் செய்து என்ன, அம்மா? கச்சேரிக்குக் கச்சேரி வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்று கடவுள் வாழ்த்திலிருந்து மங்களம் வரை மாற்றித் திட்டமிட்டு, ஸ்வர சுத்தமாகச் சாதகம் செய்து கஷ்டப்பட்டு வாசிக்கிறோமே, யாராவது முழு ஈடுபாட்டுடன் கேட்கிறார்களா? சபாக்களிலாவது பரவாயில்லை, பத்துக்கு இரண்டு பேராவது ரசித்துக் கேட்கிறார்கள். இந்த மாதிரித் தனியார் நிகழ்ச்சிகள் என்றால் எனக்கு வெறுப்பாக இருக்கிறதம்மா” என்று உரைத்த வண்ணம் வீணையை உறையிலிட்டு, கயிறுகளைக் கவனத்துடன் கட்டினாள் பாரதி
 
பேச்சை நிறுத்தி இதழ்களை இறுக மூடிக் கொண்ட போதும், மகளின் கண்களில் கோபம் குமுறுவதைக் கண்டு “பாரதி, உன்னுடைய கலையே வேறுவிதம். இதே. நாட்டியம் என்றால் கவர்ச்சி என்கிற பெயரில் ஆபாசமாக ஆடலாம். பாட்டில்கூட கண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதற்கேற்ப உடலை ஆட்டிப் பாடலாம். ஆனால் இது... இதில் இதெல்லாம் முடியாது. ஆனால் இது தெய்வீகமான கலை அம்மா. வீணையைப் பார்க்கும் போதே கலைமகளின் நினைவுதானே வருகிறது. மட்டரக ‘கிக்’ வேண்டும் என்பவர்கள் வீணைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யமாட்டார்கள். அதுவும் இவ்வளவு பணம் கொடுத்து தரமான ஓர் இசை விருந்தைத் தானே ரசிக்கும் ஆவலும், தான் ஏற்பாடு செய்யும் விழாவுக்கு வருகிறவர்கள் ரசிப்பார்கள் என்கிற நம்பிக்கையும் இல்லாதவர்கள் இந்தக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்வார்களா? சொல்லு. அதனால் ஒட்டு மொத்தமாய் ஒருவரும் ரசிப்பது இல்லை என்று ஒதுக்கக் கூடாதம்மா” என்று இதமான குரலில் எடுத்துரைத்தார் கங்காதரன்.சற்று யோசித்துவிட்டு, “ஒரேயடியாக அப்படியும் சொல்லி விட முடியாது அப்பா. நீங்களே சொன்னது போல வீணையில் பெரிய ‘ஆர்டிஸ்ட்’டின் கச்சேரி வைத்தேன் என்று ஜம்பம் அடிக்கக்கூட என் கச்சேரியை வைக்கலாமே!” என்றாள் பாரதி.மீண்டும் தாயும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதைக் கவனித்த மகள் சட்டென இளகிப் போனாள். அவளுக்கு எப்போதுமே அவளுடைய பெற்றோரிடம் இது பிடிக்கும். எப்போதும் ஒருவருக்கொருவர் இசைந்து நடப்பதும், திடுமெனப் பிரச்சினைகள் எழும்போதும் ஒருவர் முகத்திலிருந்து அவர் கருத்தை அறிந்து அதற்கேற்ப அடுத்தவர் செயல்படுவதும் காண, கவனிக்க அவளுக்கு மிகவும் பிடிக்கும்.ஒவ்வொரு சமயம் உடன் பயின்ற தோழிகள், ‘என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரீ...ய்ய சண்டை’ என்று கூறும்போது அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்பாவும் அம்மாவும் எப்படிச் சண்டை போடுவார்கள்?வளரவளர, உலக விவரம் புரியத் தொடங்கிய பிறகு பெற்றோரைப் பற்றிப் பெருமையாக உணர்ந்தாள். அம்மாவுக்கு அமைந்தது போல ஒத்த கருத்து உடைய கணவன் அவளுக்கும் கிடைத்தால்... என்றோர் எண்ணமும் தோன்றியதுண்டு.
Disponível desde: 03/04/2025.
Comprimento de impressão: 92 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • கவியகம் - cover

    கவியகம்

    வெள்ளியங்காட்டான்

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    கவியகம் என்ற நூலில் வெள்ளியங்காட்டானின் 54 கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. “என் காவியங்களே என் வாழ்க்கை” என் வாழ்க்கையே என் எழுத்து என்னைப் பற்றிச் சொல்வதற்கு என் இலக்கியங்கள் உயிர் வாழ்தல் மட்டுமே” என்கிறார். “தெளிந்த உள்ளத்துடனும் அச்சமற்ற நிலையிலும் அமைதியுடனும் என் வாழ்நாள் இறுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.” என்று சொல்லி இந்தத் தொகுப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  
    பேராசிரியர் ரமணியின் வாசிப்பில் இக்கவிதை நூல் ஒலிநூலாகியிருக்கிறது. 
     
    Ver livro
  • முத்துத்தாண்டவர் பதம் - cover

    முத்துத்தாண்டவர் பதம்

    Muthuththantavar

    • 0
    • 0
    • 0
    Muthu Thandavar (1525–1600) was composer of Carnatic music. He was an early architect of the present day Carnatic kriti (song) format, which consists of the pallavi (refrain), anupallavi and charanam. He lived in the town of Sirkazhi in Tamil Nadu. Muthu Thandavar, along with Arunachala Kavi (1712–1779) and Marimutthu Pillai (1717–1787) are known as the Tamil Trinity of Carnatic music. Muthu Thandavar also composed several padams, short songs mainly sung accompanying Bharatanatyam performances. Some of these padams are still popular such as Teruvil Varano in raga Khamas and Ittanai tulambaramo in raga Dhanyasi. Ramani has rendered 60 keerthanams in this audio book. 
    முத்துத் தாண்டவர் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625) ஆவர். தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அநுபல்லவி-சரணம் என்கிற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருத்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். பல்லவி-அனுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது. இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் நாட்டியத்திற்காக பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றை உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார். ரமணியின் குரலில் இவருடைய 60 கீர்த்தனங்கள் இந்த ஒலி நூலில
    Ver livro
  • Sirupanjamoolam Innilai Muthumozhikkanji - cover

    Sirupanjamoolam Innilai...

    Post Sangam Poets

    • 0
    • 0
    • 0
    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் ஆவார். 
    இன்னிலை என்னும் பெயரில் பழம்பாடல்கள் சிலவற்றின் தொகுப்பாக ஒரு நூல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்துக்காட்டும் பாடலில் ‘இன்னிலைய காஞ்சி’ என்னும் தொடர் வருகிறது. கைந்நிலை என்னும் நூல் காணப்படாத காலத்தில் 18 என்னும் எண்ணிக்கையைச் சமன்செய்ய இந்த நூல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 
    மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழிஎன்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. நிலையாமையை உணர்த்தும் உலகியல் அனுபவம் உணர்த்துதலால் இப்பெயர் பெற்றது. காஞ்சி என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியம் காட்டும் ஒரு துறை. அது “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முறைமை” என்னும் துறை என்று விளக்கப்பட்டுள்ளது.  இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டது இந்த நூல். அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் தரவு அடியோட
    Ver livro
  • Nirkaadhe Gavanikkadhe - cover

    Nirkaadhe Gavanikkadhe

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    Two rich young men are not satisfied with the luxurious life they have but want to enjoy adrenaline rush by committing some heinous crime! This is the story of the police playing hide and seek with these 2 youngsters. Listen to Nirkadhe Gavanikkadhe.
    
    இரண்டு பணக்கார இளைஞர்களுக்கு அத்தனை உல்லாசத்தையும் அனுபவித்ததும் சாகசமான குற்றங்கள் செய்யும் விபரீத எண்ணம் ஏற்படுகிறது.காவல்துறைக்கும் இவர்களுக்கும் நடுவில் நிகழும் பூனை, எலி துரத்தல்களும், மோதல்களுமே கதை.
    Ver livro
  • Aalavaayan - cover

    Aalavaayan

    Perumal Murugan

    • 0
    • 0
    • 0
    மாதொருபாகன்' நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து 'அர்த்தநாரி', 'ஆலவாயன்' ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு நாவல் 'ஆலவாயன்.' உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் அதைக் கடக்க மனிதர்கள் படும் பாடுகளையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது இந்நாவல்.
    Perumal Murugan has created the novels 'Arthanari' and 'Alavayan' from two different angles following 'Mathorubagan'. These are not successive parts of a novel, but rather are complete and separate from each other. Both start at the same point but travel in different directions. The novel 'Alavayan' aims to see the expansion of the world of women and the feelings that run within it. The novel depicts the relentless onslaught of questions about relationships, and the struggles of human beings to overcome them.
    Ver livro
  • திருப்புகழ் - Volume 9 - cover

    திருப்புகழ் - Volume 9

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. 
    ரமணியின் ஒலி நூலாக்கத்தில் ஒன்பதாம் தொகுதியாக 636 முதல் 700 வரையிலான 65 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் கதிர்காமம் திருக்கோணமலை காசி மாயாபுரி வயிரவிவனம் வெள்ளிகரம் திருவல்லம் வேலூர் விரிஞ்சிபுரம் திருவாலங்காடு திருவோத்தூர் பாக்கம் திருவேற்காடு வடதிருமுல்லைவாயில் திருவலிதாயம் திருவொற்றியூர் திருமயிலை திருவான்மியூர் கோசைநகர் பெருங்குடி தலங்களில் பாடப்பட்டவை. 
     
    Ver livro