¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
அக்மார்க் மர்டர் - cover

அக்மார்க் மர்டர்

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

ஃபேக்ஸ் தாளில் வரி வரியாய் ஓடியிருந்த எழுத்துக்களின் மேல் மறுபடியும் பார்வையைப் போட்டார் வர்மா.இது அவசரம் மற்றும் இரகசியச் செய்தி.சமஜ்பூர் தொகுதி எம்.பி. துளசிராம் கன்யாலால் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். ஆனால் அவருடைய உருவத் தோற்றத்தோடு வேறு ஒரு நபர் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளான். அவன் எதற்காகப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளான் என்று தெரியவில்லை. ஒருவேளை அவன் தீவிரவாதியாக இருக்கக்கூடும்... பாராளுமன்ற செக்யூரிட்டி விங்க் திறமையாகச் செயல்பட்டு அவனை மடக்க வேண்டும். விபரீதம் நிகழ்வதற்கு முன் விரைந்து செயல்படுவது அவசியம்.- டெல்லி போலீஸ்.வர்மாவின் முகத்திலும் இப்போது வியர்வை. பக்கத்தில் நின்றிருந்த மார்ஷலை ஏறிட்டார்.“பாபட்லால்...”“ஸார்...”“சமஜ்பூர் எம்.பி. துளசிராம் கன்யாலால் மாதிரி உருவத் தோற்றத்தோடு யாரோ ஒருவன் சபைக்குள்ளே போயிருப்பதாகச் செய்தி... நீங்கள் சபை வாயிலில்தானே நின்றிருந்தீர்கள்...?”“ஆமாம் ஸார்...”“பின்னே எப்படி அந்த நபர் உள்ளே போனார்...?”“ஸார்... நாங்கள் ஒவ்வொருவரையும் உன்னிப்பாய்க் கவனித்துத்தான் உள்ளே அனுப்பி வைத்தோம். எங்கள் ஸ்கேன் கண்களை ஏமாற்றிவிட்டு யாரும் உள்ளே போயிருக்க முடியாது.“அப்படியால் ஃபேக்ஸ் செய்தி பொய் என்று சொல்ல வருகிறீர்களா...?”“டெல்லி போலீஸ் கொடுத்திருக்கும் - ஃபேக்ஸ் செய்தி பொய்யாய் இருக்க முடியாது. ஸார். ஏதோ ஒரு குளறுபடி நடந்துள்ளது. அது என்ன என்பதை இப்போது கண்டுபிடித்து விடலாம். கம்ப்யூட்டர் அறைக்குப் போய் அந்த பர் துளசிராம் கன்யாலாலை ஸ்க்ரீன்னில் மானிடர் செய்து பார்க்கலாம். ஐடென்டிஃபிகேசன் ஃபிளாப்பியை கம்ப்யூட்டருக்குக் கொடுத்தால் அதுவே சபைக்குள் இருப்பது சமஜ்பூர் தொகுதி எம்.பி. துள்சிராம் கன்யாலாலா இல்லையா என்பதைச் சொல்லிவிடும்...”“சபாநாயகர் உள்ளே போய் விட்டார். சபை இன்னமும் ஐந்து நிமிஷங்களில் ஆரம்பமாகிவிடும்.”“சபை நடந்து கொண்டு இருக்கட்டும் ஸார். நாம் அந்த நபரின் நடவடிக்கையைக் கம்ப்யூட்டரில் மானிட்டர் செய்து பார்ப்போம்...”செக்யூரிட்டி விங் சீஃப் ஆபீஸர் தேசாயும் மார்ஷல் பாபட்லாலின் பேச்சை ஆமோதிக்க, மூன்று பேரும் கம்ப்யூட்டர் அறைக்குப் போனார்கள்.சில நிமிஷ நடை.கம்ப்யூட்டர் செஷன் வந்தது.‘அந்நிய நபர்களுக்கு அனுமதியில்லை’ என்ற வாசகம் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் தெரிய, கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனார்கள். அந்தப் பெரிய அறையின் மூன்று பக்க சுவர் ஓரமாய் ஃபைபர் மேஜைகள் தெரிய, அதன் மேல் பெண்டியம் கம்ப்யூட்டர்கள் வரிசையாய் உட்கார்ந்து அதன் மானிட்டர்’ திரைகளில் பாராளுமன்ற நிகழ்ச்சிகளை வெவ்வேறு கோணங்களில் காட்டிக் கொண்டிருந்தன.கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிரமோத் குழப்பமாய் அவர்களைப் பார்க்க, தேசாய். சொன்னார்.“மிஸ்டர் பிரமோத்...! சமஜ்பூர் எம்.பி. துள்சிராம் கன்யாலாலை மானிட்டர் ஸ்க்ரீனில் க்ளோஸப்புக்கு கொண்டு வாருங்கள்...”“ஏன் ஸார்... ஏதாவது பிரச்சனையா...? நீங்கள் மூன்று பேருமே இவ்வளவு பதட்டமாய் இருந்து நான் பார்த்தது இல்லை...”தேசாய் சொன்னார்... “பெரிய பிரச்சனைதான்! சமஸ்பூர் எம்.பி. துள்சிராம் கன்யாலால் வீட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல். ஆனால் பாராளுமன்ற சபைக்குள்ளே துள்சிராம் கன்யாலால் மாதிரியான உருவத் தோற்றத்தோடு யாரோ போயிருக்கிறார்கள். அது யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மானிட்டர் திரைக்கு துள்சிராம் கன்யாலால் முகத்தை க்ளோசப்புக்குக் கொண்டு வாருங்கள் மிஸ்டர் பிரமோத்...”பிரமோத்தும் பதட்டமாகி கம்ப்யூட்டருக்கு முன்பாகப் போய் உட்கார்ந்தார். கம்ப்யூட்டரின் ஜூம் பட்டனைத் தட்ட சபையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ காமிராவின் கோணம் மாறி, எம்.பி.க்கள் முகங்களைப் பெரிது பெரிதாய்க் காட்ட ஆரம்பித்தது.சமஜ்பூர் எம்.பி.யின் இருக்கை எண் எதுவென்று கம்ப்யூட்டரிடம் பிரமோத் கேட்க, இருக்கை எண் 267 என்று. மானிட்டரின் மையத்தில் உற்பத்தியாகி, பின் காமிராவின் கோணம் நகர்ந்து 267 எண்ணை நோக்கி மெதுவாய் நகர்ந்தது
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 87 páginas.

Otros libros que te pueden interesar

  • Poovadi Sethil - cover

    Poovadi Sethil

    Ambai

    • 0
    • 0
    • 0
    மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான் வாழ முடியும் என்று நினைப்பவர்கள், இந்த நகரத்தில் உறவுகளுக்கான அர்த்தங்களைப் புரிந்துகொள்பவர்கள், இவர்களுடன் அதன் சக்கரத்தின் பற்களில் சிக்கி நசுங்கிப்போய்விடுபவர்களும் உண்டு. சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் மூலம் மும்பாய் நகரம் இயங்கும் விதங்களைக் கூறும் கதை இது.
    Ver libro
  • Sorna Regai - cover

    Sorna Regai

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    Palmistry is an ancient art! The lines on the palm have the power to decide the fate! A prisoner with death sentence doesn't have the palm lines that hint his end, however the jailer's palm lines reveal that he will die on the date of the prisoner's death sentence? Listen to the intriguing story - Sorna Regai.
    
    ஆயகலைகள் 64. இதில் கைரேகை சாஸ்திரமும் ஒன்று. இந்த கைரேகைகள் என்பது அவரவர் தலையெழுத்தை தெரிவிக்கும் கோட்டு மொழியாகும். தூக்கு தண்டனை கைதி ஒருவனின் கைரேகையில் அவன் மரணம் குறித்த செய்தி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை. ஆனால் ஜெயிலர் கையில் அவர் மரணம் அதே தூக்கு நாளன்று தான். எப்படி ? மிகமிக பரபரப்பான ஒரு ஆய்வு பூர்வமான நாவல்.
    Ver libro
  • Maaya Vizhigal - cover

    Maaya Vizhigal

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    The Eyes are the window to your soul! They reveal everything. Some eyes are attractive but some are downright hypnotizing. This story is about a person who has such a pair of eyes on his eyes and his actions.
    
    ஒருவரின் முகத்தில் கண்களே பிரதானம். அது சகலத்தையும் கூறிவிடும். சில கண்கள் வசீகரிக்கும். சில மயக்கி சாய்த்துவிடும். அப்படி ஒரு கண்களை கொண்ட ஒரு பாத்திரத்தின் சாகசங்களை கொண்டதே இந்த புதினம்.
    Ver libro
  • Kodu Thaandadhe - cover

    Kodu Thaandadhe

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    There is a limit to all the atrocities that happen in this society. However, 90% of us ignore the unjust incidents around us. The rest 10% alone raise their voice against injustice. This story is about 4 such people who raise their voice. What do they do? Listen to Kodu Thaandathe.
    
    எந்த ஒரு அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் எல்லை உண்டு. இந்த சமுதாயத்தில் நடக்கும் சில அநீதிகளை நாம் கண்டும் காணாமலும் கடந்து போய்க்கொண்டு இருக்கிறோம். நம்மில் 90% பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். வெகு அரிதாக உள்ள 10% பேர் மட்டுமே துணிச்சலோடு முன்வந்து குரல் கொடுக்கிறார்கள். அந்த 10% பேரில் உள்ள ஒரு நான்கு பேரின் கதைதான் இந்த கோடு தாண்டாதே. நம் தமிழ்நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு ஒரு எல்லைக்கோட்டை அந்த நான்கு பேரும் வரைந்து எச்சரிக்கை விடுகிறார்கள். இந்த நால்வர் என்ன செய்கிறார்கள்? அறிய கேளுங்கள் கோடு தாண்டாதே
    Ver libro
  • Vivekum 41 Nimishangalum - cover

    Vivekum 41 Nimishangalum

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    Police, judges and other law enforcing officials are cornered to release a convict who is in prison for a heinous crime committed. Crime Branch Officer Vivek comes up with a solution to this unique situation in just 41 minutes. Listen to Vivekum 41 nimishangalum to know the story.
    
    காவல்துறை அதிகாரிகளும், நீதியரசர்களும் நியாயத்திற்கு புறம்பாக நடக்க மிரட்டப்படுகிறார்கள். மரண தண்டனை விதிக்கப்படும் நிலையில் உள்ள ஒரு கொடூரமான குற்றவாளியை விடுதலை செய்யும்படியும், அப்படி செய்யப்படாவிட்டால் அந்த நீதிபதி உயிரிழக்க நேரிடும் என்றும் ஒர் உயர் போலீஸ் அதிகாரியே சொல்ல வேண்டிய நிலைமை. அரசு அதிகாரிகள் இப்படிப்பட்ட ஒர் ஆபத்தான சூழலில் இருக்கும் போது க்ரைம் ப்ராஞ்சை சேர்ந்த அதிகாரி விவேக் 41 நிமிஷத்தில் ஓர் அதிரடி திட்டம் போட்டு மிரட்டல் பேர்வழிகள் யார் என்பதை தனக்கே உரிய சாதுர்யமான முறையில் கண்டு பிடித்து பெரிய அதிகாரிகளின் பாராட்டைப் பெறுகிறார்.
    Ver libro
  • Irumbu Pattampoochigal - cover

    Irumbu Pattampoochigal

    Rajesh Kumar

    • 0
    • 0
    • 0
    இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் பொறுப்பு ஆண்களுக்கு மட்டும் இல்லை, பெண்களுக்கும் உண்டு என்று சொல்ல வருகிற கதையம்சம் கொண்ட நாவல் இது. பெண்கள் உடலளவில் மென்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் பெண்களில் பலர் உள்ளத்தளவில் வலிமை வாய்ந்தவர்கள். அப்படிப்பட்ட பெண்களுக்குப் பெயர் இரும்புப் பட்டாம்பூச்சிகள். அந்த இரும்புப் பட்டாம்பூச்சிகளில் ஒருத்திதான் இந்த நாவலின் நாயகி. அவள் செய்த சாகசம்தான் என்ன? காது கொடுத்து கேளுங்கள்.
    Ver libro