¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
ஜனவரி மரணங்கள் - cover

ஜனவரி மரணங்கள்

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ். அகலமான காம்பௌண்ட் கேட்டுக்குள் வண்டியை நுழைத்தான் ஜெயேஷ். லூஸ் ஃபிட்டிங் ஷர்ட்டிலும் பேரலல் பேன்ட்டிலும் ஹீரோத்தனமாய் இருந்தான். குளிர் கண்ணாடி - அவன் பர்சனலாட்டியை சில சதவீதங்கள் ஏற்றியது. (அவனுடைய ‘க்ளோஸப்’ புன்னகை பெண்கள் மத்தியில் ரொம்பவும் பிரசித்தம்.).யமாஹா ஷெல்டர் நிழலுக்கு தந்துவிட்டு கல்லூரியின் பிரதான கட்டிடத்தை நோக்கிப்போனான்.சல்வார் கம்மீஸ், மிடி, சூரிதார், பேண்ட் சர்ட், ஜீன்ஸ் என்று சகலவிதமான உடைகளிலும் இந்தியாவின் வருங்காலத்தூண்கள் மர நிழலில் நின்று புதிதாய் பாடனி க்ரூப்பில் சேர்ந்திருக்கும் சியாமளாவுக்கு அது ஒரிஜினல் தானா... அல்லது பிரா கைங்கர்யமா என்கிற பட்டி மன்றத்தையும், பிசிக்ஸ் லெக்சர்ணி கோகிலா பிரின்சிபால் ரூமுக்குள் போனால் மட்டும் வெளியே வர ஏன் இவ்வளவு நேரமாகிறது என்பதைப் பற்றியும் ஹாஸ்டல் மெஸ்ஸில் போடும் ஊத்தாப்பத்தின் சைஸ் வரவர சின்னதாகிக் கொண்டே வருவதை முன் வைத்து எப்போது ஸ்ட்ரைக் தொடங்கலாம் என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.ஜெயேஷ் மெயின் பில்டிங் வராந்தாவைப் பிடித்து நாலைந்து அறைகளைக் கடந்து அந்த வகுப்பறையின் முன் நின்றான்.தடிமனாய் கண்ணாடி போட்ட பெண் லெக்சரர் க்வார்ட் டைல் கோ எஃபிஷியண்ட்டை மழுங்கின பிளேடாக மாணவ மாணவிகள், மேல் உபயோகித்துக் கொண்டிருந்தார். முன் வரிசை பெஞ்சைத் தவிர மீதி பெஞ்சுக்கள் பூராவும், ஸ்டூடண்ட்ஸ் - கோழித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.முன் வரிசையில் மூன்றாவது பெண்ணாக தாரிணி இருந்தாள். வெள்ளையும் வயலட்டும் கலந்த சூடிதார்க்குள் நுழைந்திருந்தாள். ஒரு ஸ்பிரிங் முடி நெற்றியில் விழுந்து ஸ்டிக்கர் பொட்டைத் தொட்டுப் பார்ப்பதும் விலக்குவதுமாய் இருந்தது.“எக்ஸ்க்யூஸ் மீ...’’ ஜெயேஷ் குரல் கொடுக்க லெக்சரரோடு சேர்ந்து வகுப்பு மொத்தமும் திரும்பிப் பார்த்தது. லெக்சரர் கேட்டாள்.‘‘வாட் டு யூ வான்ட்”‘‘ஐயாம் இன் வாண்ட் ஆஃப் தாரிணி’’ லெக்சரர் கோபமாய் தாரிணியை பார்க்க அந்த கோபத்தைக் கண்டு கொள்ளாதவளாய் புத்தகங்களை அடுக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.ஜெயேஷைப் பார்த்துப் புன்னகைத்தாள்.“நல்ல சமயத்தில் வந்து காப்பாத்தினீங்க ஜெயேஷ்!”“நீ என்ன சொல்றே?’’‘‘சத்தியமா? லெக்சரர் அறுவையைத் தாங்கவே முடியலை. முன்னால் பெஞ்ச்ல உக்காந்துட்டு தூங்கவும், முடியலை! பல்லைக் கடிச்சிட்டிருந்தேன். நல்ல வேளையா நீங்க வந்தீங்க...’’“இப்பவாவது என்னோட அருமை உனக்கு புரிஞ்சுதா?’’ சிரித்தபடி இடதுபுறம் திரும்பினான்.“இந்தப் பக்கம் எங்கே போறீங்க?’’“கார்டனில் உட்கார்ந்து பேசலாம்.’’‘‘வேண்டாம். மொதல்ல காலேஜ் காம்பஸை விட்டு வெளியே போகணும்”“ஏன்?”‘‘எங்க அக்கா பாத்துட்டா வம்பு.”‘‘இது க்ளாஸ் ஹவர். அவங்க வெளியே வர வாய்ப்பில்லை.’’‘‘சொல்ல முடியாது. அக்கா ஃபைனல் இயர் ஆச்சே. ப்ராஜக்ட் வொர்க் அது இதுன்னு வெளியே வந்து சுத்திக்கிட்டிருப்பா... ரிஸ்க் - எதுக்கு ரெஸ்டாரென்ட் போயிடலாம்.’’‘‘எப்படி இருந்தாலும் ஒரு நாள் உங்க அக்காவுக்கு நம்ம விஷயம் தெரியத்தானே போகுது?’‘‘இப்ப தெரிய வேண்டாம். அக்காவோட மேரேஜெல்லாம் முடிஞ்ச பிறகுதான் எங்கப்பா என்னைப் பத்தி பேச்செடுப்பாங்க. அதுக்குள்ள நம்ம காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிய வேண்டாம்.’’‘‘வீட்டுக்குத் தெரிய வேண்டாம். அட்லிஸ்ட் அக்காவுக்கு தெரியறது நல்லது தானே. பின்னால் நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.’’“யாரு சித்ரா அக்காவா? நல்லா செய்வாளே? அவளுக்கு என்னை வீட்ல மாட்டி விட்றதுன்னா கொள்ளை சந்தோஷம். நம்ம காதல் விவகாரம் தெரிஞ்சா - முதல் வேலையா வீட்ல வத்தி வெச்சுருவா...’’பேசிக் கொண்டே பைக் நிறுத்தியிருந்த ஷெல்டருக்கு வந்தார்கள், ஜெயேஷ் கிக்கரை உதைத்தான். பைக் ‘தடதடக்க’ பில்லியனில் அமர்ந்தாள் தாரணி. சைலன்சரில் புகை சிந்த காலேஜ் காம்பஸைப் புறக்கணித்தார்கள்
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 71 páginas.

Otros libros que te pueden interesar

  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Ver libro
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Ver libro
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Ver libro
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver libro
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Ver libro
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Ver libro