Annamar Kathai
Pichai Pattan
Narrador Ramani
Editorial: RamaniAudioBooks
Sinopsis
அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை அல்லது குன்றுடையான் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். இக்கதை உடுக்கையடி பாடலாகவும், வேடம் தரித்து நடித்தும் பாடப்படுகிறது. கிராமப்புறங்களில் இன்றும் இக்கதை கூத்து வடிவில் நிகழ்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதியைச் சார்ந்த வேட்டுவக்கவுண்டர் சமூக மக்களைத் தவிர, அனைவரும் வணங்கும் தெய்வமாக அண்ணன்மார்சாமி உள்ளது. இதில் அதிகமாக அண்ணன்மார்சாமியை வணங்குபவர்கள் கொங்குவேளாளக் கவுண்டர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆகும். அண்ணன்மார் சாமியின் கதையை முதலில் கள்ளழகர் அம்மானை என்பவரும் அவரைத் தழுவி பிச்சன் என்பவரும் எழுதியிருக்கிறார்கள். கொங்குப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் முக்கியமான கதைப்பாடல் ‘குன்னடையான் கதை’ என்றும் ‘அண்ணன்மார் கதை’ என்றும் அழைக்கப்படும் கதைப்பாடலாகும். இக்கதையின் பல்வேறு கூறுகள் நாட்டார் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன. கொங்கு வேளாளர் தலைவர்களாக விளங்கிய பொன்னர், சங்கர் என்னும் இரு சகோதரர்களின் வரலாற்றைக் கூறும் வீரப்பாடல் இது. இவர்களுக்கு அருக்காணித் தங்கம் என்னும் தங்கை ஒருத்தி, கதையின் முக்கிய பகுதி இந்தத் தங்கையின் நோக்கிலிருந்தே நகர்கின்றது. கதையின் இறுதிக் கட்டமான படுகளம் அருக்காணித் தங்கத்தை மையமாகக் கொண்டது. கதைத் தலைவர்களாகிய பொன்னர், சங்கர் இருவரும் அண்ணன்மார் என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான். தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணித் தங்கம் அழைக் கிறாள். இக்கதையை மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்று குறிப்பிடு
Duración: alrededor de 14 horas (14:22:11) Fecha de publicación: 22/03/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

