¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
அழகு மயில் ஆடும் - cover

அழகு மயில் ஆடும்

ரமணிசந்திரன்

Editorial: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopsis

“தொம்த தானி தார திரனா... திரனா... திரனன...” சவுக்க காலத்தில் தொடங்கி மத்திமத்தில் ஆடி கடைசியாகத் துரித காலத்தில் மின்னல் வேகத்தில் தாளம் தவறாமல் ஆடி முடித்தாள் மீரா.“பிரமாதம்!” என்று கைதட்டினான் சுந்தரேசன்.“இதே ஆட்டம். இங்கொன்றும் அங்கொன்றுமாய் நகைகள். நல்ல இங்கிலீஷ் கலர்களில் ஆடை. போதும், எல்லா வெளிநாட்டுக்காரர்களும் உன் காலடியில் தான் கிடக்கப் போகிறார்கள்” என்று கூறியவாறு ஒரு நீளமான சிகரெட்டைப் பற்ற வைத்தான் அவன்.இது ஒன்று அவனிடம் மீராவுக்குப் பிடிக்காது, ஆடும் போது நடராஜப் பெருமானை மனதில் வைத்து, மேடையைக் கோவிலாக உருவகித்து, அவருக்குச் செய்யும் பூஜையே தன் ஆட்டம் என்று எண்ணுவாள் அவள்.அங்கே வந்து சுந்தரேசன் சிகரெட்டுப் புகையை ஊதினால் அவளுக்கு வெறுப்பாகிவிடும்.இதை அவனிடம் எத்தனையோ தடவை, ஜாடைமாடையாகவும், பிறகு நேரடியாகவும் கூடச் சொல்லிப் பார்த்துவிட்டாள்.ஆனால், “இது ஒன்றை விட்டுவிடு கண்ணு. தொண்டையிலும் மூக்கிலும் அந்த நெடி இல்லையென்றால் எனக்கு யோசனையே ஓடுவதில்லை” என்று முடித்து விட்டான் அவன்அதற்குமேல் அதிகமாக அவனிடம் ஏதும் சொல்ல அவளுக்கும் மனம் வரவில்லை.எப்படிச் சொல்வது?ஒருவகையில் அவளது முன்னேற்றத்துக்காக முழுமூச்சுடன் பாடுபடுகிறவன் அவன். அவனது ‘நடராஜ தரிசனம்’ குழுவில் அவளை முக்கிய நாயகியாக்கி சிறப்பு தந்திருக்கிறவன்.அத்தோடு அவளது வாழ்விலும் பங்கேற்கப் போகிறவன். அவனிடம் அவளால் எப்படிக் கடுமையாகப் பேச முடியும்?ஆனால் கடுமையென்ன, வெள்ளமாய்ப் பெருகிய வியர்வையை ஒற்றி எடுத்தபடி பெரிய பெரிய மூச்சுகளை உள் எடுத்து வெளி விட்டுக்கொண்டிருந்த அவளுக்குச் சற்று நேரம் சும்மா கூடப் பேச முடியவில்லை.வேகமாக ஆடியதால் சிவந்திருந்த கன்னங்களையும், வியர்வையால் ஒட்டியிருந்த உடை வெளிப்படுத்திய வடிவான உடல் அமைப்பையும், வேக மூச்சுகளால் அது விம்மித்தணிந்த விதத்தையும் சற்று நேரம் வெறித்த சுந்தரேசன், “இது ஒரு மடத்தனம் இந்த நாட்டில்” என்றான் எரிச்சலோடு.‘எது?’ என்பது போல அவனை ஏறிட்டாள் மீரா.டஇதுவே மேல்நாடாக இருக்கட்டும்; இப்போது இருவரும் முத்தமிட்டுக் கொண்டு இருப்பார்கள். சேர்ந்தே வாழுவார்கள். இந்தப் பட்டிக்காட்டு பாரத நாட்டில் என்னடா என்றால் ஒழுக்கக்கேடு என்று முத்திரை குத்தி ஒரேயடியாக ஒதுக்கிவிடுவார்கள்” என்றான் வெறுப்புடன் அவன்.அவன் சொல்வது புரிந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டு பேசாதிருந்தாள் மீரா.அவன் இன்னமும் எரிச்சலுற்று, “சரி, இலைமறைகாய் போல வாழலாம் என்றால் நீ அதற்குமேல் பெரிய பட்டிக்காடு. ஸ்டார் டி.வி. தொடர்களை எல்லாம் பார்த்து என்ன பிரயோசனம்?” என்றான் மேலும்.இனி இதே குரலில் அடுக்கத் தொடங்கிவிடுவான். என்னதான் மணக்கப் போகிறவன் என்றாலும் அதற்குமுன் சேர்ந்து வாழ்வது என்றால் அவள் மனம் ஒப்புவதாக இல்லை. அதை வெளிப்படையாகச் சொல்லி இன்னமும் ‘மூடை’க் கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவளாக, “சிவதாண்டவத்தில் ஒரு சின்ன இடம் சரியாக வரவில்லை. சுந்தரேசன். அதை மட்டும் இன்னொருதரம் பயிற்சி செய்துவிடலாமா? இன்று புரோகிராமில் ஆட வேண்டுமில்லையா?” என்று பேச்சை மாற்றினாள்
Disponible desde: 03/04/2025.
Longitud de impresión: 126 páginas.

Otros libros que te pueden interesar

  • Kutumpa Vilakku - cover

    Kutumpa Vilakku

    Bharathithasan

    • 0
    • 0
    • 0
    பாரதிதாசன் குடும்ப விளக்கு 
    நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்' என்னும் கருத்தை முன்னிறுத்தி பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமது குடும்ப விளக்கு நூலினை எழுதியுள்ளார். 
    குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு எனும் நூலால் பின்னப்பட்டு, பாசவலையில் கட்டுண்டிருக்குமாறு பணித்துள்ளார். 
    குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கு தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைந்து, இல்லறம் சிறக்கிறது என்கிறார். 
    அதிகாலையில் துயில் எழுவது முதல் தனது கடமைகளைச் செவ்வனே செய்யும் ஒரு பெண்ணாகக் குடும்ப விளக்கின் தலைவியை மிளிரச் செய்துள்ளார். 
    நேர்மையாக வாணிபம் செய்து பொருள் ஈட்டுபவனாகத் தலைவன் படைக்கப்பட்டுள்ளான்.‌ 
    அன்பான பெற்றோர், அழகான குழந்தைகளுடன் சிறந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்நூல் வழியாகக் காட்டியுள்ளார். 
    பாரதிதாசனின் குடும்ப விளக்கு வழிநின்று, குடும்பங்கள் சிறப்புற அமையுமானால், இந்தச் சமுதாயம் உயர்வடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
    Ver libro
  • CN Annathurai Short Stories - cover

    CN Annathurai Short Stories

    C N Annathurai

    • 0
    • 0
    • 0
    சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை  108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாவின் சிறுகதைகள் என்ற இந்த ஒலிநூலில் 108ல் 16 கதைகளுக்கு ஒலிவடிவம் தந்திருக்கிறேன். 
    CN Annathurai has written 108 short stories over a period of time. Full of earnestness for social reform, Anna's characters cut across several sections of the society of contemporary Tamilnadu during the days of early Dravidian social activism. In this volume of Anna's Short Stories we have 16 stories. All the 108 stories have been published as audiobooks read by Dr.N.Ramani in 5 volumes. The stories in this volume are 
    19	காமக் குரங்கு	20 பிரசங்க பூஷணம் 21 மதுரைக்கு டிக்கட் இல்லை! 22	தனபால் செட்டியார் கம்பெனி	23	அன்னதானம்	24 அவள் முடிவு 25	இரு பரம்பரைகள் 26	புலிநகம்	27	சுடுமூஞ்சி	28	வேலை போச்சு	29	சொல்வதை எழுதேண்டா!	30	தேடியது வக்கீலை	31	பூபதியின் ஒரு நாள் அலுவல் 32	முகம் வெளுத்தது! 33	நான் மனிதனானேன்	34	பவழபஸ்பம்
    Ver libro
  • Thiruviruththam Thiruvasiriyam Periya Thiruvanthathi - cover

    Thiruviruththam Thiruvasiriyam...

    Nammazhvar

    • 0
    • 0
    • 0
    நம்மாழ்வார் எனப்படும் மாறன் சடகோபன் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தார். இவர் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார். 
    நம்மாழ்வார் 
    திருநெல்வேலி சீமையில் தாமிரபரணி கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் பொற்காரியார் மற்றும் சேர நாட்டு திருவெண்பரிசாரத்தை ஆண்ட மன்னனின் மகளான உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43-ஆவது நாளில் அவதரித்தார். இவர் பாண்டிய மரபினர் ஆதலால் மாறன் என்ற இயற்பெயரையும் மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியை விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் வென்றதால் "சடகோபன்" என்றும் மாறன் சடகோபன் என அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போலப் பரன் ஆகிய திருமாலைத் தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும் தலைவியாகத் தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார். 
    நூல்கள் 
    நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு: திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி திருவாய்மொழி இவை ரிக், யசுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாகப் பெரியோர்கள் சொல்வார்கள். இந்தத் திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 8 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார். 
     நம்மாழ்வார் பாடல்களை ஒலி நூலாக்கம் செய்திருக்கும் ரமணி தன் முனைவர் பட்டத்துக்கா
    Ver libro
  • Uruluva GaaliGudu Gudu Mugilu - cover

    Uruluva GaaliGudu Gudu Mugilu

    Raghvendra Patil

    • 0
    • 0
    • 0
    Short story by Raghvanedra Patil
    Ver libro
  • Manimegalai Full Story - மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் - Tamil Audio Book - cover

    Manimegalai Full Story -...

    Seethalai Saathanar

    • 0
    • 0
    • 0
    மணிமேகலைக் காப்பியம் – சங்க இலக்கிய காலத்து புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்று. சீத்தலைச் சாத்தனார் எழுதிய இக்காப்பியம் புத்த மதக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. தமிழ் பண்பாடு, மதம், வாழ்க்கை தத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் இந்த ஆடியோபுக் அனைவருக்கும் பயன்படும்.
    Ver libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver libro