¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
100 ஒன் லைன் கதைகள் - 100 One Line Stories - cover

100 ஒன் லைன் கதைகள் - 100 One Line Stories

பிரையன் சீமோஸ்

Editorial: Independant Writer

  • 0
  • 0
  • 0

Sinopsis

இப் படைப்பு பற்றி...
 
 
 
காதலாடுதல், மாப்ள பெஞ்ச் வரிசையில் கோலிவுட் கதை சொல்லி’யின்       “100 ஒன் லைன் கதைகள்” என்கிற மூன்றாவது புத்தகம்.
 
வெளிவந்த படங்களின் ஒன் லைன் கதைகள் அல்ல. ஹாலிவுட்டில் படத்தின் ஒன் லைன் கதையை சுமார் 30 முதல் 50 வார்த்தைகளில் சுருக்கி சொல்வது தான் லாக் லைன் (log line). அதுவே நம் திரையுலகில் அதை ஒன் லைனர் (one liner) என்பார்கள்.
 
எனது இந்த ஒன்லைன் கதைகள் விஷுவல் மீடியா படைப்புகளான சினிமா, குறு்ம்படம், தொலைக்காட்சி தொடர் மற்றும் சிறுகதை, நாவல், திரைக்கதை போன்ற படைப்புகளுக்கு தேவையான கருப் பொருள் தான் இந்த ஒன் லைன் மூலக் கதை.
 
படைப்புக்கான புத்தம் புது கருவே இதன் உரு. இந்த மூலக்கதை அவரவர் பாணியில், கற்பனைத் திறனோடு எழுத்து அல்லது காட்சி ஊடகங்களுக்கான படைப்பாக்க­வும் உதவும்.
 
- சுவெகி –
Disponible desde: 25/12/2021.
Longitud de impresión: 100 páginas.

Otros libros que te pueden interesar

  • 1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam - 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம் - cover

    1975 - Emergency - Nerukkadi...

    R. Radhakrishnan

    • 0
    • 0
    • 0
    இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 48 ஆண்டுகளாகிவிட்டன. இன்று ஜனநாயகம், சர்வாதிகாரம், பாசிசம் போன்ற சொற்கள் அர்த்தம் புரியாமலேயே அன்றாடம் புழங்கும் சொற்களாகிவிட்டன. ஆனால் இம்மூன்றின் உண்மையான பரிமாணத்தையும் ஒரே சமயத்தில் மக்கள் உணர்ந்த தருணம் அது. நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்னும் அதுபோன்ற நாள் வந்ததில்லை. அதற்குப் பின்னும் வரவில்லை. வரப்போவதுமில்லை. இந்திராகாந்தியின் எழுச்சி, வீழ்ச்சி, மீண்டும் அவரது எழுச்சி என்ற மூன்று பிரிவுகளில் நெருக்கடி நிலை அடங்குகிறது. எதனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது, அதனை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது, நெருக்கடி நிலையின் தாக்கங்கள் என்ன, அதனால் நாட்டின் அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன, அதன் எதிர்விளைவுகள் என்ன என இவை அனைத்தையும் விரிவான கண்ணோட்டத்தில் இப்புத்தகம் அலசுகிறது. நெருக்கடி நிலைக் காலத்தை ‘அரசுக் கொடுங்கோன்மை’ என்று விமர்சனம் செய்தவர்களும் உண்டு. ‘தறிகெட்ட சுதந்திரத்திற்குப் போடப்பட்ட கடிவாளம்’ என்று சொன்னவர்களும் உண்டு. எமர்ஜென்ஸியை முழுமையாக ஆதரிக்கவும் செய்யாமல், கண்மூடித்தனமாக எதிர்க்கவும் செய்யாமல், எந்தச் சூழ்நிலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது, அதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் யாவை, நெருக்கடி நிலையை அறிவித்தவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் என்ன செய்தனர் என வரலாற்றை உள்ளது உள்ளபடி திரும்பிப் பார்க்கும் முயற்சியே இது. 
    எழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver libro
  • UVeSaminathayyarin Vaazkkai Varalaau - உவேசாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு - cover

    UVeSaminathayyarin Vaazkkai...

    Saidhai Murali

    • 0
    • 0
    • 0
    நம் தமிழுக்குத் தொண்டாற்றியோர் பலர். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய முக்கியமான மனிதர் ‘தமிழ்த் தாத்தா’ என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர். 
    தமிழ் மொழியின் சொத்துகளான பல அரிய காப்பியங்களும் புராணங்களும் ஓலைச்சுவடிகளாகப் பல இடங்களில் முறையாகத் தொகுக்கப்படாமல் சிதறிக்கிடந்தன. அவற்றையெல்லாம், தமிழ் மேல் உள்ள ஆர்வத்தினாலும், நமது இலக்கியங்கள் பரவலாக மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தினாலும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஆராய்ந்து, தொகுத்து புத்தகமாகப் பதிப்பித்தார் உ.வே.சா. இவரது தன்னலமில்லாக் கடின உழைப்பினால்தான் பல காப்பியங்கள், பல அரிய நூல்கள் இன்று நம்மிடையே உள்ளன. இல்லையென்றால் இவையெல்லாம் என்றோ அழிந்து போயிருக்கும். 
    ஒவ்வொரு தமிழனும் மறக்கக் கூடாத மனிதர் உ.வே.சா. அப்படிப்பட்ட பேரறிஞரின் வாழ்க்கையையும், அவரது வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களையும், தமிழ்ச் சேவைக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நேர்த்தியாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். 
    எழுத்தாளர் சைதை முரளி எழுதி சுவாசம் பதிப்பகம்  வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். 
    Ver libro
  • Lal Bahadur Shasthriyin Marma Maranam - லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் - cover

    Lal Bahadur Shasthriyin Marma...

    Sakthivel Rajkumar

    • 0
    • 0
    • 0
    Author Sakthivel Rajkumar Audiobook produced by Aurality / itsdiff Entertainment eBook / book by Swasam 
    Lal Bahadur Shasthriyin Marma Maranam 
    இந்தியாவின் பிரதமர் ஒருவர் வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணமடைகிறார். அவர் கொல்லப்பட்டார் என்ற பலமான சந்தேகம் எழுகிறது. ஆனால் இன்று வரை உண்மை என்ன என்பது வெளியாகவில்லை. இந்தியா அல்லாமல் வேறொரு நாட்டின் பிரதமர் இப்படி வெளிநாட்டில் கொல்லப்பட்டிருந்தால் அந்த நாடு என்னவெல்லாம் செய்திருக்கும்? ஆனால் ஏன் அன்றைய இந்திய அரசு இது குறித்து அக்கறை எடுக்கவில்லை? இந்த அலட்சியத்துக்குப் பின்னால் இருப்பது என்ன? இது வெறும் அலட்சியம் மட்டும்தானா அல்லது வேறேதும் உள்நோக்கம் உண்டா? சாஸ்திரியின் கட்சியான காங்கிரஸின் மௌனத்துக்கு என்ன காரணம்? தன் கட்சியின் பிரதமர் இப்படி மர்மமான முறையில் இறந்திருக்கும்போது அதை இந்திரா காந்தி எப்படிக் கையாண்டார்? இவை அனைத்தையும் அலசுகிறது இந்த நூல். லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தின்போது இந்தியாவில் நிலவிய அரசியல் சூழலையும், யாரெல்லாம் அந்த மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்கிற அன்றைய யூகங்களையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்போது நடந்தது என்ன என்பதைப் பல ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர் சக்திவேல் ராஜகுமார்.
    Ver libro
  • RajaRaja Chozhan - ராஜராஜ சோழன் - cover

    RajaRaja Chozhan - ராஜராஜ சோழன்

    Sridhar Trichendurai

    • 0
    • 0
    • 0
    RajaRaja Chozhan - a proud tamil audio book production by aurality/ itsdiff entertainment 
    Original by Raghavan Srinivasan ராகவன் சீனிவாசன் (Author), Sridhar Trichendurai ஸ்ரீதர் திருச்செந்துறை (Translator) 
    by Swasam Publications தமிழக வரலாற்றில் மட்டுமின்றி தென்னிந்திய வரலாற்றிலும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் 'பொற்காலம்' என்றே கருதப்படுகிறது. ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்ததும், தமிழர்களின் நூற்றாண்டுப் பெருமிதத்தையும் கலையையும் மீட்டெடுத்தார். என்றென்றும் அழிக்க இயலாத ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார். இன்றளவும் நாம் ராஜராஜ சோழனின் புகழைப் பேசுகிறோம் என்பதிலிருந்தே இவரது ஆட்சிச் சிறப்பைப் புரிந்துகொள்ளலாம். ராணுவம், கலைகள், மதம், இலக்கியம் என அனைத்துத் துறைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கின. ஈழத்தின் மேல் படையெடுத்து அதையும் வென்றவர் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனின் வரலாற்றையும், சோழர்களின் சாதனைகளையும் ஆதாரபூர்வமாகவும் எளிமையாகவும் விரிவாகவும் சொல்லும் நூல் இது. எழுத்தாளர் ராகவன் சீனிவாசன் எழுதி ஸ்ரீதர் திருச்செந்துறை மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். 
    a proud tamil audiobook production from Aurality/ itsdiff Entertainment
    Ver libro
  • Novel vadivil Manimekalai - நாவல் வடிவில் மணிமேகலை - cover

    Novel vadivil Manimekalai -...

    Sathiyapriyan

    • 0
    • 0
    • 0
    சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிக முக்கியமானவை. காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை போல அலசும் பிறிதொரு நூல் இல்லை என்றே சொல்லிவிடலாம். மணிமேகலை நூலில் உள்ள அனைத்து ரசங்களையும் உள்ளடக்கி நாவல் வடிவில் எழுதுவது என்பது பெரிய சவால். அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் சத்தியப்பிரியன். தமிழில் ‘மணிமேகலை’க்கு இத்தனை விரிவான ஆழமான அதேசமயம் எளிதான உரை நாவல் வடிவில் வந்ததில்லை எனலாம். ‘மணிமேகலை’யில் வரும் தத்துவப் போக்குகளைக் கூட எல்லாரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நூலாசிரியர் எழுதியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர் குறிப்பாகச் சொல்லப்படும் கூற்றுகள், மணிமேகலை என்னும் நூலையும் தாண்டி, நம் பண்பாட்டின் பல கண்ணிகளைத் தொட்டுச் செல்கின்றன. இது இந்த நூலை மேலும் முக்கியமானதாக்குகிறது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.  
    A proud Aurality production
    Ver libro
  • Iravaan - cover

    Iravaan

    Pa Raghavan

    • 0
    • 0
    • 0
    "இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை.
    நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம். அவன் வாழ்க்கை பிரபஞ்ச விதி எதற்குள்ளும் பொருந்தாமல் புடைத்து நிற்கிறது. அதனாலேயே அது வண்ணங்களோ வாசனையோ இல்லாத ஒன்றாகிறது. காலத்தை வெல்வதற்கு அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் புவி நின்று சுழல்கிறது. அவன் நம்பும் கலையும் அவன் வாழும் உலகும் தயங்காமல் அவனைக் கைவிடும் போதும், அவன் தான் வாழும் உலகுக்குத் தன் இசையையும், தான் நம்பும் இசைக்குத் தன்னையும் ஆகுதியாக்கி அர்ப்பணிக்கிறான். ஒரு மகா கலைஞனின் வாழ்க்கை இவ்வாறாக அல்லாமல் வேறு எந்த விதமாகவும் உருக்கொள்ள முடியாது.
    பா. ராகவனின் 'இறவான்', மிக நுணுக்கமான, கூரான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை, அவனது புற உலகச் செயல்பாடுகளினூடாக, அது நிகழும் கணத்திலேயே காட்சிப்படுத்த இதில் கையாளப்பட்டிருக்கும் எழுத்து முறை தமிழுக்குப் புதிது."
    Ver libro