Thiruvilaiyatarpuranam Mathuraikantam
Paranjothimunivar
Narrador Ramani
Editora: RamaniAudioBooks
Sinopse
திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமானது திருவிளையாடல்களைக் கூறும் பரஞ்சோதி முனிவர் எழுதிய நூல் ஆகும். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காடு (வேதாரணியம்) எனும் ஊரில் பிறந்தவர். மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். மதுரை மீனாட்சியம்மை பராசக்தி பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றிச் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பாடும் படி கூறியமையால் இந்நூலைப் பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. ஹாலாஸ்ய மகாத்மியத்தைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344-ஆவது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் தொடங்குகிறது. திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க் காண்டம் - 16 படலங்கள் முதல் பகுதியான மதுரைக் காண்டம் இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை 18 படலங்களைக் கொண்டுள்ளது. அடுத்த கூடற் காண்டம் நான்மாடக் கூடலான படலம் முதல் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் வரையான 30 படலங்களையும், மூன்றாவது பகுதியான திருவாலவாய்க் காண்டம் திருவாலவாயான படலம் ம
Duração: aproximadamente 7 horas (06:41:59) Data de publicação: 27/03/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

