பட்டினத்தாரின் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும்
பட்டினத்தார், பத்திரகிரியார்
Narrador Ramani
Editora: Ramani Audio Books
Sinopse
பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர். பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும். அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார். பதிணென் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவருடைய பாடல்கள் மெய்ஞ்ஞானப் புலம்பல் என்று மிகவும் புகழ் பெற்றவை. மிக எளிய வார்த்தகளையும் ஆழமான பொருளும் கொண்டிருக்கும் பாடல்கள் அவை. இந்த ஒலிநூலில் சந்த ஓசையில் ரமணி படைத்திருக்கும் நூல்கள், அருட்புலம்பல், இறந்தகாலத்திரங்கல், நெஞ்சொடு புலம்பல், பூரணமாலை, நெஞ்சொடு மகிழ்தல், கோயிற்றிருவகவல், தாயார் தகனக்கிரியை, திருத்தில்லை, முதல்வன் முறையீடு, மற்றும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்
Duração: aproximadamente 3 horas (03:10:00) Data de publicação: 23/08/2024; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

