விருத்தம் - வேல் விருத்தம் மயில் விருத்தம் சேவல் விருத்தம்
நிலோபர் அன்பரசு
Narrador Ramani
Editorial: Ramani Audio Books
Sinopsis
வேல் விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் அருணகிரிநாதர் வேல் விருத்தம் என்னும் பெயரில் 10 சந்தப்பாடல்கள் கொண்ட நூல் ஒன்றைச் செய்துள்ளார். முருகப் பெருமானின் வேல் இதில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. கடலின் மத்தியில் மாமரமாய் நின்ற சூரபத்மாவின் மேல் வேலை எறிந்த போது வேலின் வெப்பத்தை தாங்க முடியாமல் கடல் நீர் ஆவியாகி அடியில் சேறு மட்டும் இருந்தது. வேலாயுதத்தின் வேகத்தில் மேகங்களின் உட்பகுதி சுழற்சி அடைந்து மழை பெய்கிறது. தன் அடியார்களின் குறைகளை தீர்ப்பதற்காக விநாயகப் பெருமானுக்கு தழைத்த பெரிய செவிகள் உள்ளன. அடியார்களின் பகையை ஓட்டுவற்காக அவருக்கு நெற்றியில் மூன்றாவது கண் போன்ற செய்திகள் இதில் காணப்படுகின்றன. மயில் விருத்தம் என்னும் நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது. சந்தப்பாக்களால் ஆன நூல். இந்த நூலில் விநாயகர் காப்புச் செய்யுளையும் சேர்த்து 11 பாடல்கள் உள்ளன. முருகப் பெருமானின் மயில் ஊர்தி இந்த நூலில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொல்லாமல் தன்னுடைய அருளுக்குப் பாத்திரமாக தனது வாகனமாகக்கொண்டது அவரது தனிப் பெருங் கருணையே. சரவணப் பொய்கையில் ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகள் வடிவம் எடுத்து தாமரை மலரில் பள்ளி கொண்டதை ராஜீவ பரியங்க என அழகுபட கூறுவார் அருணகிரியார். 'பரியங்க' என்ற சொல்லுக்கு 'கட்டில்' என்பது பொருள். சேவல் விருத்தம் சந்தப்பாக்களால் ஆன நூல். இந்த நூலில் விநாயகர் காப்புச் செய்யுளையும் சேர்த்து 11 பாடல்கள் உள்ளன. சைவ சித்தாந்தத்தில் உள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று, 'ஒரு ஜீவன் இரு வினைகளினால் அடிபட்டு அடிபட்டு பக்குவப்படும் சமயம், பராசக்தி அந்த ஜீவனின் இருவினைகளையும் சமன்படுத்தி, மும்மலங்களையும் ஒழித்து, முக்தி நிலைக்கு சேர்ப்பிப்பாள்'. இந்த அரும் பெரும் தொழிலை குமரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலும் செய்து கொடுக்கும் என்பதை அருணகிரியார் குறிப்பிடுகிறார். ரமணியின் நேர்த்தியான சந்த ஓசையில் இந்த மூன்று விருத்தங்களையும் கேட்கலாம்.
Duración: 43 minutos (00:43:17) Fecha de publicación: 19/09/2023; Unabridged; Copyright Year: — Copyright Statment: —

