Ainthinai Thinaimalai Thinaimozhi
Post Sangam Poets
Narrador Ramani
Editora: RamaniAudioBooks
Sinopse
ஐந்திணை ஐம்பது இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. பாயிரச் செய்யுள் ஒன்று நூலின் இறுதியில் அமைக்கப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார். இப் பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாயும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாயும் உள்ளன. எனவே, இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புடையவராய், இவர்களுக்கு நட்பினராய் இருத்தல் கூடும். பொறையனார் என்பது இவரது இயற்பெயர் என்றும், மாறன் என்பது இவர் தந்தையார் பெயர் என்றும் கொள்ள இடமுண்டு. ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது. அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. அகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களைப் போலவே, இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகளினதும், பண்பாட்டினதும் பின்னணியிலும், அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்குப் பொருத்தமான நிலத்திணைகளின் பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது. திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இஃது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. திணைமொழி ஐம்பது என்பது கண்ணன் சேந்தனார்
Duração: aproximadamente 2 horas (01:36:41) Data de publicação: 15/03/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

