¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
சொர்க்க வாசல்! - cover

சொர்க்க வாசல்!

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

அண்ணன் நடராஜ் நின்றிருந்த தோரணையும் “யார்றி அவன்” என்று குரலை ஒருமாதிரி இழுத்துக் கேட்ட விதமும் சௌந்தர்யாவின் வயிற்றில் ஓர் அவஸ்தையான ரசாயன கலவையை ஏற்படுத்த கையில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரம் தானாய் நழுவியது.“டிங்...டிணார்”“அ... அண்ணா...” சௌந்தர்யாவின் பெரிய விழிகள் நட்ராஜ் முகத்திலேயே திகைத்து நின்றது. நெற்றியிலும் மேலுதட்டிலும் அவசர அவசரமாய் அரும்பிவிட்ட வியர்வைச்சுரங்கள் வழிய நேரம் பார்த்தன.“அவன் யார்னு கேட்டேன்”“வ... வந்து... வந்து...”பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்த சிவசாமி சௌந்தர்யாவின் நிலைமையைப் பார்த்ததும் முகம் மாறினார்.“டேய் என்னடா நடந்தது?”அப்பாவைப் பொருட்படுத்தவில்லை. நடராஜ் வாயில் இருந்த டூத் பேஸ்ட் நுரையை சமையலறை ஜன்னல் வெளியே தோட்டத்து செடிகள் மீது உமிழ்ந்துவிட்டு சௌந்தர்யாவின் பக்கம் கண்கள் சிவக்க திரும்பினான்.“யாரவன்?”எச்சில் விழுங்கினாள்.“காதலிக்கிறியா?”“ஆ... ஆமா...” சொல்லி முடிப்பதற்குள் உடம்பு பூராவும் சில்லிட்டுப் போன மாதிரியான உணர்வு.“எத்தனை நாளா?“மூ... மூணு மாசமா”“அவன் பேர் என்ன?”“வ... வருண்”“என்ன ஜாதி”“ந... நம்ம ஜாதிதான்”‘என்ன அண்ணன் இவ்வளவு நிதானமாய் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று சௌந்தர்யா நினைத்த வினாடி -நடராஜ் கத்தினான். “ரோகிணி என் பெல்ட்டைக் கொஞ்சம் எடுத்துட்டு வா”அந்தக் கத்தலுக்காகவே காத்திருந்த ரோகிணி சமையலறைக்குள் நுழைந்தாள். கையில் பாம்பு சட்டை உரித்த மாதிரியான பெல்ட்.சிவசாமி பதறிப்போய் நடராஜின் தோளைப் பற்றினார். “டேய்...”“அப்பா இவளை காலேஜுக்கு அனுப்பக்கூடாதுன்னு நான் முடிவு பண்ணினப்ப நீங்க என்ன சொன்னீங்க? சௌந்தர்யா படிக்க ரொம்ப ஆசைப்படறா, படிக்க வையேன்டான்னு சொன்னீங்க. உங்க பேச்சைக் கேட்டு காலேஜுக்கு அனுப்பினேன். இப்ப இவ என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கா தெரியுமாப்பா? இவபடிக்க ஆசைப்படலை. காதலிக்க ஆசைப்பட்டிருக்கா. ஆம்பிளை சுகத்துக்காக...”“டேய் நிறுத்துடா... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு போகாதே. இந்த வயசுல இதெல்லாம் சகஜம். அந்தப் பையன் யாரு. என்னன்னு விசாரிப்போம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த குடும்பமாய் இருந்தா...”“சம்பந்தம் பேசலாம்னு சொல்றீங்களா?”“ஆமா! சௌந்தர்யா சொல்லிட்டா. பையன் ஜாதி பிரச்சினை ஓவர். வேற ஏதாவது பிரச்சனைகள் இருக்கான்னு பார்த்துட்டு...”ரோகிணி குறுக்கிட்டாள்.
Disponible desde: 16/01/2024.
Longitud de impresión: 90 páginas.

Otros libros que te pueden interesar

  • Sivappu Iravu - cover

    Sivappu Iravu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ஆக்டிங் ட்ரைவராக டாக்ஸி ஓட்டும் முத்துக்குமார் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு போகும்போது நிகழும் ஒரு குற்ற நிகழ்வில் மாட்டிக்கொள்கிறான். மறுநாள் காலை பொழுது விடிவதற்குள் முத்துக்குமார் அந்த சிவப்பு இரவிலிருந்து எப்படி தப்பித்தான்? கேளுங்கள்.
    Ver libro
  • Oomatham Pookal - cover

    Oomatham Pookal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    கார்டியாலஜிஸ்ட் அனந்த கிருஷ்ணனும், ஹரேஷூம் ஃபைவ் ஸ்டார் அந்தஸ்தோடு கூடிய மிகப் பெரிய ஹாஸ்பிடலை நடத்தி நகரில் நல்ல பெயர் எடுத்து இருப்பதால் அவர்களுக்கு எதிரிகளும் உருவாகிறார்கள். அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கெட்டப் பெயரை உண்டாக்க வேண்டும் என்பதற்காக மறைமுக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அனந்த கிருஷ்ணனை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
    
    போலீஸ் விசாரணையில் இறங்கி டாக்டர்கள் அனந்த கிருஷ்ணனுக்கும், ஹரேஷூக்கும் எதிராகவும், மறைமுகமாகவும் செயல்படுபவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது, அவர்களால் முடியாமல் போகவே க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக் அதிரடியாய் விசாரணையில்
    இறங்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
    விவேக்கின் புத்திசாலித்தனமான நுணுக்கமான புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி யார் என்பது தெரியும்போது அனைவர்க்கும் மிகப்பெரிய அதிர்ச்சி
    ஏற்படுகிறது.
    
    "அது எதுமாதிரியான அதிர்ச்சி என்று அறிய விருப்பமா ? "க்ரைம் த்ரில்லரான ஊமத்தம்பூக்கள் நாவலை ஒலி வடிவில் கேளுங்கள்.
    Ver libro
  • Adhirum Udhiram - cover

    Adhirum Udhiram

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Crime against women is one of the most common news we read/hear about. This blood-curdling book talks about a new kind of crime against women. Listen to Adhirum Udhiram to know more.
    
    மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பெண்மை பலரால் போற்றப்பட்டுக்கொண்டு இருந்தாலும் ஒரு சிலரால் அந்தப் பெண்மை
    கயமைப்படுத்தப்பட்டு வருகிறது. பாலியல் சீண்டல், பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு என்ற பெயர்களில் பெண்கள் சீரழிக்கப்பட்டு வருவதை நாளிதழ்களில் படித்தும், தொலைக்காட்சிகளில் செய்திகளாக
    கேட்டும் வருகிறோம். மாதர் சங்கங்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்துகின்றன.  அண்மைக்காலமாய் பெண்களின் மேல் இன்னொரு விபரீதம் அரக்கத்தனமாய் பாய்ந்து குதறி எடுத்துக்கொண்டு இருக்கிறது. அது எதுமாதிரியான விபரீதம் என்பதை நீங்கள் அறிய நேரும்போது உங்களின் உதிரம் அதிரப்போவது உறுதி.
    Ver libro
  • 250 Sathuradi Konda Arai - cover

    250 Sathuradi Konda Arai

    Ambai

    • 0
    • 0
    • 0
    மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான் வாழ முடியும் என்று நினைப்பவர்கள், இந்த நகரத்தில் உறவுகளுக்கான அர்த்தங்களைப் புரிந்துகொள்பவர்கள், இவர்களுடன் அதன் சக்கரத்தின் பற்களில் சிக்கி நசுங்கிப்போய்விடுபவர்களும் உண்டு. சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் மூலம் மும்பாய் நகரம் இயங்கும் விதங்களைக் கூறும் கதை இது.
    Ver libro
  • Engae En Kannan - cover

    Engae En Kannan

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    An atheist gets hold of a Krishna Idol that has been worshiped by an Iyengar family. Upon receiving instructions from the Iyengar, he worships the idol. What happens after this? Listen to Enge En Kannan.
    
    பல தலைமுறைகளாக ஒரு ஐயங்கார் குடும்பத்தில் ஒரு கிருஷ்ண விக்கிரகம் பூஜிக்கப்பட்டு வருகிறது. காசி யாத்திரை செல்லும் சமயம் விக்கிரகத்தையும் உடன் எடுத்து செல்கிறார் ஐயங்கார். ரயில் பயணத்தில் கிருஷ்ண விக்கிரக பெட்டி, கடவுள் இல்லை என்று சொல்லும் ஒரு நாத்திகன்  வசம் கிடைக்கிறது. அவன் நாத்திகன் ஆனால் நல்லவன். ஐயங்கார் அவனை கண்டறிந்து தன் சார்பில் அந்த விக்கிரகத்தை பூஜிக்க சொல்கிறார். அவனும் அவருக்காக பூஜிக்கிறான். அதுவரை வராத கிருஷ்ணனும் வருகிறான். அதிசயங்கள் புரிகிறான். எப்படி? பலவித திருப்பங்கள் கொண்ட பரபரப்பான கதை.
    Ver libro
  • Aayiram Arivaal Kottai - cover

    Aayiram Arivaal Kottai

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This story talks about the power of the Village God that stands surrounded by a fence made of weapons. The God is a guardian to all those who abide by the truth. What about those who lie? Listen to Aayiram Arivaal Kottai.
    
    ஒரு கிராமத்து சாமியின் சக்தியை சொல்லும் பரபரப்பான புதினம் இது. அரிவாளால் வேலி கட்டி நடுவில் நிற்கும் அந்த சாமி சத்தியமானது. சத்தியம் தவறுபவர்களுக்கோ அது எதிரானது. விறுவிறுப்பான கதை - ஆயிரம் அரிவாள் கோட்டை .
    Ver libro