Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
அழகு மயில் ஆடும் - cover

அழகு மயில் ஆடும்

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

“தொம்த தானி தார திரனா... திரனா... திரனன...” சவுக்க காலத்தில் தொடங்கி மத்திமத்தில் ஆடி கடைசியாகத் துரித காலத்தில் மின்னல் வேகத்தில் தாளம் தவறாமல் ஆடி முடித்தாள் மீரா.“பிரமாதம்!” என்று கைதட்டினான் சுந்தரேசன்.“இதே ஆட்டம். இங்கொன்றும் அங்கொன்றுமாய் நகைகள். நல்ல இங்கிலீஷ் கலர்களில் ஆடை. போதும், எல்லா வெளிநாட்டுக்காரர்களும் உன் காலடியில் தான் கிடக்கப் போகிறார்கள்” என்று கூறியவாறு ஒரு நீளமான சிகரெட்டைப் பற்ற வைத்தான் அவன்.இது ஒன்று அவனிடம் மீராவுக்குப் பிடிக்காது, ஆடும் போது நடராஜப் பெருமானை மனதில் வைத்து, மேடையைக் கோவிலாக உருவகித்து, அவருக்குச் செய்யும் பூஜையே தன் ஆட்டம் என்று எண்ணுவாள் அவள்.அங்கே வந்து சுந்தரேசன் சிகரெட்டுப் புகையை ஊதினால் அவளுக்கு வெறுப்பாகிவிடும்.இதை அவனிடம் எத்தனையோ தடவை, ஜாடைமாடையாகவும், பிறகு நேரடியாகவும் கூடச் சொல்லிப் பார்த்துவிட்டாள்.ஆனால், “இது ஒன்றை விட்டுவிடு கண்ணு. தொண்டையிலும் மூக்கிலும் அந்த நெடி இல்லையென்றால் எனக்கு யோசனையே ஓடுவதில்லை” என்று முடித்து விட்டான் அவன்அதற்குமேல் அதிகமாக அவனிடம் ஏதும் சொல்ல அவளுக்கும் மனம் வரவில்லை.எப்படிச் சொல்வது?ஒருவகையில் அவளது முன்னேற்றத்துக்காக முழுமூச்சுடன் பாடுபடுகிறவன் அவன். அவனது ‘நடராஜ தரிசனம்’ குழுவில் அவளை முக்கிய நாயகியாக்கி சிறப்பு தந்திருக்கிறவன்.அத்தோடு அவளது வாழ்விலும் பங்கேற்கப் போகிறவன். அவனிடம் அவளால் எப்படிக் கடுமையாகப் பேச முடியும்?ஆனால் கடுமையென்ன, வெள்ளமாய்ப் பெருகிய வியர்வையை ஒற்றி எடுத்தபடி பெரிய பெரிய மூச்சுகளை உள் எடுத்து வெளி விட்டுக்கொண்டிருந்த அவளுக்குச் சற்று நேரம் சும்மா கூடப் பேச முடியவில்லை.வேகமாக ஆடியதால் சிவந்திருந்த கன்னங்களையும், வியர்வையால் ஒட்டியிருந்த உடை வெளிப்படுத்திய வடிவான உடல் அமைப்பையும், வேக மூச்சுகளால் அது விம்மித்தணிந்த விதத்தையும் சற்று நேரம் வெறித்த சுந்தரேசன், “இது ஒரு மடத்தனம் இந்த நாட்டில்” என்றான் எரிச்சலோடு.‘எது?’ என்பது போல அவனை ஏறிட்டாள் மீரா.டஇதுவே மேல்நாடாக இருக்கட்டும்; இப்போது இருவரும் முத்தமிட்டுக் கொண்டு இருப்பார்கள். சேர்ந்தே வாழுவார்கள். இந்தப் பட்டிக்காட்டு பாரத நாட்டில் என்னடா என்றால் ஒழுக்கக்கேடு என்று முத்திரை குத்தி ஒரேயடியாக ஒதுக்கிவிடுவார்கள்” என்றான் வெறுப்புடன் அவன்.அவன் சொல்வது புரிந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டு பேசாதிருந்தாள் மீரா.அவன் இன்னமும் எரிச்சலுற்று, “சரி, இலைமறைகாய் போல வாழலாம் என்றால் நீ அதற்குமேல் பெரிய பட்டிக்காடு. ஸ்டார் டி.வி. தொடர்களை எல்லாம் பார்த்து என்ன பிரயோசனம்?” என்றான் மேலும்.இனி இதே குரலில் அடுக்கத் தொடங்கிவிடுவான். என்னதான் மணக்கப் போகிறவன் என்றாலும் அதற்குமுன் சேர்ந்து வாழ்வது என்றால் அவள் மனம் ஒப்புவதாக இல்லை. அதை வெளிப்படையாகச் சொல்லி இன்னமும் ‘மூடை’க் கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவளாக, “சிவதாண்டவத்தில் ஒரு சின்ன இடம் சரியாக வரவில்லை. சுந்தரேசன். அதை மட்டும் இன்னொருதரம் பயிற்சி செய்துவிடலாமா? இன்று புரோகிராமில் ஆட வேண்டுமில்லையா?” என்று பேச்சை மாற்றினாள்
Available since: 04/03/2025.
Print length: 126 pages.

Other books that might interest you

  • Mohini Koyil - cover

    Mohini Koyil

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    மாந்திரீக நாவல்களின் வரிசையில் கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றுமொரு படைப்பு மோகினி கோயில். மும்பை நகரத்திலிருந்து வெளிவரும் மலையாள மாத இதழான "சேல்ஸ் டாக்ஸ்" பத்திரிகையில் 27 மாதங்கள் "யக்ஷிக்காவு" என்ற பெயரில் வெளிவந்த நாவல்.
    
    பேய், பிசாசு, மோகினி என்றால் அனைவரும் பயப்படுவதுண்டு. இக்கதையில் சற்று நேர்மாறாக மோகினியான தேவசேனையின் உதவியுடன் கோவிந்தன் குட்டி என்னும் இளைஞன் எவ்வாறு நன்மை பெறுகிறான் என்பது பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் கூறப்பட்டுள்ளது. மாந்திரீக சக்தி தெய்வீக சக்திக்கு முன்னால் செயலற்று போகும் என்பதை பல திகிலூட்டும் சம்பவங்களுடன் விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது இக்கதை.
    Show book
  • Sutradhara - cover

    Sutradhara

    Amitabha Bagchi

    • 0
    • 0
    • 0
    Naresh Kumar, PA to Shri R.K. Asthana, IAS, is his boss' doorkeeper. There is a share for Naresh in the bounties that flow in through that door, and there has been for years. But he is a man besieged. His married daughter is having trouble conceiving, his son's call centre job might be a cover for something murkier, and his wife expects him to solve these problems. Then there is Pinki Kaur, a colleague and his friend's widow, whose presence in the office stirs responses in him that he can neither submit to nor suppress. Distracted by personal crises, he misses the signs of political trouble brewing at work, and so it is that Naresh finds himself suspended from his job. Unseated from the desk that has been the source of his power and well-being, he must still struggle to make things right for his family: Naresh is, after all, a householder.
    Show book
  • Anna Poems - cover

    Anna Poems

    C N Annathurai

    • 0
    • 0
    • 0
    அண்ணாதுரை அவர்கள் அப்படி என்ன எழுதிவிட்டார் என்று கேளுங்கள். 
    இதுதான் பதில். 
    288 கடிதங்கள் திராவிட நாடு மற்றும் காஞ்சி இதழ்களில் எழுதியவை; 1476 கட்டுரைகள் விடுதலை, திராவிட நாடு, காஞ்சி, ஹோம்ரூல் இதழ்களில்; 108 சிறுகதைகள் திராவிட நாடு, காஞ்சி இதழ்களில்; 5 நாவல்கள்; 24 குறு நாவல்கள்; 76 கவிதைகள் திராவிட நாடு, காஞ்சி, ஹோம்ரூல் இதழ்களில்; 61 நாடகங்கள் குடியரசு, திராவிட நாடு, காஞ்சி, இதழ்களில்; 26 சொற்பொழிவுகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில்; 170 மேடைப்பேச்சுகள்; 118 சட்டமன்ற உரைகள்; 24 பாராளுமன்ற உரைகள்; 26 பேட்டிகள்; 6 வானொலி உரைகள் என்றிவற்றைத் தொகுத்து டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் http://www.annavinpadaippugal.info/home.htm என்ற வலைத்தளத்தில் பதிப்பித்திருக்கிறார். 
    இவற்றில் 108 சிறுகதைகளையும் பாராளுமன்ற உரைகளையும் ரமணி ஒலிநூல்களாகத் தந்திருக்கிறார். இந்த நூலில் அவருடைய 76 கவிதைகளையும் ஒலிநூலாக்கித் தந்திருக்கிறார்.
    Show book
  • Vibarithathin Vilai Vidhya - cover

    Vibarithathin Vilai Vidhya

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    மனோகரின் இளமைக்கால காதல், தெய்வ நாயகத்துடனான தொழில் வகை மோதல், அவனது அன்பு மனைவி வித்யாவின் விபரீதமான குறும்புகள் ஆகிய சுறுக்குகள் ஒரே புள்ளியில் இறுகி மனோகரின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் மர்ம முடிச்சை எப்படி மாற்றுகிறது?
    Show book
  • திருப்புகழ் - சுவாமிமலை திருத்தணிகை - cover

    திருப்புகழ் - சுவாமிமலை திருத்தணிகை

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன. 
    ரமணியின் ஒலி நூலாக்கத்தில் மூன்றாம் தொகுதியாக 201 முதல் 308 வரையிலான 108 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் சுவாமிமலை, திருத்தணிகை, குன்றுதோறாடல், ஆறு திருப்பதி ஆகிய தலங்களில் பாடப்பட்டவை. 
     
    Show book
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை.
    Show book