Pak Oru Puthirin Saridham
Pa Raghavan
Narrador M Arunachalam
Editorial: Storyside IN
Sinopsis
பாகிஸ்தான் அரசியலைக் குறித்துப் பேசும் தமிழின் முதல் நூல் இதுதான் காஷ்மீரில் நடப்பது சுதந்தரப் போராட்டம் என்று திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துச் சொல்லிக்கொண்டிருப்பதன் மூலம், இரு தேசங்களுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துக்கொண்டே போவதுதான் பாகிஸ்தானின் நிரந்தர அரசியல். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அது இந்தியாவின் பிற மாநிலங்களைப் போன்ற ஒரு பிராந்தியமாகிவிட்டாலுமே பாகிஸ்தான் தனது நிலைபாட்டை இதில் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் காஷ்மீரை விலக்கிவிட்டு பாகிஸ்தானில் அரசியல் செய்யவே முடியாது. முகம்மது அலி ஜின்னா தொடங்கி பேனசிர் புட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி பதவிக்கு வந்த காலம் வரையிலான (2008) பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள், புள்ளி விவரங்கள், காஷ்மீர் பிரச்னை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது. பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாத பாகிஸ்தானின் இந்த அரசியல் வரலாறு, குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது. டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், மாயவலை போன்ற பா. ராகவனின் பிற்கால அரசியல் வரலாற்று நூல்கள் அனைத்துக்கும் தொடக்கம் இதுவே.
Duración: alrededor de 4 horas (03:50:53) Fecha de publicación: 30/09/2022; Unabridged; Copyright Year: 2022. Copyright Statment: —

