Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
இனி வரும் உதயம் - cover

இனி வரும் உதயம்

ரமணிசந்திரன்

Casa editrice: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinossi

“அம்...ம்மா!” என்று இருகைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டாள் நித்யா. நித்யகல்யாணி.அவள் தங்கியிருந்த அந்த வேலை பார்க்கும் பெண்களுக்கான விடுதியில், அவளது அடுத்த அறைக்காரி தன் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று பேர் விரைவிலேயே வந்து சேர்ந்து கொள்ளுவார்கள்.இவர்களால் எப்படி முடிகிறது?வேலை முடிந்து திரும்பி வந்தால் டிபன் சாப்பிடப் போகக்கூடத் தோன்றாமல் அப்படியே விழுந்து கிடக்கத்தானே அவளுக்குத் தோன்றுகிறது; இவர்கள் மட்டும் இப்படித் துள்ளுகிறார்களே! ஒருவேளை மனதின் சோர்வுதான் உடலையும் பாதிக்கிறதோ? விரைவிலேயே செவிப்பறை கிழிந்து விடும் அளவுக்கு உச்சத் தொனியை எட்டியது டிஸ்கோ சங்கீதம். சகித்துக் கொள்ளவும் முடியாமல், பயில்வான் போல கட்டுமஸ்தாக இருந்த பக்கத்து அறைக்காரியோடு மோதும் துணிவும் இல்லாமல் அவளால் சொந்தமாக முடிகிற காரியமாய்த் தன் கைகளால் தன் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டாள்.ஆனால் எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும்? காது மடல்கள் வலிக்கத் தொடங்கவே, எழுந்து சென்று அறைக்கதவோடு சன்னல்களையும் மூடிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.அப்போதும் சத்தம்தான். ஆனால் நல்ல வேளையாக முன்னைப் போலக் காதைத் துளைக்கவில்லை.உதட்டைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு ஊரின் நடு நாயகமாய் இருந்த பெரிய வீடு நினைவு வந்தது. வீட்டைச் சுற்றிலும் மாவும் பலாவுமாகப் பெரிய பெரிய மரங்களோடு - பெரிய பூந்தோட்டமும், மல்லிகை, இருவாட்சியின் மனதை மயக்கும் வாசனையும், அவ்வப்போது ஊர்க் கோடியில் இருந்த கோவிலில் இருந்து காற்றில் மிதந்து வரும் நாதசுர ஓசையும்..கூடவே திருச்சியில் ஒரே ஒரு மாதத்திற்கென்று வாடகைக்கு எடுத்து, ஒரே ஒரு வாரம் மட்டும் தங்கியிருந்த ஒரு சின்ன வீடும்...சின்ன வீடேதானோ?ச்சு...எப்படி இருந்தால் என்ன?எல்லாம் கனவாகி முடிந்துவிட்ட கடந்த காலம். உண்டு முடித்ததும் நாவிலிருந்து மறைந்துவிடும் இனிப்பும், உறைப்புமான சுவைகள்போல, இன்பம் துன்பம் எல்லாம் மறைந்து வெறும் பொறுமையை மட்டும் அவளுக்குத் துணையாகவிட்டுச் சென்றுவிட்ட கடந்த காலம்!நில்லாமல் சுழலும் இயந்திரம் போல் அதற்கும் பழக்கப்பட்டுப் போய் விட்ட இந்த வாழ்க்கையில் இன்று மட்டும் ஏன் இந்த சலிப்பு?அல்லது பழக்கப்பட்டு விட்டதாக எண்ணியதுதான் தவறோ?தவறேதான்.தெருவில் போகும்போதும் வரும் போதும் அங்கங்கே அந்த சுருக் வலிகள் இன்று வரை நிற்கவே இல்லையே!அன்னியராய் நின்று ஆராய்ந்து சொல்வது என்றால் முன்பு கத்தியால் குத்துவதுபோல இருந்த வேதனை இப்போது குண்டூசியில் குத்தும் அளவுக்குக் குறைந்திருப்பதாகக் கூறலாம். மற்றபடி வலி இல்லாத நாள் என்று ஒரு நாளுமே இல்லை.ஒரு வேளை... இன்னும் கொஞ்ச... நிறையக் காலம் கழிந்தால்... தடதடவென்று கதவை ஒங்கித் தட்டும் ஒசையில் திடுக்குற்று, சிந்தனை கலைந்து எழுந்தாள் நித்யா.பொறுமை இழந்த அவசரத் தட்டுகள் சற்று அதிகப்படி நேரமாகவே கதவு தட்டப்பட்டு இருக்க வேண்டும் என்பதை, உணர்ந்து ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.“அட என்னாம்மா, எப்பப் பார்த்தாலும் கதவைப் பூட்டிகினு நீ என்ன தவம் பண்றியா, ஜெபம் செயறியா? வா, உனுக்கு டெலிஃபோனு வந்துக்கிதாம். அழச்சாரச் சொன்னாங்க. வா.” என்று நீட்டினாள் அந்தம்மா
Disponibile da: 03/04/2025.
Lunghezza di stampa: 194 pagine.

Altri libri che potrebbero interessarti

  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Mostra libro
  • Eeram Kasindha Nilam - cover

    Eeram Kasindha Nilam

    C R Ravindran

    • 0
    • 0
    • 0
    கல்வி, மருத்துவம், கழிப்பிடம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் எட்டிப்பார்க்காத சிறிய கிராமத்தில் மண்ணை நம்பி உழைத்து வாழும் எளிய, படிப்பறிவற்ற மனிதர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாமல் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அவற்றைத் தொடர்ந்து அதுவரையிலான நெருக்கமான மனித உறவுகள் சிதைந்து கிராமத்தின் அடிப்படைகள் ஆட்டம் காண்கின்றன. மறைந்துபோன கொங்கு கிராமம் ஒன்றின் கதை மட்டுமல்ல இந்த நாவல். இழந்துபோன பண்பாட்டுக் கூறுகளை மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சான்றும்கூட.
    Mostra libro
  • Aattam - cover

    Aattam

    Perumal Murugan

    • 0
    • 0
    • 0
    2020இல் பெருமாள் முருகனால்  பதின்பருவத்தினர் பற்றி எழுதப்பட்ட மாயம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது இக்கதை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள் இருப்பினும்  அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகு இயல்போடு காட்சிப்படுத்தியிருப்பதுவாசகருக்கு நல்ல  அனுபவத்தை வழங்குகிறது.
    
    ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல புனையப்பட்ட இருபது கதைகளில் ஒன்று இது. ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம்! அந்த எறும்பு வரிசைக் கதைகளில் ஒன்று தான் இது.
    Mostra libro
  • Kaalandhorum Penn - cover

    Kaalandhorum Penn

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல். இது வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் 'பாசிக்குட்டையில்' பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு, குடும்பம், பதிதன்மை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்.
    Mostra libro
  • உதட்டில் உதடு - cover

    உதட்டில் உதடு

    Suratha

    • 0
    • 0
    • 0
    சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். 
    காலக் காவேரியின் சுழிப்பு எல்லைகளைப் பந்தமாக வைத்துச் சுழற்றி நீரும் நெருப்பும் கொள்ளாத கவிதை ஏட்டிலே பூட்டியிருக்கும் சுரதா, எழுத்தாளனைப் போல வாழுங்காலத்து புழுவல்ல. எதிரிக்குச் சதிராடி ஏற்றம் புரியும் அவர் எக்காலத்தும் வாழும் உரிமை பெற்றவராகிவிடுகிறார் உதட்டில் உதடு என்னும் இந்தக் கவித்தை தொகுப்பின் மூலம்..
    Mostra libro
  • Kumizhigal - cover

    Kumizhigal

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    ஒரு கணவன்-மனைவி இடையேயான நெருக்கமான இரவு நேர உரையாடல். உடல் அழகு மற்றும் அடையாள மாற்றங்களால் தூண்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஆழமாக சித்தரிக்கும் கதை. பாரம்பரிய கட்டமைப்புக்கள், சமூக அழுத்தங்கள், பாலின உரிமைகள் இவற்றுக்கிடையேயான மோதல்களைத் தீவிரமாகச் சித்தரிக்கும் இந்த சுவாரஸ்யமான கதை – உங்கள் உள்ளத்தைத் தொட்டு, சிந்தனையைத் தூண்டும்!
    Mostra libro