Sirupanjamoolam Innilai Muthumozhikkanji
Post Sangam Poets
Narrador Ramani
Editora: RamaniAudioBooks
Sinopse
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் ஆவார். இன்னிலை என்னும் பெயரில் பழம்பாடல்கள் சிலவற்றின் தொகுப்பாக ஒரு நூல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்துக்காட்டும் பாடலில் ‘இன்னிலைய காஞ்சி’ என்னும் தொடர் வருகிறது. கைந்நிலை என்னும் நூல் காணப்படாத காலத்தில் 18 என்னும் எண்ணிக்கையைச் சமன்செய்ய இந்த நூல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழிஎன்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. நிலையாமையை உணர்த்தும் உலகியல் அனுபவம் உணர்த்துதலால் இப்பெயர் பெற்றது. காஞ்சி என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியம் காட்டும் ஒரு துறை. அது “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முறைமை” என்னும் துறை என்று விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டது இந்த நூல். அதாவது 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் தரவு அடியோட
Duração: aproximadamente 1 hora (00:47:46) Data de publicação: 15/03/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

