¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
அந்த சந்திரனே சாட்சி! - cover

அந்த சந்திரனே சாட்சி!

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

மழை கனம் குறைந்து போய்க் கொஞ்சமாய்த் தூறிக் கொண்டிருந்தது. சாலையோரமாய்க் காரை நிறுத்தியிருந்த சுபலேகா காரின் கதவைத் திறந்து கொண்டு பெரு மூச்சோடு வெளியே வந்தாள். மணிக்கட்டை உயர்த்திப் பார்க்க ஈஷியிருந்த இருட்டில் டிஜிட்டல் கருமையாய்த் தெரிந்தது. சைடிலிருந்த பட்டனைத் தடவி அமுக்கினாள். மிக சொற்ப வெளிச்சம் டிஜிட்டல் ஸ்க்ரீனைக் கழுவிவிட -“ஊஹீம் அரைமணி நேரம் காத்திருந்தாகிவிட்டது பூச்சி பொட்டு நடமாடக் காணோம். கார் சனியன் சமயம் பார்த்து மக்கர் ஆகிக் கழுத்தறுக்கிறது.”நிமிர்ந்து பார்த்தாள். கொஞ்ச தூரத்தில் குன்னூர் வெளிச்சப் புள்ளிகளோடு தெரிந்தது. மேலே நீராவி மாதிரி பனிப்புகை.‘ஒரு கிலோ மீட்டர் இருக்குமா? பேசாமல் காரைப் பூட்டி சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு போய் விட்டாலென்ன? அப்புறமாய் சின்னசாமியை அனுப்பி காரை கொண்டு வரச் சொல்லிவிடலாமே?’நினைக்க நினைக்கவே நேற்று முன் தினம் எதற்கோ வித்யாசாகர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.‘அம்மா சுபலேகா இந்த ஸீஸன்லே காட்டு யானைங்க நடமாட்டம் ஜாஸ்தி. அவளைப் பார்க்கணும்னுட்டு சிடியை தாண்டின இடங்களுக்கெல்லாம் தனியா போயிடாதே... தெரிஞ்சுதா?”தனியாக நடந்து போகவும் தயக்கமாயிருந்தது.‘என்ன செய்யலாம்...அழுத்தமாகக் கையை பிசைந்தாள் சுபலேகா. காரின் முன் பக்கமாக வந்து பானட்டைத் திறந்தாள். சுற்றி டிரைவர் ஸீட்டுக்குப் போய் டாஷ்போர்டிலிருந்த ஸ்விட்ச் ஒன்றை அழுத்திவிட பானட்டுக்கும் வெளிச்சம் பிறந்தது.ஆயில் அடித்துக் கிடந்த எஞ்சின் மேல் மழை காரணமாக மண்ணும் அப்பிக் கிடந்தது. புரியாத ஒயர்கள் கசாமுசாவென்று பின்னிக்கொண்டு புரண்டிருக்க -‘எதற்காக பானட்டைத் திறந்தோம்?’ தன்னையே கேட்டுக்கொண்டு யோசித்தாள் சுபலேகா.பாண்ட்டிலினின்றும் தலையை எடுக்க-மறுபடியும் கவலை ஒட்டிக் கொண்டது. மெல்லமாய்த் திருப்பினபோது அந்த ஹேர்பின் வளைவுக்கு அந்தப்புறம் ர்ர்ர்ர்’ரென்ற இரைச்சலும், ஹெட்லைட் வெளிச்சமும்.பஸ்ஸா?ஆர்வமாய் எட்டிப் பார்த்தாள்.அல்ல வேன். கையை ஆட்டினாள்.இரைச்சலோடு நெருங்கின அந்த வேன் காரைக்கடக்கு போது மெல்ல ஊர்ந்து கொஞ்சம் தள்ளி நின்றது க்ளக்-கெ கதவுகள் திறந்து கொள்ள இரண்டு பேர்கள் இறங்கினார்கள்.தன்னந்தனிமை சுபலேகாவின் மனசுக்குள் ஒரு இறுக்கமான பயத்தைச் சுழற்றியது.‘கடவுளே, வருகிறவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்!’நெருங்கின அவன் கெச்சலாய்த் தெரிந்தான். தலை முடி பம்மியிருந்தது. மணிக்கட்டு வரை ஸ்வெட்டர் கனமாய் மூடியிருந்தது. இருட்டில் பற்கள் வெள்ளைக் கோடாய் தெரிய சிரித்தவன் கேட்டான்.“என்னம்மா இந்நேரத்துலே காரை இப்படி நிப்பாட்டிட்டு தன்னந்தனியா நிக்கறே?”இன்னொருத்தனும் அவனோடு வந்து இணைந்து நின்று கொண்டான். வேண்டாத சதைகளை உடம்பில் வாங்கியிருந்தான். நடு மண்டையில் முடி காணாமல் போயிருந்தது. சின்னக் கண்கள் வேகமாய் சுழன்றது. தடிமான உதட்டுக்கு மேலும் கீழும் மீசையில்லாமல், தாடியில்லாமல் வழவழா“வந்துட்டிருந்தேன். கார் பாதில ரிப்பேர் ஆயிடுச்சு” மெல்லிய குரலில் சுபலேகா சொல்ல -அவன் கேட்டான். “ரிப்பேர் கூட பார்ப்பியா?”புரியாமல் தலை உயர்த்தினாள்.“பானட்டெல்லாம் திறந்து வச்சிருக்கே?”“ரிப்பேர் பார்க்கத் தெரியாது சும்மா திறந்து பார்த்தேன்.”இரண்டு பேருமே சிரித்தார்கள். சிரித்துக்கொண்டே பிளந்து கிடந்த காரின் முன்புறத்தை நெருங்கினார்கள்
Disponible desde: 16/01/2024.
Longitud de impresión: 59 páginas.

Otros libros que te pueden interesar

  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Ver libro
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Ver libro
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Ver libro
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Ver libro
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Ver libro
  • Detective DK - Case No:04 - சாத்தான்காட்டு ரகசியம் - Where death waits! - cover

    Detective DK - Case No:04 -...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும். மர்மம், திகில், சாகசம் நிறைந்த இந்த படைப்பை தவற விடாதீர்கள்! 
    Pala nooru aandugalaga yaarum anaaga mudiyatha Saathaan Kaadu… Anga pona yellaaarum marma maathiri sethutu vandhirkanga. Aana andha kaattukulla oru periya ragasiyam amanooshyatha thaandi marandhu irukku. Nam hero DK eppadi andha marma ragasiyatha veli kondu varraan-nu kaanum idha video miss pannadheenga! Marmam, thigil, saagasam niraintha oru vera level experience. 
    An Ancient Forest. A Deadly Curse. One Man Dares to Enter. For centuries, no one has returned alive from Saathankadu – a forest whispered to be cursed. Those who entered met mysterious and violent deaths. Locals speak of ghostly shadows, whispers in the dark, and an unseen presence that guards something… ancient. But when a strange symbol connected to a powerful political figure appears in the forest's border, Detective DK and Rishi must step in not just to uncover the truth, but to survive it. What lies beyond the fear? A lost history? A hidden power? Saathankadu Ragasiyam is the fourth thrilling adventure in the Detective DK Investigations series - blending psychological horror, Tamil folklore, and raw investigation in one unforgettable tale.
    Ver libro